வேஷம் போடாதே மானிடா

அன்பு கொண்டோரை எதற்காக பயமுறுத்த வேண்டும்?
பயப்பட வேண்டும்?

அடிமைபடுத்த எண்ணும் நெஞ்சமே உனக்கு தகுதியிருக்கா மனிதராய் வாழ..

இங்கே பொய் அதிகாரம், பொய் வேஷம், பொய் பதவி, என்று யாவும் பொயாய் புரை படிந்த உலகிலே வாழ்வதும் பொய்யடா..
இங்கே பிறரை வாழ்த்துவதும் பொய்யடா....

விஷம் நிறைந்ததே மனித மன பையடா...

பொறாமை, போதாமை, பேராசை, என்றும் தினமும் அரங்கேற்றுவது நாடகம் தானடா...
உண்மை அன்பு எங்கே கூறடா...
தேடினாலும் கிடைக்காது...
தவமிருந்தாலும் கிடைக்காது.....

நல்லது செய்தாலும் சந்தேகிக்கும்
பித்துமனமே வெத்து பொய்யடா....
உதட்டிலே ஆசை...
உள்ளுக்குள்ளே நிராசை....
எது சிறந்தது என்ற தேடல்....
கடைசியில் சிறந்த எதையுமே காணாமல் ஓடல்.....
சம்போ சிவ சம்போ....
வேஷம் போடாதே மானிடா....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Mar-18, 7:26 pm)
பார்வை : 2145

மேலே