அழகு

உடல் தரும் அழகுகள் அத்தனையும்
சிதைந்திடும்,குலைந்திடும்,அழிந்திடும்
காலப்போக்கில் ஒரு நாள்
அழியா அழகுகள் அகத்தில் ஒளிர்பவை
பழக பழக தான் தெரிபவை அவை
வெளி அழகு மட்டும் நோக்கி
உள்ளழகைக் காணாதவன்
பார்வை இருந்தும் நிறங்கள்
காணா நிற அந்தகனுக்கு ஒப்பாவான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Mar-18, 8:34 am)
Tanglish : alagu
பார்வை : 87

மேலே