கருவறை குழந்தை

கண்ணயரும் நேரம்
செல்லமாய் வயிற்றில்
எட்டி மிதிப்பாய் கண்ணே..
இம்சிக்கிறாய் என்று
ஒருபோதும் நினைத்ததில்லை.
நீ ஆரோக்கியமாய் வளருகிறாய்
என்றே நிம்மதியடைவேன்.
உன் தந்தையிடம் உந்தன்
செல்ல தீண்டலைகளை காட்ட
நான் அழைத்திடும் சமயமோ - நீ
அமைதியாய் நற்பிள்ளையாய்
அடக்கமாய் மாறி - எனை
அவர் கேலி செய்யும்படி
நடந்துக் கொள்வாய்..
சில சமயமோ ஆழ்கடலில்
உறைந்திருக்கும் முத்துபோல்
கருவறையில் நித்திரை
தந்தையின் சொல்லே மந்திரமாய்
அசைந்துகொடுப்பாய் மெல்ல..
இருவரையும் ஏங்கவைத்து
காத்து நிற்கவைக்கிறாய்..
கருவறை விட்டு நீ
பவனி வரும் அந்த
நாளுக்காய்...
- வைஷ்ணவ தேவி