அடியோடு தகர்ந்தது

அம்மா கை
அறுசுவை விருந்தும்

அக்காவின்
தக்காளி ரசமும்

எதிர் வீட்டு மாமியின்
நிகரில்லா அவியலும்

வடக்கத்தி அண்ணியின்
வறட்சி அறியா ரொட்டியும்

அத்தை கை
மெத்தென்ற அதிரசமும்

தோழி தந்த
கோழிக் குழம்பும்

வந்த பவனின்
வழுக்கும் கேசரியும்

மனைவியின்
மறக்க ஒன்னா
மோர் குழம்புமே..

அமிர்தமென்ற
அசைக்க முடியா நம்பிக்கை
அடியோடு தகர்ந்தது.....

தட்டுத் தடுமாறி
" தான்" செய்தது... என

தித்திக்கும் சிரிப்போடு
தங்க மகள் தந்த

பெயர் தெரியா
பட்சணத்தின் சவையில்.

🌷இன்னிலா🌷

எழுதியவர் : இன்னிலா (20-Mar-18, 2:36 pm)
பார்வை : 57

மேலே