சமுதாயத்தில் விதவை

"எத்தனை வாட்டி மா சொல்றது, நான் டயட் ல இருக்கேன்னு. இப்ப கிளம்பறேன். எனக்கு மணியாச்சி." என்றபடியே வெளியேறினாள் மாதங்கி. அவளுக்கு கல்லூரி, நடக்கும் தூரம் தான். வரும் வழியில் ஒரு பழச்சாறு கடை உள்ளது. அங்கு தான் அவள் எப்போதும் காலை பழச்சாறு அருந்துவாள்.

வழக்கம் போல் வந்து, "அண்ணா, ஒரு லைம் ஜூஸ்" என்றபடி பணத்தை நீட்டினாள். "என்னம்மா, இன்னிக்கு தாமதமா வந்துட்ட போல"
"ஆமாம் ன்னா, சீக்கிரம் குடுங்க. " என்றவளிடம் "ஒரு பத்து நிமிஷம் மா, கொஞ்சம் மிக்சி கொஞ்சம் தகறாரு பண்ணுது " என்றார். சரியென எங்கோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள், வேலு அண்ணா "அம்மா" என்று கத்த, கடையின் உள்ளே ஓடினாள். அது ஒரு சிறு பொட்டி கடை போல் இருக்கும். வெளியே நின்று தான் அருந்த வேண்டும்.
ஜூஸ் சிதறி வேலு கண்களை பதம் பார்த்திருந்து. இவள் தனது துப்பட்டாவை எடுத்து கண்களில் ஒற்றி கொடுத்தாள். "என்ன நீங்க, மிக்சி வேலை செய்யலைன்னா சொல்லிருக்கலாம் ல" என்றவாறே இவள் துப்பட்டாவை சரி செய்து கொண்டு வெளியே வர, அவர் முதலாளி வரவும் சரியாய் இருந்தது.

இது நடந்து இரண்டு நாட்கள் இருக்கும். திடீரென்று ஒரு நாள் அப்பா அழைத்தார். வெளியே வந்து பார்த்தால், அம்மா அழுது கொண்டிருக்க, அப்பா கடும் கோபமாக இருந்தார். "ஏம்மா, அந்த பழ கடைக்காரனுக்கும் உனக்கும் என்னம்மா சம்பந்தம்."

"என்னப்பா சொல்றிங்க, எனக்கு புரியல" என்றாள். "என்னடீ, புரியாத மாதிரி நடிக்கிற, இதுக்காகவே உன்னை நாங்க படிக்க வெச்சோம். விதவை யா நின்ன உன்ன , முன்னேறணும் னு படிக்க வச்சா, நீ எங்களை தல குனிய வச்சிட்டா" என்று கதறி அழுதாள் அம்மா.
எவ்வளவு மறுத்தும் அவர்கள் இருவருமே இவளை நம்ப மறுக்க, பெட்டியை தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.
கல்லூரி தோழியின் உதவியில், ஹாஸ்டல் சென்று தங்கினாள். பள்ளி படிப்பு முடித்ததுமே ஓடி போய் விடுவாள் என்று ஜாதகத்தை காரணம் காட்டி கல்யாணம் செய்து வைத்தார்கள்.
சில நாட்களில், ஒரு விபத்தில் அவன் பலியாக, பிறந்த வீடு திரும்பி கல்லூரி வாழ்க்கையை தொடங்கினாள்.
ஒரு விதைவைக்கு சமூகத்தில் கெட்ட பெயர் சுலபமாக கொடுத்து விடுகிறார்கள். இருப்பினும் மனம் தளராமல் தன் கல்லூரி படிப்பை பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே முடித்தாள்.

நல்ல வேலையும் கிடைத்தது. இருப்பினும் கடந்த கால கசப்பான நினைவுகளின் காரணமாக மணம் செய்யவில்லை. அப்பொழுது தான் அந்த தகவல் கிடைத்தது. அம்மா இறந்து விட்டார் என்று.

மகளாக செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்தவள், புத்தி ஸ்வாதீனம் அற்ற தன் அப்பாவை தன்னோடு அழைத்து சென்றாள். இரண்டு விதவைகளை தத்தெடுத்து அவர்களுக்கு சுய தொழில் கற்று கொடுத்து, வருமானத்துக்கும் வழி செய்தாள்.

மாதங்கி போன்ற பல பெண்கள், என்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கதை வழக்கம் போல உள்ளதாக இருப்பினும், இது ஒரு நிஜ கதை என்பதால், மாற்றமின்றி படைத்துள்ளேன்.

எழுதியவர் : Baasha (18-Mar-18, 5:56 pm)
பார்வை : 168

மேலே