பயணம்
கருவறையில் வாசம்
பத்து மாதம்-வெளியே
வருவது மறுபிறப்பு
விதி வழியே 'அவன்'
அளந்தபடி, அதன்பின்னே
வாழ்வு -அது முடிந்தபின்னே
கல்லறையில் வாசம்,
அல்லது காற்றோடு காற்றாய்
கலந்ததோர் வாசம்,
மறுவாசம் தேடி!-இல்லை
'அவன் அடி' சேரவா
யாரறிவார்,
இப்படித்தான் அவன்
எழுதிவைத்த வாழ்க்கைப் பயணம்;
இதை அறிந்துகொண்டால்
பிறப்பில் சிரிப்பு
மறைவில் கண்ணீர்
ஒரு மாயம் என்பது தெரியும்