சாக்காடு குறையும்

தாயே, நீ வராம—உன்னைத்
தாங்கும் என்னை சிதைத்து
வறுமையில் வாடியதுபோல்
உருவத்தை கெடுத்தார்கள்

சூரியனும் உனக்கு
சொந்தம் என்பதால்
உன்னை பார்த்தால்
உள்ளம் குளிர்ந்திடுவான்

உலா வரும் நிலா கூட
உன் வரவை ஆவலோடு
தஞ்சையில் எதிர்பார்ப்பாள்
தன் எழில் உருவை உன்னில் காண

உன்னைக் கண்டால்
கூட்டமா வரும் யானைகள்
ஊருக்குள் வராது—இனி
யாருக்கும் தீங்கிழைக்காது

உன்னால வளருவாள்
உன்னோட சிநேகிதி—உன்
வரவால் இனி உனக்கு
வண்ணம் சேர்ப்பாள்

துடித்து இறந்த மீன்கள்
துயரங்களை மறந்து
உனது வருகையால்
மீண்டும் பிறப்பெடுக்கும்

வழிதுணையாய் வந்து—உனக்கு
வழி காட்டி அழைத்து செல்பவனை
வெட்டி சிதைத்து—பாவிகள்
விற்று கொழுத்தார்கள்

உன் தரிசனம் வேண்டி
ஊரே தெருவில் நின்று எழுப்பிய
கூக்குரலும், கலவரமும்—இனி
காணாமல் போய் விடும்

உன் கருணையால் இனிமேல்
எப்போதும் முப்போகம்
சாப்பாடு எல்லோருக்கும்—இனிமேல்
சாக்காடு குறையும்

எழுதியவர் : கோ. கணபதி. (12-Mar-18, 9:28 pm)
பார்வை : 43

மேலே