வாழ்க்கை முழுவதும் அழகு

அன்று ஒரு நாள் நிலவை பார்த்து கொண்டிருந்தேன்.நான் மட்டும் அல்ல என் தங்கையும், இரவு பொழுது அம்மா சாப்பிட வாங்க பசங்களா, என் கூப்பிட்டு கொண்டே
செட்டி நிறைய சோற்றை பிசைந்து பிசைந்து வந்தாள்.நானும் என் தங்கையும் அம்மா அங்க பாருங்க
நிலா அழகா இருக்கு இல்ல. என் சொல்லி கொண்டே கை நீட்டி காமிச்சோம்.அப்ப அம்மா ஆம்மா
அழகா இருக்கு இல்ல நீங்க சாப்பிடுங்க கையில் உருண்டை பிடிச்சு கொடுத்தாங்க.நாங்களும் வயிற்று நிறைய சாப்பிட்டோம்.சில விஷங்கள் கிடைக்கும் போது என்னடா இது அப்படி அலட்சியமா விட்டுறோம்.ஆனா கிடைக்காத போது ஏங்கி தவித்து கிடைக்குமாறு எதிர் பார்க்குறோம்.வாழ்க்கையில எதையுமே அலட்சியம் படுத்தாதிங்க.அதே போல சின்ன சின்ன ஆசைகளை விட்டும் கொடுக்காதிங்க. வாழ்க்கையை ரசிச்சி வாழ பழகுங்க.உங்க பிள்ளைகளுக்கும் கற்று கொடுக்க.இந்த இயந்திர உலகத்தில் மன அழுத்தம் என்ற ஒரு வார்த்தையே இருக்காது.அம்மாவின் அன்பு அழகு.தங்கையின் குறும்பு அழகு.தந்தையின் திண்டல் அழகு.மழலையின் சிரிப்பு அழகு.நட்பின் பகிர்தல் அழகு.பறவையின் சத்தம் அழகு.விலங்கின் செய்கை அழகு.செடி மரங்களின் அசைவும் அழகு அப்பப்பா சொல்லி கொண்டே போகலாம்.சிறிது நேரம் ஒதுக்கி பாருங்க உங்களுக்காக உங்களை சுற்றி இருப்பவர்களுக்காக!!!!!!!

எழுதியவர் : உமா மணி படைப்பு (19-Mar-18, 11:47 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 236

மேலே