ஊமைக்குயில்
உருகி உருகி
இறுதியில் நன்னீராய்
மாறும் பனிக்கட்டி நான்...
ஊமைக் குயிலைப்போல்
மீட்டப்படாத கானம்
என்னுள்ளும் இருக்கிறது!
ஆசைக்கு அடிபணிந்தால்
ஆகாயம் வரை தேவைப்படும்...
குடும்பத்தின் காயங்கள்
கண்டதால் - அதன் ரணத்தில்
நானும் சேர்ந்தே எரிகிறேன்!
காதலென்ற காகிதத்தை
அதன் தீயீலிட
நான் விரும்பவில்லை...
விலகிக்கொள்!