நினைவுகளின் மயக்கத்தில்

நினைவுகளின் மயக்கத்தில் நித்திரையும் தொலைத்தேன்!
***நெஞ்சமெனும் ஆழ்கடலுள் அலைமோதக் கண்டேன்!
எனைமறந்த நிலையினிலே கனவுகளில் மிதந்தேன்!
***இதயத்தில் தேன்சாரல் நனைத்ததனால் உயிர்த்தேன்!
தினமுன்றன் வரவுக்காய்ச் சோலையிலே பூத்தேன்!
***தென்றலென்னை உரசுகையில் மெய்சிலிர்த்து நின்றேன்!
மனைவியென்ற உரிமையினைத் தந்தாயேல் மகிழ்வேன்!
***மாலைசூடும் நாளையெண்ணி வளையவரு வேனே!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Mar-18, 12:10 am)
பார்வை : 93

மேலே