நினைவுகள்
எனை விட்டு பிரிகையில்
உன் நினைவுகளை
மட்டும் என்னுள் விட்டு
சென்றது ஏனடி.....!
என் ஒவ்வொரு அசைவிலும்
அதுவும் அசைகையில்
அளவிலாஅது தரும்
இம்சைகள் அதிகம்...!
சிந்தை இழந்த சிலையாக
கனநேரம் ஆங்கு
ஆங்கே நில்லையில் எனை
அறியா விழி
வழியும் கண்ணீர் காண்போர்
அறியார் அது
என்னுள் இருக்கும் வலி
அமிலமாக எனை
அரித்து திண்பதன் விளைவால்
தான் நிகழ்கின்றன என்பது...!