உன்னால் வாடும் நெஞ்சம்

உன்னைக் கண்டாலே நெஞ்சில் கிறக்கம்
காணாவிடில் என்னைத் தொற்றும் ஏக்கம்
வளர் பிறையாய் உன் மீது வந்த காதல்
இன்று பௌர்ணமியாய் முற்றி
என்னில் பரந்து கிடக்குதடி
சூல்கொண்ட மேகமாய் நீ மறைத்த உன் காதலை
இன்றே மழையாகப் பெய்யக் கூடாதா ?
உன் நினைவால் வாடிக் வதங்கிக் கட்டாந்தரையாய்க்
கிடைக்கும் என்னுள்ளம் செழித்துச் சீர் பெறுமே?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (20-Mar-18, 12:07 pm)
பார்வை : 282

மேலே