ஒன்றுபடுவோம்

ஏற்றத்தாழ்வு மறந்து,
ஒன்றாய்க் கைகோர்த்து..
பல கைகள் இணைய,
பலமாகும் சமூகத்தில்..
நல்லவை நாளும்,
நலன்பெறச் செய்து..
பெற்ற அறிவை,
மறவர்களுக்கு உரைத்து..
உயிர்களுக்கு அன்பாய்,
உணவளித்து நாளும்..
பெரியோரை மதித்து,
அறிவுரை கேட்டு..
ஓடிடும் வாழ்வில்,
விடிவைக்காண ஒன்றுபடுவோம்..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (19-Mar-18, 9:32 pm)
Tanglish : ondrupaduvom
பார்வை : 62

மேலே