எதிர்த்து குரலை உசத்துங்க

வாரி வாரி கொடுக்குது..
மக்கள் வரி பணத்தை...
வாரி வாரி கொடுக்குது..
முதலாளி வர்க்கத்துக்கு
வாரி வாரி கொடுக்குது..
அது வாரா கடனா
வந்து நிக்குது
அவங்க வாழ்க்கை எல்லாம்
கோடியில கொழிக்குது..
செல்வத்துல செழிக்குது...
வாழ்கையை ஓட்ட
ஏழை மக்க கடன் கேட்டா..
எட்டி உதைக்க பாக்குது..
புடிச்சு வெளியே தள்ளுது..
யாருக்கு இந்த அரசுங்க..
நினைவில் நிறுத்தி பாருங்க..
கேட்பவர்தான் யாருங்க..
கல்வி மருத்துவம் இலவசமா
வேணுங்க இல்லனா
வரி மட்டும் எதுக்குங்க
கட்டின வரி நமக்கு
திரும்ப வரனுங்க..
கடன் கொடுக்காத
வங்கிய இழுத்து சாத்துங்க.
ஏமாளி ஆனது போதுங்க..
எதிர்த்து குரலை உசத்துங்க..

எழுதியவர் : (13-Mar-18, 5:30 pm)
பார்வை : 74

மேலே