அச்சாணி இல்லாத தேர்

நந்தவனமாய் எம் நாடு
வந்தவர் வணங்கும் மாநாடு -பல
வேந்தர்கள் வந்தாள வாஞ்சைகொண்ட பூமி
செல்வச்செழிப்பும்
செங்கோண்மை தவறாத
நல்லாட்சியில் செழித்தோங்கியது
நந்தவனத்தேராக
நஞ்சுக்குண்டெறிந்து
நாடு நாடாய்க்கடத்தி
அச்சாணி இழந்த தேராகிப்போனது
எம் தேசம்
தரை தாவும் அலைகடலும்
பாரையாளும் முப்படையும்
தேராக வலம் வந்த
தேனாட்டை சீர்குலைத்தார்கள்
சிவப்பு மனிதர்கள்
பூத்துக்குலுங்கிய ஊருக்குள்
கூத்தாட வந்த கயவர்கள்
குலவிளக்குகளை
சூரையாடிச்சென்றதை
கண்டீரோ ?
இல்லை கதறி அழுதீரோ ?
இமையாக காத்து வந்த
கன்னித்தமிழை
இல்லாது ஒழிக்க வந்த
கயவர்கள் கூட்டம்
தேராக உலகம் போற்ற
உலவிய எம் திருநாட்டின்
சக்கரத்தின் அச்சாணியை
சதியால் மௌனிக்க வைத்தனர்
நயவஞ்சகர்கள்
அச்சம் ஊட்டிய அண்ணன் படையை
மிச்சம் வைக்காது அழிக்க
உலக நாட்டானை அழைத்து வந்து
பெரும் நாசம் தந்தார்கள்
இப்படை வீரம் அழிவதில்லை
முப்படை வீரம் மூவுலகமும் புகழ் வீசும்
தமிழ் படை வீரர்கள்
அச்சாணியாகி
நந்தவனத்தேரின் கலசத்தில்
எம் கொடியேறும்
எம் இனம் வாழும்
எம்மின ரதத்தில்
எம் தலைவன் உலா வருவார்.

-மட்டுநகர் கமல்தாஸ்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தஸ் (16-Mar-18, 10:00 am)
பார்வை : 1429

மேலே