தாகம் தேடும் தேகம்

பூவிலும்
மென்மையான
பாவை நீயடி
மணாளன்
தாகம் தீர்க்கவே
பிறப்பொன்று
எடுத்தாயோ நீயடி ..
ஆண்மைக்கு
இலக்கணம் தேட
பாவையை
படைத்தானோ கடவுள்..
பெண்ணவளுக்கு
இலக்கணம் தேட
ஆண்மையை
படைத்தானோ கடவுள் ..
உனக்கொரு
கவி எழுத
எனக்கும் ஒரு ஆவலடி ..
என் நாணம்
தடுக்குதடி
இக்கவியை
முடிக்க ..