வாழ்த்துக்கள்

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா…

என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

குழந்தைக்கு தாயாகவும்

கணவனுக்கு மனைவியாகவும்

தோழனுக்கு தோழியாகவும்

காதலனுக்கு காதலியாகவும்

அண்ணனுக்கு தங்கையாகவும்

ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த மான மரியாதைகளையும்

தூக்கி சுமப்பவள் பெண் ( பாலத்தை தாங்கும் தூண்கள் போல )

அவளுக்கும் ஆசைகள் கனவுகள் இருக்கும் அதை எல்லாம்

மனதுக்குள் மறைத்து கொண்டு தன் குழந்தைகளுக்கு இது பிடிக்கும்

தன் கணவனுக்கு இது பிடிக்கும் என்று அவர்களின் தேவையை பூர்த்தி செய்வாள் .

அனால் நாம் தான் அவர்களின் தேவையை தெரிந்து கொள்வதில்லை

தெரிந்து கொள்வோம்

அவளுக்கு உடம்பு சரி இல்லை என்றாலும் தன்னை தானே தேற்றி கொண்டு விடுவாள்

தன் கணவனுக்கு உடம்பு சரி இல்லை என்றால் துடியாய் துடிப்பாள்

கணவனுக்கு நேரத்துக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விட்டு

எல்லாரும் தூங்கிய பிறகே அவள் தூங்குவாள் நேரம் தாழ்த்தி உறங்கினாலும்

காலையில் சீக்கிரம் எழுந்து விடுவாள் குழந்தையை குளிப்பாட்டி சட்டை பேண்ட் போட்டு

தலைக்கு எண்ணெய் வைத்து சீவி பவுடர் அடித்து விட்டு அழகு செல்லம்னு கொஞ்சிவிட்டு

கண்ணு பட போகுதுனு மை வைத்து விட்டு

பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறதும்

எவ்ளோ பெரிய வலியையும் சிறு புன்னகையில் மறைக்க அவளுக்கு மட்டும் தான் தெரியும்

அவளுக்கு ஈடு இணை இல்லை அவளின்றி யாரும் இல்லை

இன்றயை நாள் மட்டும் அல்லாமல் என்றைக்கும் பெண்மையை போற்றுவோம்

எழுதியவர் : மு.தங்கபாண்டி (8-Mar-18, 12:14 pm)
சேர்த்தது : மு தங்கபாண்டி
Tanglish : vaalthukkal
பார்வை : 120

மேலே