ஏனிந்த கோபம்???????
இயற்கை அன்னையே.....
யார் மீது கோபம்??????
வண்ண மலர்களை வாட்டி
அக்னிச் சிறகு கொண்டு
வாழத் துடித்த வசந்தங்களை
வதைத்து வீழ்த்தினாயே....ஏன்???
கையொரு பக்கம் காலொரு பக்கம் வெந்து தணிந்ததுவே...
விறகாய் கட்டையாய் எரிந்து
விறைத்துப் போனதுவே இன்னுயிர்.....
கேட்க மனம் பதைக்கிறதே
காணும் கண்களில் குருதி வழிகிறதே...
கனவுகள் சுமந்த வாலிபங்களின்
வாழ்வு காற்றோடு கலந்ததுவே....
பச்சைப் பசேல் புல்வெளியே
உன் அங்கமெங்கும் கூக்குரலும்
அழுகையும் ஓலமும் வலியும் சுமந்து.....ஏன் சிரித்தாய்?????
கோடி கோடியாய் பணம்
குவிந்து கிடந்தாலும் இயற்கையை வெற்றி கொள்ளும
வேந்தன் தரணியில் இல்லை
என உணர்த்தினாயோ?????
அழகெல்லாம் ஆபத்து என
இப்படித்தான் உரைத்திட்டாயோ?????
யாருக்குப் பாடம் புகட்ட
எவருக்கு எதை உணர்த்த
பசுந்தளிர்களைப் பொசுக்கி நீ
சுகம் கண்டாய்????
வெள்ளை உள்ளங்களை கொள்ளை கொண்டு போக
அக்னியை ஏவிடத்தான் எப்படி
மனந்துணிந்தாய்?????
வறண்டு போன உன்
தாகம் தீர்க்க......
ஊனை உருக்கி உயிர்ச்சாறு
ஏன் குடித்தாய்??????
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
