கனவுகளை திறந்து வைக்கிறேன் வா
போதும் நிறுத்திக் கொள்வோம்
மிதமிஞ்சிய கனவுகளை!
கற்பனை வேரில்
கவிதை நீரூற்றி
வளர்த்திட்ட காதல் மரம்
கனி தரவில்லை...
பாதைகள் வேறானபின்
அருகே வெற்றிடத்தில்
உன் உருவம் நிரப்பி
பயணத்தையும் இரசிக்க முடியவில்லை....
போதுமடி எனக்கு இனி
இரவல் கனவுகள் வேண்டாம்
இறுதியாக ஒரேயொரு முறை
கனவுகளை
திறந்து வைக்கிறேன்
வா!
வந்து உன் நினைவுகளை
கொணர்ந்து சென்று விடு..
ஆனால்...?
மறவாதே கண்மனியே!
இவன் இதயமும்
சிலகாலங்கள்
உனக்காக துடித்ததை...