.நிரந்தரமாய்..!

உயிரின்
ஒவ்வொரு சுவாசங்களுக்கும்
மூச்சுத்தான் ஜீவ நாடி!
மூச்சு...
சிறு நிமிடம்
தடைப்பட்டால் போதும்
உடல் உறுப்புக்களெல்லாம்
மௌனமாய் ஓய்வெடுத்துக் கொள்ளும்
.நிரந்தரமாய்..!
நிம்மதியாய்!!
மரணம் தான்
ஆனாலும்
ஜனாஸா நகரும்!
துயர இதயங்களில்
பிரார்த்தனை நிறையும்!
பிள்ளை புலம்புகின்றான்
இறைவா
தாயை காப்பாற்று!
தாய்மையை நான் போற்ற வேண்டும் என்று !