எழுந்துவிடு பெண்ணே
வெயில் வந்த பின்பும்
துயில் காணும் பெண்ணே..!
வெளிச்சத்தை பாரு
உன் பாதை தெரியும்..!
சுமையான பயணம்
சுகமாக மாறும்..!
சுறுசுறுப்பு கொண்டு
எழுந்துவிடு பெண்ணே..!
இயற்கைகள் உனக்காக
இருபக்கம் துணையாக
இமைகளை திறந்தால்
இயன்றது முடியும்..!
நித்திரையை கலைத்து
நித்தமும் உழைத்தால்
நிலையான உயர்வு
வரமாக கூடும்..!
கண் திறந்து சிந்திப்பதே
கலாம் சொன்ன கனவு..!
விண் பறந்த புகழுக்கு
வித்திட்ட வரிகள் இது..!
பெண்ணென்று எண்ணாமல்
பெரும் முயற்சி கொண்டால்
எண்ணற்ற வெற்றிகள்
எழிலாக உனை சேரும்..!
எண்ணற்ற வெற்றி்கள்
எழிலாக உனை சேரும்..!!!