எழுத முடியாத கவிதை

எழுதுவதை நிறுத்திவிட்டேன்
எண்ணங்களில் நீ மட்டுமே!
கடைசிதுளி உதிர,
உதிரம்
இன்னும் இருக்கிறது
என் எழுதுகோலில்!
அதற்கும் உடன்பாடில்லை
எழுதுவதற்கு!
வெற்றிடம் கொண்டு
வெறித்துப் பார்க்கிறது
காகிதங்கள்!
எழுதுகோல் முனை
தீண்டினால்...
அவைகளும்
தீக்குளிக்கும்!
வரிசையாய் வந்த
வார்த்தைகளெல்லாம்...
உதட்டு நுனியை
அடையும் முன்பே...
மறதி பீடத்தில்
மரணித்துப்போனது!
விசாரித்தால்
தற்கொலையாம்!
அகராதியில்...
வார்த்தை தேடி
அலைந்தே...
துவண்டுபோன மனதில்
இறுதியில்...
அர்த்தமில்லாமல் போனது
ஆணகம்பாவம்!
இறுதியாய் எழுதுகிறேன்
பெண்ணே!
உனக்கொரு கடிதம்...
இதயம் மரித்து
பிரிந்து சென்ற
பெண்ணே!
பிரிந்த உன்னை ஏய்த்து
எனக்கென்னப் பயன்...
வசைபாடுகளாய்
வரிகள் அமைத்து
வேண்டாம் எனக்கொரு
குற்றக் கவிதை!!!