இந்நூற்றாண்டின் சில நாகரிக பருவப் பெண்கள்

"இந்நூற்றாண்டின் சில நாகரிக பருவப் பெண்கள் "
_____________________________
தனிமையை இவர்கள்
விரும்புவதில்லை – ஆதலால்
முகநூலும் , இணையமும்
இவர்களின்உயிர் தோழிகள்.

கைபேசி இவர்களின்
காதலன்,
செல்fபி இவர்களுக்கு
பொழுதுபோக்கு .

நான்கு சுவருக்குள் தான்
உலகம் என நினைத்து,
இணையத்தில் ஒரு துணையை
அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்
அதிசய பிறவிகள் .

இவர்கள் இதயம் எனும்
தொழிற்சாலையில்
ஒவ்வொரு நாளும் ஒரு காதல்
உற்பத்தி செய்யப்படும் .

இவர்களின்
மூன்று வேளை உணவு
Facebook, whatsApp, instagram

முகம் அறியாத
குரல் கேட்காத
போலி பக்கங்களோடு
போலி முகங்களோடு
மதி மயங்க பேசுபவர்களை
உயிருக்கு உயிராய் காதலிப்பார்கள் .

பெண்னே ,
நாகரிகம் எனும் இந்த
நாற்றம் நிறைந்த சமுதாயத்தில்
மூழ்கி ,
தேவையற்ற உன் தோழிகளின்
பேச்சை கேட்டு ,
உன் பெண்மையை
நீயே அழித்து விடாதே .

உன் வீட்டு கதவுகளையும்
ஜன்னல்களையும் பூட்டி
பயனில்லை ,
உன் அந்தரங்கத்தை
முகநூல் வழியாய் எவனோ
ஒருவன் எட்டிப்பார்க
அனுமதிக்காமல் இரு .

கவிஞன்
Enoch Nechum .A

எழுதியவர் : Enoch Nechum (8-Mar-18, 9:51 pm)
சேர்த்தது : Enoch Nechum
பார்வை : 122

மேலே