உனைக் காணாமல் கண்டேன்
என் எண்ணங்களும் உனதானதே
என் போக்கும் உனதானதே
என் உணர்ச்சிகளும் உன்னால் வடிக்கப்படுகின்றதே
உன்னை பற்றி அறிய செய்திகள் அறியப் பெற்றேனே
நீ முயற்சிக்கு வித்தானாய்
என் கவிக்கு அழகானாய்
உமது அடி எனக்கு ஊக்க மருந்து ஆனதே
என்ன விதியோ உன்னை கேட்டறிந்தேன்
உன்னை காணாமல் கண்டறிந்தேன்
என்னை அறிய உனக்கு வாய்ப்பில்லை
உன்னை நேரில் காண எனக்கு திறனுமில்லை திடமும் இல்லை
உன்னை காண ஆவல்
ஆனால் விழி காண மறுக்க
மனம் உன்னை நாட
ஏன் இந்த ஆவல் புரியவில்லை
உன்னை நினைத்தேன் உன்னை நேசிக்கத் தானோ
உனது விடா முயற்சி எனக்கு பிடித்தது போலும்
அதனால் உன் மீது ஆவல் கொண்டேன்
என் விருப்பம் தெரிவிக்க வாய்ப்பே இருந்தாலும்
விதியின் வழியோ
எல்லாம் பாலாய் போகுமோ
இது தெரியாமல் விழிக்கும் பேதை நானோ ?