ராமு-சோமு உரையாடல் தண்ணீர் சாப்பிடு னு வங்க மொழில

சோமு : ஐயா, ராமு ஐயா , ஊர்லேந்து உங்க பொண்ணு
அலமு அவ பசங்க ரெண்டு பேரும் வந்திருக்காங்க
போல இருக்கு......................

ராமு : ஆமாம் சோமு, நேத்துதான் ஒரு வார
விடுமுறைல கொல்கத்தா விலிருந்து
வந்தாங்க............. நீ எங்க பார்த்த ............

சோமு : வாச கதவை திறந்ததே உங்க பேத்திங்க
என்னமோ பேரு சொல்லிச்சு .....ஆங் .....
ஞாபகம் வந்தது...அபர்ணா .................
வந்த உடனே, அங்கிள் ஜாலம் சாப்பிடறீங்களா
னு கேட்டுச்சு.............

ராமு : என் பேரன் அதுல, பேத்தி அபர்ணா பிறந்து
வளர்வதெல்லாம் கொல்கத்தா வில்.அங்கு
'தண்ணீர் குடிக்கிறாயா' னு கேக்க மாட்டாங்க
'ஜொள் காபே' னு அவங்க வாங்க மொழில
கேப்பாங்க ' அதாவது ஜலம் (தண்ணீர்)
குடிக்கிறீர்களானு' அர்த்தம்! மொழிக்கு
மொழி பேதம்............!
சோமு : ஐயா பேத்தி பேரு 'அபர்ணா' என்றால்
என்னங்க; பேரன் பேரு 'அதுல்' னு சொன்னான்
அப்படீன்னா என்னங்க...........ஐயா......

ராமு : டேய், சோமு, அபர்ணா என்பது வடமொழியில்
'பார்வதியை' குறிக்கும்; அதுல் என்றால் அதே
மொழில 'மிக உயர்ந்தவன்'' ஈடு இணை
இல்லாதவன்னு பொருள்................
சோமு : ஐயா நம்ம தமிழில் , 'பார்வதி' 'உமை '
என்று பேர் இருக்கு.........'மாறன்' என்றாலே
'ஈடு இணை இல்லாதவன்' தானேங்க .....

ராமு : நீ என்ன சொல்லவரா சோமு............... ஏன்
இப்படி நம்ம மொழியை விட்டு பேர்
வெக்கறாங்க னு...........................புரியுது
இதெல்லாம் இப்போ நம்ம கைல இல்லே ............
என்ன செய்யட்டும் ...........

சோமு; விடுங்க ஐயா ............ஏதோ நல்லா இருந்தா
அதுவே பொறுங்க.....................

அப்பா நான் வரட்டுங்களா எஜமான்.............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Mar-18, 4:46 am)
பார்வை : 262

மேலே