நேரடி நிகழ்ச்சி
![](https://eluthu.com/images/loading.gif)
ஒப்பனை பெண் ஒரு முனையில்.
மறு முனையில் நம் மாடசாமி.
வாழ்க்கை அது தீர்மானிக்கும்
அடித்தளமாம் நேரம் - அதை
விரயமாக்கி விஷயம் இல்லா
விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு
வீணடிப்பார் விநாடிகளை !!
தொலைகாட்சி சத்தம் - அதை
குறைத்துவைத்துப்பேசு என
குறைப்பட்டுக்கொள்ளும் பெண்
குறைப்பதில்லை தன ஊதியத்தை.
தொலைபேசி கட்டணம் கூட இதில்
தொலைந்து போகும் உணர்வு அற்று
எவனோ ஒருவன் முதலாளி ஆகா - நீ
ஏமாளியாய் போவதேனோ?