அவளழகு

கார்மேக வண்ணம் தொட்டு
அவள் விழி வளைவுகளுக்கு
மை இட்டுக் கொள்ள.....!

புருவ விற்களின் இடையினில்
பிறை நிலவை வானில்
இருந்து பிரித்து எடுத்து
பொட்டு இட்டுக் கொள்ள...!

நீளும் வானின் நீள
சாயம் ஏற்றிய தாவணியை
உடையாக்கி உடுத்தி இடையினில்
சொருகிக் கொள்ள

பனியில் நினைந்த செவ்விதழ்
ரோஜாவின் சாயம் தனை
இதழ் பூசிக் கொள்ள......
அவள் அழகுக்கு இவ்வளவு
அழகுச் சேர்த்து எவர்
மனதை வசிகரிக்க ........?

எழுதியவர் : #விஷ்ணு (18-Mar-18, 12:21 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 97

மேலே