ஒற்றிலா வெண்பா

குருகு கொடியொடு கோல மயிலி
லிருவ ருடனே யினிதா - யருள
வருவா யெனவே வடிவே லவனை
உருகி யுருகி யழை.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-18, 12:33 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 54

மேலே