மனதில் தோன்றியது

பலகோடி வருடங்களாய்
வானில் சுழலும் நட்சத்திரங்கள்
கூட ஒரு நாள் அழிந்து
'கருப்பு குழி' ஆகின்றன
கோள்களுக்கும் ஒரு நாள்
அழிவு நிச்சயம்
அண்டங்களெல்லாமே அழியக்கூடும்
அல்லது படைத்தவனே
அவற்றை விழுங்கி தன்னுள்
வைத்துக் கொள்வான்-அவன்
மீண்டும் தன வயிற்றிலிருந்து
கக்கவைத்து புதிய அண்டங்கள்
துவக்கிவைக்கலாம் அதுவரை
அண்டங்கள் அழிவில் மிஞ்சுவது
வெறும் சூனியமே
இப்படி இருக்கையில் -இந்த
மனித வாழ்வில் நாம்
கண்டதென்ன, காணப்போவது எவை
வரவு எது, செலவு எது
நாமெல்லாம் யார்
எங்கிருந்து வந்தோம்
எங்கு செல்கின்றோம்
பெயர்த் தேடி அலைகின்றோம்
பெரும் புதையல் தேடி அலைகின்றோம்
சேமித்து வைக்கின்றோம் ஈட்டிய
பெருந்தனத்தை- யாருக்கு எதற்கு
இன்னும் ஈட்டவில்லையே
ஈடிலா ஒன்றை -அந்த
ஈசன் அடி நாடி அதை சேர
கண்டதும் பொய் , காண்பதும் பொய்
அவன் அடி ஒன்றே மெய்
வள்ளுவமும் இதைத்தானே
செப்புகின்றது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Mar-18, 8:06 am)
பார்வை : 252

மேலே