இதயத்தை தந்துவிடு
ஒவ்வொரு முறை
உன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம்
என் தாகம் தீர்க்கும் தண்ணீராகிறாய்.
ஒவ்வொரு முறை
பார்க்கும் போதெல்லாம் எனக்குள் பல கோடி மின்னல் பூவாய்
பூக்கிறாய்.
பார்க்கும் நாட்களில்
பூன்னகையால் எனை
மாய்த்திடும் நீ!
பார்க்காத நாட்களில்
எனக்குள் ஊஞ்சல்
கட்டி ஆடுகிறாய்.
இத்தனை இம்சைகள்
செய்யும் ரோஜாப்பூவே!
ஒருமுறையாவது
உன் இதழ்களால்
வருடி எனக்கு
இத(ய)ம் தருவாயா!!

