முகங்கள்

நினைவுகள் என்பது மறந்ததை
நினைக்கும் மறு ஜென்மம்
சில நினைவுகள் சிரிக்கும்
பல நினைவுகள் அழுகும்
ஆனால் .....

ஒரு நினைவால் வாடும்
திரு முகமே மதிமுக நிழலால்
மனம் வருடி மயங்கும் விழிகள்
தினமுகமாய் நீரில் கரைகிறது
நிலை முகம் தடுமாறாமல்
நிம்மதியை நாடி ...

பலமுக திரையில் நிழல்முக
உருவில் உலகை ஆளும்
கொடிமுகமாய் மேடை போடுகிறது
வாழும்முகம் வீழாமல்
ஏறுமுகமாய் மாறி நூறு
முகமாய் சாகிறது
பிறந்த பிறவியை நிறைவு செய்ய ...!

எழுதியவர் : hishalee (6-Aug-11, 5:30 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 455

மேலே