இப்படியும் மனிதர்கள்

அவன் இருக்கும்போது
பரிவுகாட்ட உற்றார்
உறவினர் யாரும் இல்லை
அவன் போய்விட்டான்
வெறும் கட்டைக்கு அலங்காரம்
காடுவரை எடுத்துச்செல்ல
ஊர்வலவண்டி வழியெல்லாம்
ரோசா மலர்த் தூவல்
வீசி எறியப்படும் காசு
ஆட்டம் பாட்டம் காக்கும் வந்தது
கட்டையும் அடக்கமானது

அமைதி அடைய இத்தனையும்
அவன் சேர்த்துவைத்த பணத்தில்
உயிருடன் இருக்கையிலே
கேட்பார் யாரும் இல்லை

அவன் அமைதி கேட்டபோது
பரிவு, உபச்சாரம் இல்லை

இப்போது இவர்கள் செய்யும்
சடங்கு யாருக்கு போன
அவன் ஆவிக்கா அதுதான் போய்விட்டதே
அமைதி கொள்ளாமல்
வெறும் கட்டைக்கு இவர்கள் காட்டியது
யாருக்கு மரியாதை யாரை
அமைதி படுத்த
வெறும் கபட நாடகமா,போலித்தனமான
செய்பவர்க்கே தெரியும்
அவர் மனசாட்சிக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (11-Mar-18, 12:54 pm)
பார்வை : 122

மேலே