வாழ்க்கை

இளமை...
தன்னம்பிக்கை எனும்
தொடர்புள்ளி வைத்து
வாழ்வை தொடங்கினாலும்,

முதுமை...
மரணமெனும்
முற்றுப்புள்ளி வைத்து
வாழ்க்கையை
முடித்து வைக்கத்தான்
போகிறது!

செழித்து வளர்ந்த இலைகள்
முதுமை கொண்டப்பின்
மண்ணில் உதிர்்ந்தாலும்
உரமாக மறுப்பதில்லை!

மனிதா!
மண்ணிற்கு
நீ...
உணவாகும் முன்
உன் கண்களையாவது
பத்திரப்படுத்தி வை!

#கண்தானம் செய்வீர்!

எழுதியவர் : நகுலன் (16-Mar-18, 7:41 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 581

மேலே