பொய் கோபம்
![](https://eluthu.com/images/loading.gif)
நீ
உதிர்த்த
வார்த்தைகள்
எல்லாம்
என் உதிரத்தை
உறைய வைத்து
விட்டதடா
என் கோபத்தில்
உள்ள அன்பும் பாசமும்
உனக்கு புரியவில்லையா
என் கண்ணாளனே
அந்த கோபமும்
பொய்யானது என்பதை
அறியவில்லையா
ஒரு நொடியில்
என் இதயத்தை
ரணமாக்கி விட்டாயே..
உன் மௌனம்
பேசாதோ
என ஏங்கி இருந்த
எனக்கு
உன் மௌனம்
உதிர்த்த பரிசு
என் விழி நீர் கசிகிறதே ..
என் விழிகளுக்கு
பரிசளித்த உனக்கு
நான் அளிக்கும்
பரிசு
மௌனமாகி ....
விலகுவது ..