சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 49 - மேநு ஜூசி மோஸபோ கவே – ஸரஸாங்கி
பொருளுரை:
மனமே! பெண்களின் மேனியழகைக் கண்டு மோசம் போகாதே! உள்ளிருக்கும் மர்மம் இதுதானென்று நமக்குத் தெரிந்ததே! ஈனமான மலம் முதலியன நிரம்பிய மாயாமயமானது அவ்வெளியழகு.
அவர்கள் கண்வீச்செனும் அம்புகளை எய்து, கொங்கைகளின் பகட்டின் உதவியால் (காமாதுரருக்கு இன்பம் பயக்கும்) பல லீலைகள் புரிவர். அதைக் கண்டு மோசம் போகாமல், நீ பஜனை மார்க்கத்தைப் பின்பற்றிக் கடைத்தேறு.
பாடல்:
பல்லவி:
மேநு ஜூசி மோஸபோ கவே மநஸா
லோநி ஜாட லீலாகு கா தா (மேநு)
அநுபல்லவி:
ஹீநமைந மலமூத்ர ரக்தமுல
கில நெஞ்சு மாயாமயமைந சாந (மேநு)
சரணம்:
கநுலநேடி யம்பகோல சேத கு ச்சி
சநுலநேடி கி ருல சிரமு நுஞ்சி
பநுல சேதுரட த்யாக ராஜநுதுநி
பா க நீவு ப ஜந ஜேஸிகொம்மி ஸத்ரீல (மேநு)
யு ட்யூபில் Thyagaraja Kriti-menujUchi--sarasAngi—Adi என்று பதிந்து திரு.சீதாராமன் பாடுவதைக் கேட்கலாம்.
பொதிகை தொலைக் காட்சியில் ஜெயந்தி குமரேஷ் வீணையில் வாசிக்கக் கேட்டேன்.
'ஸரஸாங்கி' என்றால் 'இனிய அங்கங்களை உடையவள்' என்று பொருள்.