வீண் வேஷம் போடாதீர்கள்
அன்பென்ற கடவுளை ஏற்காத மனிதர்களால் உருவாகி எருவாகி மண்ணில், பாமர மக்கள் மனதில் விதைத்துவிடப்பட்ட கடவுளர்களை நான் ஏற்பதில்லை.
அன்பைத் துரந்தவன் அழிவையே உருவாக்குபவன்.
அழிவை மட்டுமே உருவாக்குபவன் கடவுளாக இருக்க முடியாது.
அப்படி அழிப்பவனைக் கடவுளாக நினைப்பவன் மனம் அழிவையே சிந்திக்கிறது.
பிரிவினைகளை விதைக்கிறது.
சாதி என்கிறது.
அதற்கொரு சங்கம் என்கிறது.
மொழி என்கிறது.
அதற்கொரு சங்கம் என்கிறது.
மதம் என்கிறது.
அதற்கொரு சங்கம் என்கிறது.
பகுத்தறிவு என்கிறது.
அதற்கொரு சங்கம் என்கிறது.
சங்கங்கள் மட்டும் கோடிக்கணக்கில் உலகில் இருந்து பயனென்ன?
அன்பில் ஒன்ற சங்கமிக்காத மனிதர்கள் வாழும் நரகம் இது.
தலைக்கணம் ததும்பி வழிகிறது.
எதிலும் முறைகேடு.
ஊழல், லஞ்சம்.
பெற்றெடுத்த மகளை கற்பழித்த தந்தை,
தன் கரு சுமந்த தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்,
என்று நாள் தோறும் செய்திகளுக்குப் பஞ்சமில்லை.
ஊடகங்களாலே இங்கே நாளும் உற்பத்தியாகிறது பெரும் தொல்லை.
அன்பென்ற வார்த்தை உச்சரிக்கக் கூட இங்கே தகுதியென்பது ஒருவருக்குமில்லை.
அன்பில்லா உங்களிடம் கடவுள் முற்றிலும் இல்லை.
வீண் வேஷம் போடாதீர்கள் பக்திமான்களாய்..