குழந்தையாக்கி போனாய் என்னை

நீ என்னவனா
எனக்கு உரியவனா
எனக்கு உரிமையானவனா
என்று தெரியாமலே
உன்னை என்னவனாக
எனக்கானவனாக உரிமை
கொண்டாட தொடங்கிவிட்டது
எந்தன் உள்ளம்

மனம் அம்மாவைத்
தேடும் குழந்தை
உன் விழிகளைத்
நான் தேடி தவிக்கும் போது

மனம் அடம்பிடிக்கும்
குழந்தை உன்னைத்தான்
நினைப்பேன் என்று
உன் நினைவுகளையே
விடாமல் சுற்றிக்கொண்டிருக்கும்போது

மனம் அம்மாவைதான்
அதிகம் பிடிக்கும்
என்று சொல்லும்
சிறு மழலையாகிப்போனது
இந்த உலகத்திலே
அதிகம் பிடித்தது
நீயாகிப்போன போது

மனம் பொம்மையைக்
விட்டுவிட மனமில்லாமல்
கட்டிக்கொண்டிருக்கும்
குட்டிக் குழந்தைதான்
உன் நினைவுகளை
அணைத்து தூங்கும்
இரவுகளின் இருளில்


மனம் பசித்து
வீரிட்டு அழும்
பச்சக் குழந்தையாகிப்போகிறது
தூக்கம் வாரா
இரவுகளில் நின்
நினைவுகளில் நான்
புரண்டு தவிக்கும்போது

இப்படியான தவிப்புகளில்
குழந்தையாக்கி போனாய்
என்னை இருந்தும்
எனக்குள் ஒளிந்திருந்த
ஒன்றையும் மெல்ல
எழுப்பி விட்டிருந்தாய்

குழந்தையாய் ஒரு
குழந்தையாய் வந்து
உன் கைகளில்
அமர்ந்திட வேண்டும்
மழலையாய் மழலையாய்
மடிவந்து சாய்ந்திட
மட்டும் வேண்டும்

உன் மடிச்சூடு
தேடி அலையும்
மழலை ஆனேன்

எழுதியவர் : யாழினி வளன் (15-Mar-18, 3:11 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 322

மேலே