பூவில் பூத்த பூவொன்று
வருவதற்கில்லை
அக்கவிதை என்கையில்
சோர்ந்தன இலைகள்...
எந்த அனுபவமும்
சாராத சொற்கள்
மீண்டும் மீண்டும்
மரமேறி வழுக்கின.
போவதிற்கில்லை
இன்னொரு பாதை
என்றொரு தவிப்பில்
சுற்றி அலைந்தது
மனமொரு பறவையாய்...
அந்தியில் கோணிய
வெண்ணிற மஞ்சளில்
மூக்குத்திப்பூவினில்
நின்று சிரித்தது கவிதை.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
