காதல்
அழகு ரோசா
பரித்திட வேண்டுமென்று
பெரும் ஆவல்
மோகமுள் தைத்திட
காமம் தலைக்கேறியது
மொய்க்கும் வண்டு நான்,
பூவை அடைந்தேன்
இதழ்களில் முக்கி
மூழ்கி எழுந்தேன்,
என் வாயெல்லாம்
மதுவின் இனிமை ,
இப்போது காமத்தீ
அணைந்திட, அன்பு அணைக்க,
காமம் காதல் ஆனது
வண்டு நான் சரண் அடைந்தேன்.
என் அழகு ரோசாவிடம்,
காதல் பல்லவி பாடி.