இரவின் அழகில்
இரவின் அழகில் .....
பனி விழும் இரவில்
பளிச்சிடும் நிலவின் ஒளியில்
எண்ண முடியாத
எழில் மீகு நட்சத்திரங்களின் காட்சியில்
மரங்களின் அசைவில் அடிக்கடி வந்து
சிலிர்க்க வைக்கும்
சிறு தென்றலின் நடுவில்
மெய்சிலிர்த்து அமர்ந்து கொண்டிருந்த நான்
என் செந்தமிழ் கொண்டு
இந்த இரவின் வனப்பை
வர்ணிக்க வார்த்தைகளை
தேடி கொண்டு இருந்தேன் ....
பல வார்த்தைகள் என்
எண்ணத்தில் ஓட ஒரு வார்த்தையும்
என் எழுத்தில் வாராது
இந்த இரவின் அழகின் அழகை
வர்ணிக்க முடியாமல் தோற்று
போன எழுத்தாளனாய் என்
வீட்டின் உள்ளே சென்றேன் .