பழமொழிக் கதைகள் - தொகுப்பு 10 வகுப்பு மாணவர்களுக்காக
10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் கேட்கப் படும் சில பழமொழிக் கதைகள் (பல்வேறு இடத்திலிருந்து தொகுக்கப் பட்டது.)
1. தாய் சொல் தட்டாதே
ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.
வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.
அந்த வீட்டில் வசிக்கும் அம்மா மரங்களிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்தியதே சந்தோசத்திற்கு காரணம்.இப்படி நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது காக்கா சில முட்டைகளை இட்டது.அதை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது.
குஞ்சுகளுக்கு தேவையான உணவை தாய் காகமும், தந்தை காகமும் எடுத்து ஊட்டி வளர்த்தது.குஞ்சுகளும் உணவுகளை உண்டு வளர ஆரம்பித்தது.இறக்கைகள் வளரத் தொடங்கின.அப்போது தாய் பறவை தன் குஞ்சுகளைப் பார்த்துக் கூறியது.
"உங்களுக்கு இறக்கைகள் வளர்ந்து விட்டது, என்று பறக்க முயற்சி செய்யாதீர்கள். இன்னும் வளர்ந்தால் தான் பறப்பதற்கு வேண்டிய ஆற்றல் உங்களுக்கு வரும். இப்போது பறக்க முயற்சி செய்து விழுந்து விட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்…….
எனவே , கூட்டை விட்டு வெளியில் வந்தாலும் பறக்க முயற்சிக்க வேண்டாம். கிளைகளில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்றது தாய் காகம்." சரி" என குஞ்சுகள் கேட்டுக்கொண்டன.சில நாட்கள் சென்ற பின்………..
ஒரு நாள் ஒரு ஒரு குஞ்சு மட்டும் கூட்டில் இருந்து வெளியில் வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டு வெளி உலகைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
வானில் பறக்கும் பறவைகளை எல்லாம் பார்த்த குஞ்சு காகம் தானும் பறக்க முயற்சித்தது .கிளைகளில் தாவித்….தாவி. பறக்க முயற்சி செய்தது.அதை கவனித்த மற்றொரு குஞ்சும் வெளியில் வந்தது.தானும் தாவித்…தாவி…. பறக்க முயற்சி செய்தது.
இறக்கைகள் சரியாக வளராத நிலையில் இருந்த அந்த குஞ்சு காகம் தடுமாறி கீழே விழுந்தது .மேலே பறக்க முடியாமல் தன் தாயை கா..கா… என அழைத்த வண்ணம் இருந்தது.
தன குஞ்சுவின் குரல் கேட்டு பறந்து வந்த தாய் காகமும் தந்தை காகமும் கரைந்து கொண்டே இருந்தன.பக்கத்தில் வசித்த காகங்கள் எல்லாம் கூட்டமாக வந்து விட்டன .குஞ்சு காகத்தால் பறக்க முடியவில்லை.
இதைக் கவனித்த அந்த வீட்டு அம்மா குஞ்சு காகத்தை தூக்கி கிளையில் வைத்தார்கள். தனது கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டது குஞ்சு காகம்.
தாய் காகம் மறுபடியும் புத்தி சொன்னது,."இன்னும் உங்களுக்கு பறக்கும் அளவிற்கு இறக்கைகள் வளரவில்லை, பறக்க முயற்சிக்காதீர்கள்."என மீண்டும் எச்சரித்தது காகம்.
"சரி" என கேட்டுக்கொண்ட குஞ்சுகள் மறுநாள் தாய் காகம் வெளியில் போன சமயம் பார்த்து கிளையில் வந்து அமர்ந்து கொண்டன.பறவைகள் பறப்பதை பார்த்த குஞ்சு காகம், நான் இன்று நன்றாக பறந்து விடுவேன்’என்றது.
‘வேண்டாம்’ என்றது மற்ற குஞ்சுகள்.’நேற்று நீ பிழைத்ததே இந்த வீட்டுக்கார அம்மா உன்னை எடுத்து இங்கு விட்டதால்தான் ,நம் அம்மா காகம் நம்மை எச்சரித்ததை மறந்து விட்டாயா?
"தாய் சொல் தட்டவேண்டாம் "அவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்வார்கள் .,என்றது மற்றொரு குஞ்சு.
இதை எல்லாம் கேட்காத குஞ்சு காகம் இறக்கையை அடித்து பறந்தது.அடுத்த நிமிடமே தரையில் வந்து விழுந்தது.மேலே மேலே பறக்க முடியாமல் தாவித்தாவிச் சென்று…கழிவு நீரில் விழுந்து விட்டது.
இறக்கைகள் எல்லாம் நனைந்த நிலையில் தாவிச் செல்லவும் முடியாமல் ,பறக்கவும் முடியாமல் தவித்தது.
தாய் காகமும், மற்ற காகங்களும் கா…கா…என கத்தி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்தில் குஞ்சு காகம் கழிவு நீரில் தன் உயிரை விட்டது.
அதைப் பார்த்த மற்ற குஞ்சுகள் கண்ணீர் விட்டன. "தாய் சொல்லைக் கேட்ட" குஞ்சுகள் கூட்டில் பத்திரமாக இருந்தன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
இது ஒரு பழமொழி. வல்லவனுக்குக் கிடைக்கக் கூடிய சிறு துரும்பைக் கூட அவனுடைய வல்லமை காரணமாகச் சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பது இந்தப் பழமொழியின் நேர் பொருள். இப்பொருளை உணர்த்துவதற்கான சூழல்களில் இந்தப் பழமொழி பயன்படுத்தப்படும். இந்தப் பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை வருமாறு.
இராமரும் சீதையும் காட்டில் தங்கி இருந்தனர். வனவாசம் முழுவதையும் வனத்தில் தான் கழிக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உணவினை இலக்குவன் தான் காட்டில் சேகரித்துக் கொடுக்க வேண்டும்.
ஒரு நாள் அவன் போயிருந்தான்-காய் கனிகளைச் சேகரிக்க. ஒரு மரத்தடியில் சீதை இராமனது மடியில் தலை சாய்ந்திருந்தாள். அவர்கள் தம்மை மறந்து இருந்தனர்.
அப்போது அங்க வந்த சயந்தன் சீதையின் அழகைப் பார்த்து மயங்கிப் போனான். அவளை அடைய வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவன் காக்கை வடிவம் எடுத்து மரத்தில் அமர்ந்தான். அவளை எப்படியாவது தொட்டால் போதும் என்று துடித்தான்.
அவளது மார்புச் சேலை விலக, சயந்தன் சட்டென்று இறங்கி மார்புப் பக்கம் கொத்தினான். லேசாக அவள் பதறினாள். இராமனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வில் மட்டும் இருக்க அம்பில்லை. உடனே தரையில் உள்ள புல்லைக் கிள்ளி வில்லில் மாட்டி எய்தான். சயந்தனின் ஒரு கண் துளைக்கப்பட்டது. அவன் மறைந்து போனான்.
சீதை அவனிடம் ‘அம்பில்லாமல் எப்படி எய்தீர்கள்’ என்று கேட்டாள். அவனோ ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்று சொல்ல அவளுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதுவே பின்பு பழமொழி ஆயிற்று.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
3 எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை
‘எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லை யென்றானாம்’ இந்தப் பழமொழியின் நேர் பொருள் தெளிவாக உள்ளது. தேவையில்லாமல் ஏதேனும் பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் ஒருவரைச் சுட்டும்போது இப்பழமொழி பயன்படுத்தப்படும். இப்பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை வருமாறு.
“ஒருவர் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் தொல்லை தாங்க முடியவில்லை. கடன்காரர்கள் தினமும் வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவர் அவ்வப்போது ஓடி ஒளிந்து கொள்வார்.
ஒரு நாள் அவர் வீட்டு வாசலில் இருக்கும் போது தூரத்தில் கடன்காரர்கள் வருவதைப் பார்த்து விட்டார். அவ்வளவு தான் வீட்டுக்குள்ளே புகுந்து குலுக்கைக்கு (குலுக்கை - நெல் கொட்டப் பயன்படும் அமைப்பு) உள்ளே ஒளிந்து கொண்டார். தன் மகனிடம் கடன்காரன் விசாரித்தால் ‘அப்பா இல்லை எனச் சொல்லி விடு’ என்று எச்சரித்து விட்டார்.
கடன்காரன் கதவைத் தட்டினான் பையன் எட்டிப்பார்த்தான். வந்தவர் ‘தம்பி! அப்பா இருக்காங்களா’ன்னு கேட்டான்.
காட்சி
உடனே மகன் டக்கென்று “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” என்று சொல்லிவிட்டான். வந்தவன் யோசித்தான். ‘வீட்டில் இல்லை என்று சொல்லாமல் குதிருக்குள் இல்லை’ என்று சொல்கிறானே! ஏதோ தப்பு இருக்கிறதே என்று குலுக்கைக்குள்ளே பார்த்தால் ஐயா அகப்பட்டுக் கொண்டார்.
சொல்லத் தெரியாமல் உளறுகிறவனுக்கு இதுவே பாடமாயிற்று.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
4. பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை ஆசை
சித்ராபூர் என்ற கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இருந்தனர்; அவர்கள் வறுமையில் வாடினர்; வழி தெரியாது ஏங்கினர். ஒரு சாமியாரைக் கண்டனர். அவர் ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து காளி தேவியைப் பூஜியுங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.காளி தேவி பிரசன்னமானாள்; அன்பர்களே! உங்கள் பக்தியை மெச்சுகிறேன். என்ன வேண்டும் ? என்று வினவினாள்.
அவர்கள் சொன்னார்கள்: இன்பமும் செல்வமும் வேண்டும் என்று. அவள் உடனே நான்கு தாயத்துகளைக் கொடுத்து இதை ஒவ்வொருவரும் தலையில் வைத்துக்கொள்ளுங்கள். வடக்கு நோக்கிச் செல்லுங்கள். ஒவ்வொருவர் தாயத்து பூமியில் விழும்போதும் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து கிடைப்பதை எடுத்துச் செல்லுங்கள் என்றாள்.அவர்களும் அகம் மகிழ்ந்து உளம் குளிர்ந்து வட திசை நோக்கி ஏகினர். சிறிது தொலைவு சென்றவுடன் முதலில் ஒருவன் தாயத்து விழுந்தது. அவன் தோண்டிப் பார்த்தான். அங்கே தாமிர உலோகக் கட்டிகள் நிறைய இருந்தன. முடிந்த மட்டும் மூட்டை கட்டினான். நண்பர்களே! எனக்கு பரம திருப்தி; நான் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று புது வாழ்வு படைப்பேன் என்றான்; நண்பர்களும் ஆமோதித்தனர்.
இன்னும் கொஞ்சம் நடந்தனர் மற்ற மூன்று பேர்.
இரண்டாமவன் தலையில் இருந்த தாயத்து விழுந்தது. அவன் நிலத்தைத் தோண்டினான்; வெள்ளிக் கட்டிகள் கிடைத்தன. அவனுக்கு பரம சந்தோஷம்; நபண்பர்களிடம் விடை பெற்று சித்ராபூருக்குத் திரும்பி புது வாழ்வு வாழ்ந்தான்
இதற்குள் மற்ற இருவருக்கும் களைப்பு மேலிட்டது; பொழுதும் சாய்ந்து கொண்டிருந்தது; இருந்தும் தலையில் தாயத்து இருந்ததால் முன்னேறினர்
வெகு தொலைவு சென்றபின்னர் மூன்றாமவன் தாயத்து தரையில் விழுந்தது. அங்கே தோண்டினான். நிறைய தங்கக் கட்டிகள் இருந்தன. அவன் சொன்னான்
இதோ பார்! கொஞ்ச நேரத்தில் இருண்டு விடும்; சூரியன் மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான்; நீ முடிந்த மட்டும் உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொள்; நான் முடிந்தவரை எனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறேன் என்றான். ஆனால் நான்காமவன் கேட்கவில்லை அவனுக்குப் பேராசை; இனியும் போனால் ஞ் வைரக் கட்டிகள் கிடைக்கும் என்று எண்ணினான்
மூன்றாவது ஆள் வணக்கம் சொல்லி விடை பெறவே நான்காமவன் பயணத்தைத் தொடர்ந்தான். வெகு தொலைவு சென்ற பின் தாயத்தும் தலையில் இருந்து விழுந்தது. ஆசையோடு தோண்டினான்; வெறும் இரும்புக் கட்டிகளே இருந்தன; பொழுதும் சாய்ந்தது. இரும்பைத் தூக்கிக் கொண்டு இனியும் நடக்க முடியாது என்று வெறும் கைகளோடு வழீ தெரியாமல் தட்டுத் தடுமாறி கிராமத்தை நோக்கி நடை போட்டான்.கிராம மக்களுக்கு பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கவும் அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே; கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள் என்பதற்காக இக்கதைகயைச் சொல்லுவர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
-5. ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’
சுழியா= சுழித்துக் கொண்டு
வரு புனல் = ஓடும் வெள்ளத்தில்
இழியாது = இறங்காது
ஒழிவது = நீங்க வேண்டும்.
தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திம்மப்பனும், ராமப்பனும் அதை வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்.
ஆசை யாரை விட்டது?
ராமப்பன்: ஏய், ஏய் திம்மப்பா! அதோ பார், அதோ பார்; ஒரு பெரிய கம்பளி மூட்டை;அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருள் இருக்கலாம்; நீ போய் எடுத்து வா; பங்கு போட்டுக் கொள்ளலாம்—என்றான்.
திம்மப்பன்:– ஆமாம், அண்ணே! இன்று நாம் நரி முகத்தில் முழித்திருப்போம். நமக்கு இன்று அதிர்ஷ்டம்தான்; இதோ நான் நீந்திப் போய் அதை எடுத்து வருவேன்; 60 சதம் எனக்கு; மூட்டையில் 40 சதம் உனக்கு என்று சொல்லிக் குதித்தான் தண்ணீரில்!
உயிரையும் பொருட்படுத்தாது அந்த கறுப்பு மூட்டையைக் கைப்பற்றினான். ஆனால் அது கம்பளி மூட்டை அல்ல; வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கரடி! அதுவும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததால் திம்மப்பனை இறுகப் பிடித்துக் கொண்டது. திம்மப்பன் பலத்தை எல்லாம் பிரயோகித்து விடுவிக்க முயன்றான்; இயலவில்லை.
கரையில் இருந்த ராமப்பன் கத்தினான் – திம்மப்பா! மூட்டை ரொம்ப கனமாக இருந்தால் விட்டுவிடு; பரவாயில்லை;நீ ஜாக்கிரதையாக வா! என்றான்.
திம்மப்பன் சொன்னான்: நான் விட்டு விட்டேன்; அதுதான் என்னை விட மாட்டேன் என்கிறது!; இது ஒரு கரடி – என்றான்.
ராமப்பன் கரையில் திருதிருவென முழிக்க கரடியும் திம்மப்பனும் நதி வழிப் பயணத்தைத் தொடந்தனர்.
ஆசைக்கு அளவே இல்லை; மேலும் ஆசை கண்களை மறைக்கும்;
ஆசையை ஒரு முறை நாம் பற்றிக் கொண்டால் அது நம்மை விடாது; அது நம்மைப் பற்றிக் கொண்டு அலைக்கழித்துவிடும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
6. ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ
வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன்?
ஒரு ஊரில் ஒரு குடியானவன். அவனுக்கு இரண்டு புதல்விகள்; ஒருவருக்கு உள்ளூரிலேயே திருமணம் முடிந்தது. மற்றொரு மகள், அயலூரிலுள்ள ஒரு சோழியனுக்கு வாக்குப்பாட்டாள். காலம் உருண்டோடியது. கிழக் குடியானவன் இறந்தான்; மூத்த மகளின் கணவனும் இறந்தான். அவளது தங்கையோ அடுத்த ஊரில் கணவனுடன் சுகமாக வாழ்ந்து வந்தாள். மூத்த மகளுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தாள்.
தினமும் இரண்டு படி அரிசி சமைத்து உண்பாள்; அப்படியும் பசி தீராது. யாரிடமும் சொல்லவும் வெட்கம். ஆகையால் காரணத்தை அறியவில்லை.
ஒரு நாள் அயலூரிலுள்ள அவளுடைய தங்கை, தன்னுடைய அக்காளைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தாள். அக்காளும் வயல் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்தாள். அன்று தனது தங்கையும் பார்க்க வந்திருக்கிறாளே என்று கருதி, இரண்டரைப் படி அரிசியை எடுத்தாள்
தங்கை சொன்னாள்,
“முதலில் விளக்கேற்றிவிட்டு சமை; இருட்டில் சமைக்கக்கூடாது. மேலும் என் வீட்டில் நான் விளக்கு வெளிச்சத்தில்தான் சாப்பிடுவேன்” என்றாள்.
அடுத்ததாக, அவள் பகன்றாள்,
“இது என்ன இரண்டரைப் படி அரிசி; இதில் பத்துப் பன்னிரெண்டு பேர் சாப்பிடலாமே! உனக்கு என்ன பைத்தியாமா?”
இதற்கு அக்காள் மறு மொழி நுவன்றாள்,
“இதோ பார் நான் தினமும் இரண்டு படி அரிசியில் சோறாக்குவேன்; நீ வேறு வந்திருக்கிறாய்; அதற்காக கூடுதல் அரைப்படி சேர்த்தேன் . என்னிடம் விளக்கிற்கு எண்ணெய் வாங்கும் அளவுக்கு காசு பணம் கிடையாது. நான் பாட்டுக்குச் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கி விடுவேன்.”
தங்கை சொன்னாள்,
“எனக்கு சோறு கூட வேண்டாம்; விளக்கு இல்லாமல் ஒரு நிமிடம் கூட இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டேன். பூச்சி, பொட்டு, பாம்பு வந்தால் என்ன செய்வத? முதலில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்து யாரிடமாவது எண்ணெய் வாங்கி வா” என்றாள்
அக்காளும் அரை மனதுடன் சென்று எண்ணெயுடன் திரும்பி வந்தால்; சாப்பிடத் துவங்கினர். கால் வாசி பானை சோறு கூடத் தீரவில்லை; இருவருக்கும் வயிறு நிறைந்தது
தங்கை சொன்னாள், “பார்த்தாயா? நான் சொன்னேன்; நீ கேட்கவில்லை; இவ்வளவு சோறு மிச்சம்”
அக்காள் சொன்னாள்,
“இதோ பார், எனக்கே புரியவில்லை; தினமும் இரண்டு படி சோறு வடித்தும் என் வயிறு காயும்; இன்று என்னவோ கொஞ்சம் சாப்பிட்ட உடனே பசி போய்விட்டது; எல்லாம் நீ வந்த முஹூர்த்தம் போலும்” என்றாள்
அப்போது திடீரென்று ஒரு சப்தம்
“சொக்கா சொக்கா சோறுண்டோ?
சோழியன் வந்து கெடுத்தாண்டோ”
வா நாம் போவோம்– என்று.
உடனே அக்காள் கேட்டாள்,
‘ஏய், யார் அங்கே? யார் சொக்கன்?’
அப்போது ஒரு குரல் ஒலித்தது,
“நான் தான் சொக்கன்; நான் ஒரு பேய்; நானூம் எனது நண்பனான பேயும் விளக்கில்லாத வீட்டுக்குப் போய் சாப்பிடுவோம். இதனால் அந்த வீட்டில் அதிகமாக சமைப்பார்கள்; இன்று ஒரு சோழியன் அயலூரில் வந்து கெடுத்துவிட்டாள் என்று என் நட்புப் பேயிடம் செப்பினேன். நாங்கள் இருவரும் வேறு வீட்டுக்குப் போய் விடுகிறோம்”.
இதக் கேட்ட அக்காளுக்கும் தங்கைக்கும் ஒரே ஆச்சர்யம், அதிசயம்
அன்று முதல் அவள் அக்காள், வீட்டில் விளக்கு ஏற்றாமல் சமைப்பது இல்லை; எல்லோரும் சாப்பிடும் அளவு சோறுண்ட பின் அவள் வயிறும் நிறைந்தது; வாழ்வும் சிறந்தது.
இதுதான் “சொக்கா சொக்கா சோறுண்டோ?
சோழியன் வந்து கெடுத்தாண்டோ”
---------------------------------------------------------------------------------------------------------------------------
7. சுவத்துக் கீரையை வழித்துப் போடடி, சுரணை கெட்ட வெள்ளாட்டி –
இதை ‘மூன்று செவிடன் கதை’ என்றும் வழங்குவர்.
ஒரு ஊரில் ஒரு மஹா செவிடன் இருந்தான். அவன் மனைவி, அவனைவிடச் செவிடு; அணுகுண்டு வெடித்தாலும் காதில் விழாது! இவர்கள் வீட்டில் ஒரு வழக்கம் உண்டு; திங்கள் என்றால் கீரை மசியல், செவ்வாய் என்றால் வாழைக்காய் கறி, புதன் என்றால் கத்தரிக்காய் பொடித்துவல், வியாழன் என்றால் பூசணிக்காய் கூட்டு … என்று. இருவருக்கும் அவ்வளவு ஞாபக சக்தி. நாள் தவறாமல் அதற்குரிய கறி, கூட்டு!
ஒரு நாள் நமது செவிட்டுக் கதா நாயகன் சாப்பிட அமர்ந்தான். அன்றும் கீரை மசியல்; அதற்கு முதல் நாளும் கீரை மசியல்! சூரியன் கிழக்கே உதிக்கத் தவறினாலும் சமையல் ‘மெனு’ MENU மாறாத வீட்டில் பூகம்பம்! வந்ததே கோபம்; ஏனடி! இன்றும் கீரை மசியல்? உனக்கு ஸ்மரணை தப்பிவிட்டதா? என்று பல சுடு சொற்களைப் பெய்து வசை மாரி பொழிந்தனன்; அவளும் கணவன் சொற்களைக் குறிப்பாலும், உதட்டசைவாலும் ஊகித்து விளக்கம் கொடுத்தாள்; அடி அசடே! என்னை எதிர்த்துவேறு பேசக் கற்றுக் கொண்டு விட்டாயா என்று மேலும் சீறினான். வீட்டை வீட்டு வெளியேறினன்; அப்படிச் செல்லும் முன், நமது கதாநாயகன் இலையில் பரிமாறப்பட்ட கீரையை எடுத்து சுவரில் எறிந்தனன்.
முதல் காட்சி முடிந்தது;
இரண்டாவது காட்சி எங்கு தெரியுமா? ஊர் மன்றத்தில்! அவன் கோபக் கனலோடு ஒரு ஆல மரத்தடியில் உட்காந்தனன்; அங்கே இவ்விருவரையும் விட மஹா மஹா செவிடு ஒன்று வந்தது; வாலறுந்த ஒர் கன்றுக் குட்டியுடன் வந்த அந்த இடையன், “ஐயா, என் மாடு தொலைந்துவிட்டது;கன்று மட்டும்தான் இருக்கிறது; இதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மாட்டைப் போய்த் தேடிக் கண்டு பிடிக்கிறேன்” என்று செப்பினன். அவன் நுவன்றது நமது கதாநாயகனுக்கு வேறு எண்ணத்தை உண்டாக்கியது; காதில் விழாததால் வந்த குறை அது. கன்றுக் குட்டியின் வாலை அறுத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, காம்பன்சேஷன் COMPENSATION (நஷ்ட ஈடு) கேட்கிறான் என்று அவன் நினைத்தான். ஆகவே அவன் சொன்னான்:
சீ, சீ; எனக்கும் இந்தக் கன்னுக்குட்டிக்கும் சம்பந்தமே இல்லை; நான் எப்படி வாலை அறுக்க முடியும்? என்று அவன்
அவன் கைகளை ஆட்டி வாதாடியதை இடையன் செவிடன் தவறாகப் புரிந்தனன்; ஓஹோ மாடு இந்தப் பக்கம் போனதாகச் சொல்கிறாயா: நான் மட்டும் மாட்டைக் கண்டுபிடித்தால் உனக்கு இந்தக் கன்றுக் குட்டியையே பரிசாக அளிப்பேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டனன். நமது கதா நாயகனோ பயந்து உளறத் துவங்கினன்; ஐயஹோ! ஊர்ப் பஞ்சாயத்துத் தலவரை அழைத்து பஞ்சயத்துச் செய்யப் போகிறாயா? Please! ப்ளீஸ் வேண்டாம் என்று கெஞ்சினான்.
இதை எல்லாம் ஒரு மஹா போக்கிரி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது; இரண்டும் செவிடு; ஒன்று சொல்லுவது மற்றொன்றுக்கு விளங்காமல் பயந்து நடுங்குகிறது. நாம் இதில் நல்ல ஆதாயம் அடையலாம் என்று நினைத்து. இரண்டு பேரிடமும் போய் ஒருவனைத் தனியாக அழித்துச் சென்று உரத்த குரலில் டமாரம் அடித்தான்.
இதோ பார்! நீ கன்றுக் குட்டியின் வாலை அறுத்ததாகக் குற்றஞ்சாட்டி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்ட அந்த மாடு மேய்க்கும் இடையன் முயல்கிறான்; நீ ஓடி விடு; நான் அவனை சமாளிப்பேன் என்றான்.
அடுத்தபடியாக அந்த இடையனிடம் சென்று, நீ கவலைப் படாதே; முதலில் போய் மாட்டைத் தேடிக் கண்டுபிடி; அவன் கன்று போதாது; கூடுதல் பணமும் வேண்டும் என்கிறான். நீ போய்த் திரும்பி வருவதற்குள் நான் அவனை சமாதானம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி அவனையும் ஒட்டினான்.
இருவரையும் வெவ்வேறு திசையில் ஓட்டிய பின்னர் அந்தக் கன்றுக்குட்டியுடன் கம்பி நீட்டினான்.
காட்சி மூன்று:
அவன் விட்டிற்குத் திரும்பி வருவதற்குள் அவன் மனைவி சுவற்றில் வழிந்த கீரையை எல்லாம் சுத்தப் படுத்திவிட்டு, மிகுந்த உணவைச் சாப்பிட்டு விட்டு, சட்டி முதலிய பாத்திரங்களை அலம்பிவிட்டு, “என் பிராண நாதா! எங்கே போனீர்? நாளை முதல் நாள்தோறும் MENU ‘மெனு’வை மாற்றாமல் சமைப்பேன்; இது ஸத்யம்” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பசியுடன் வீடு திரும்பிய கதா நாயகன் சாப்பிடும் பலகையில் அமர்ந்து சாப்பாடு போடு என்றனன்; இவளதைக் குறிப்பால் உணர்ந்து ஜாடையாகச் சொன்னாள் –எல்லாம் காலி என்று; அலம்பிவைத்த பாத்திரங்களையும் கவிழ்த்துக் காட்டினள்;
அவன் சொன்னான்,
அது கிடக்கட்டும் ஒரு புறம்; சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என் சுரணை கெட்ட வெளாட்டி என்று.
------------------------------------------------------------------------------------------------------------------------
8. வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் — என்ற தமிழ்ப் பழமொழியைப் பலரும் அறிவார்கள்; ஆனால் இதன் பின்னாலுள்ள சுவையான கதையை அறிந்தோர் சிலரே. இதோ கதை:-
அம்மாஞ்சி என்ற பிராஹ்மணன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி வல்லாள கண்டி மற்றும் அவனுடைய அம்மா, மற்றும் மாமியார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பம்.
வல்லாள கண்டியின் பெயரைக் கேட்டாலேயே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் கண்டுகொள்ளலாம்; சரியான சிடுமூஞ்சி; அடங்காப்பிடாரி.
வீட்டில் தினமும் ரணகளம்தான்; த்வஜம் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதல்; சண்டை சச்சரவு அன்றாடக் காட்சிகள்! குறிப்பாகச் சொல்லப் போனால் அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாஞ்சி பிராஹ்மணனின் அம்மாதான்
அசட்டு அம்மாஞ்சியால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய அம்மாவும் பார்த்தாள்; இனி வீட்டை விட்டு ஓடுவதே ஒரே வழி என்று சிந்தித்தாள்; செயல் பட்டாள்;
ஆந்தைகள் அலறும், நாய்கள் ஓலமிடும் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடினாள்.
‘ஓடினாள், ஓடினாள், கிராமத்தின் எல்லைக்கே ஓடினாள்’
அங்கே ஒரு காளி கோவில். அதில் ஓய்வு எடுத்தாள்.
நள்ளிரவுக்குப் பின்னர் ‘’கிலிங் கிலிங்’’ என்ற சப்தம். கிழட்டு அம்மணி நிமிர் ந்து பார்த்தாள். அங்கே ஸ்வரூப சுந்தரியாக காளி தேவி காட்சி தந்தாள்.
‘அம்மணி! ஏது வெகுதூரம் வந்துவிட்டீர்? என்ன சமாச்சாரம்?’ என்று வினவ, கிழட்டு அம்மணியும் செப்பினாள் தன் துயரக் கதைகளை.
காளி மொழிந்தாள்:
கவலைப் படாதே! ஒரு மாம்பழம் தருகிறேன்; அதைச் சாப்பிடு; ‘’பெரிய மாற்றம்’’ ஏற்படும் என்றாள்.
அவளும் கவலையை மறந்து விடிவு காலத்தை (பொழுது விடியும் காலத்தை) எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.
இதற்குள் அம்மாஞ்சி வீட்டில் ஒரே களேபரம்;அம்மாவைக் காணாது அம்மாஞ்சி- அசட்டு அம்மாஞ்சி–துடியாய்த் துடித்தான்
இதென்னடா கலிகாலம்! ‘பெத்த மனசு கல்லு, பிள்ளை மனசு பித்து’ என்று பழமொழி மாறிவிட்டதே.
ஓடினான் ஓடினான் ஊரின் எல்லைக்கே ஓடினான். அங்கே பராசக்தி அமர்ந்திருந்தாள்- அதான் அவனுடைய கிழட்டு அம்மா!
‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே. அன் புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’, என்று பாடி அவளை நமஸ்கரித்தான்.
வீட்டிற்குத் திரும்பி வருமாறு இறைஞ்சினான்.
அவளும் ‘நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்’ என்று பாடி மாம்பழத்தைக் காட்டி சாப்பிடு என்றாள்.
அம்மா, அது அரிய பெரிய கனி; நீயே உண்ணு என்று சொல்லி அவளைத் தோளின் மீது போட்டுக்கொண்டான். அவளும் மாம்பழத்தைச் சாப்பிட்டாள்.
அம்மாஞ்சிக்கு கொஞ்சம் ஆச்சர்யம்; அம்மாவின் சொர சொர தோல் வழு வழு என்பது போல ஒரு உணர்வு; ஓஹோ! களைப்பின் மிகுதியால் வந்தது என்று எண்ணினான். மேலும் மேலும் குமரிப் பெண்ணின் கைகள் போட்ட உணர்வு தோன்,,,ரவே திரும்பி அம்மாவின் முகத்டைப் பார்த்தான; அவள் சொர்ண சுந்தரியாக மாறி ஸ்வர்ணம் போல ஜொலித்தாள்; வீட்டில் போய் இறக்கும் போது அவனுடைய கிழட்டு அம்மா இளம் குமரி ஆக மாறி இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் மகிழ்ச்சி. எல்லாக் கதைகளையும் வல்லாள கண்டி கேட்டாள்; பொறாமைத் தீயில் சதித்திட்டம் தீட்டினாள்.
இரவு நேரத்தில் தனது அம்மாவை- அதாவது அசட்டு அம்மாஞ்சியின் மாமியாரை- வீட்டை வீட்டு ஓடும்படி துர் புத்திமதி சொன்னாள்; அவளும் இசைந்தாள் காளி கோவிலில் தஞ்சம் புகுந்தாள்; காளியும் தோன்றினள்; ஏன் அம்மா இங்கு வந்தாய் என்று கேட்க, அவளும் உரைத்தாள்– வீட்டில் துக்கம் தாளவில்லை என்று.
எதிர்பார்த்தது போலவே காளியும் மாம்பழம் தந்து உரைத்தாள்: இதைச் சாப்பிடு ‘’பெரிய மாற்றம்’’ வரும் என்று.
அந்தக் கள்ளியும் அவசரம் அவசரமாக மாம்பழத்தை உண்டாள். இதற்குள் வல்லாள கண்டி தனது அம்மாவைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி அம்மாஞ்சியை எஃகினாள். அவனும் விரைந்தான்.
மாமியாரைக் காளி கோவிலில் கண்டான்
கண்டேண் மாமியாரை! என்று ஆனந்தித்தான். தோளின் மீது சவாரியும் கொடுத்தான். அவள் தோல் சொர சொர என்று மாறிக்கொண்டு வந்து எடையும் கூடியது.
திரும்பிப் பார்த்தான்; சிரிப்பை அடக்க முடியவில்லை; மாமியார் அரைக் கழுதையாக மாறி இருந்தாள்; வீட்டிற்குள் ஓடிப் போய் அவளை தொப் என்று போட்டான்; அவள் முழுக் கழுதையாகக் காட்சி தந்தாள்
‘’கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்ணுக்கினியன கண்டேன்
ஊர் மக்கள் அனைவரும் வாரீர்
அரிய காட்சியைப் பாரீர்’’ —
என்று ‘மனதுக்குள்’ பாடிக்கொண்டான்.
அம்மாஞ்சிக்கு சந்தோஷம்; அவன் அம்மாவுக்கும் சந்தோஷம்! ஆனால் மாமியாருக்கு துக்கம்; வல்லால கண்டிக்கு பெரும் துயரம்.
ஊர் முழுதும்– குறிப்பாக குழாய் அடியில் பெண்களிடையே ஒரே பேச்சு– வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்- என்று.
-------------------------------------------------------------------------------------------------------------------------
9. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தான். அவன் மஹா கஞ்சன். எவ்வளவோ பணம் இருந்தும் அவனுக்கு ஊரில் நல்ல பெயர் இல்லை. ஒரு தந்திரம் செய்தான். ஒரு பெரிய மாளிகை கட்டி அதில் பத்து வாசல்கள் வைத்தான். ஒவ்வொரு வாசலுக்கும் எண்ணை (நம்பர்) எழுதி அந்த எண் படி பணம் தரப்படும் என்ற விநோத அறிவிப்பை வெளியிட்டான். ஒரு சந்யாசிக்கு இவனுடைய தந்திரம் புரிந்தது. இவன் உண்மையான கொடையாளி அல்ல. பெயர் எடுப்பதற்காக இப்படிச் செய்கிறான் என்று எண்ணினார். அவனை அம்பலப்படுத்த எண்ணம் கொண்டு ஒரு தந்திரம் செய்தார்.
அவர் முதல் வாசல் வழியாகச் சென்று ஒரு ரூபாய் தானம் பெற்றார். இரண்டாவது வாசல் வழியாகச் சென்று இரண்டு ரூபாய், மூன்றாவது வழியாகச் சென்று மூன்று ரூபாயென்று பத்து வாசல் வழியாவும் சென்று 55 ரூபாய் பெற்றார். கப்பல் வியாபாரிக்கு ஒரே எரிச்சல்.
பின்னர் இரண்டாவது முறை முதல் வாசலில் நுழைந்தார். கப்பல் வியாபாரி கோபத்தில் கத்தினான்: நீ எல்லாம் ஒரு சந்யாசியா? பணத்தின் மீது இவ்வளவு ஆசை ஏன்? சீ! சீ! வெளியே போ – என்றான். உடனே சந்யாசி சிரித்துக் கொண்டே உன் உண்மை ஸ்வரூபத்தைக் கட்டி விட்டாயே. உன்னை அம்பலப்படுத்தவே நான் இப்படி வந்தேன். இந்தா நீ கொடுத்த 55 ரூபாய் என்று அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டுப் போனார். இந்தச் செய்தி ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது.
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
ஒரு ரூபாய், ஒரு ரூபாயாக எடுத்துக் கொடுத்தாலும் கஞ்சப் பிரபு, கொடையாளி ஆக முடியுமா? என்று ஊரே சிரித்தது.
வான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடிய கதையாக முடிந்தது.
10. சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்
காஞ்சிக்கு அருகில் 300 ஆண்டுகளுக்கு முன் சீவரம் என்னும் ஊரில் ஒரு பிராமணன் வசித்து வந்தார். அவருக்கு திடீரென ஹரிஜனங்களுடன் சேர்ந்து வசிக்க ஆசை வந்தது. வேதம் ஓதுவதை கைவிட்டு அவர்கள் சேரிக்குச் சென்று ஒரு குடிசை போட்டு வசிக்கலானார். பிராமணர்களுக்கு அவர் மேல் கடுங் கோபம். ஆகையால் அவரை ஜாதிப் ப்ரஷ்டம் (விலக்கி வைத்தல்) செய்தனர். சேரியில் உள்ள பள்ளர்கள் பறையர்களோவெனில் இவரை கொஞ்சம் தள்ளியே வைத்தனர். அவர் கதை இரண்டுங் கெட்டான் நிலை ஆனது.
இரு ஜாதியினரும் விலக்கி வைக்கவே அவர் ஆற்றோரமாக ஒரு குடிசை போட்டு வசித்தார். வயதானபோது யாரும் அருகாமையில் இல்லாமல் இறந்தார். இப்பொழுது இவருடைய உடலை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்று சர்ச்சை எழுந்தது. பிராமணர்களோ, ஹரிஜனங்களோ இறுதிச் சடங்கை முன்னின்று நடத்த விரும்பவில்லை.
ஊர்ச் சபையார் வேறு வழியின்றி அருகாமைக் க்ராமத்தில் இருந்து ஒரு குயவனை அழைத்து வந்தனர். அவன் ஈமக் கிரியைகளை செய்துவிட்டுப் போனான். இதிலிருந்து ஒரு பழமொழி உருவானது: சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்!
--------------------------------------------------------------------------------------------------------------------------
11. கதை கேட்ட நாயை ……………. அடி!
ஒரு ஊரில் ஒரு அம்மையார் தனிமையில் வாழ்ந்தார். கணவரும் இல்லை- குழந்தைகளும் கிடையாது. ஆனால் அன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தார். பல வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். முதலில் நாய்க்கு உணவு படைத்துவிட்டு தானும் சாப்பிடுவார்.
ஒரு நாள், அந்த நாய் மிகவும் அதி காலையில் எழுந்து பசிக்கிறது, அம்மா! சோறு போடுங்கள் என்றது. அவள் வீட்டிலோ அரிசியோ தானியமோ இல்லை. நாய் சொன்னது, அம்மா! அடுத்த வீட்டு அம்மணியிடம் அரிசி கடன் வாங்குங்கள். நான் சாப்பிட்ட உடனே போய் பிச்சை வாங்கி வருகிறேன். அந்த அரிசியை அவரிடம் இன்றே கொடுத்து விடலாம்.
அவளும் அப்படியே செய்தாள். நாயும் சொன்னபடியே சாப்பிட்டு விட்டு வாயில் பிச்சைப் பாத்திரத்தைக் கவ்விக் கொண்டு வீடு வீடாகச் சென்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். வழக்கமாகப் போடும் பிச்சையைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பிச்சை இட்டனர். அது எடை தாங்காமல், பக்கத்திலுள்ள செட்டியார் கடையில் கொடுத்தவுடன் அவர் அதற்கான பணம் கொடுத்தார். நாய் மீண்டும் ஒரு ரவுண்டு போனது.
பக்கத்தில் வாரச் சந்தை (மார்க்கெட்) கூடி இருந்தது. ஒரே கூட்டம். நாயும் பிச்சைப் பாத்திரத்துடன் சென்றவுடன் மக்கள் எல்லோரும் அதிசயமாக அதைப் பார்த்துவிட்டு, காசை அள்ளி வீசினார்கள். நாய் அதைத் தூக்க முடியாமல் சுமந்து சென்றது. சந்தையில் ஒரு ஓரத்தில் மக்கள் கூட்டமாக நின்று ராமாயண கதாகாலேட்சபம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தனர். அன்று அவர் சொன்ன கதை — சீதாப் பிராட்டியிடம் அனுமன் மோதிரம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த சூளாமணியை வாங்கிச் செல்லும் கட்டம். இது போன்ற தருணத்தில் எல்லோரும் பாகவதருக்கு மோதிர, நகைகள் வாங்கித் தருவர். அது முடியாதவர், அவர் தட்டில் காசு போடுவர்.இதை எல்லாம் வேடிக்கை பார்த்த நாய் , கதை கேட்ட உற்சாகத்தில், தனது பிச்சைப் பாத்திரத்தில் இருந்த பணம், தானியம், எல்லா வற்றையும் ராமாயண பாகவதர் தட்டில் கொட்டியது. எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து நாயின் பக்தியைப் பாராட்டினர்.
இதற்குள் எஜமானி அம்மா வீட்டில் பலரும் நாயின் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர். அடீ! இனிமேல் உனக்கு ஒரு குறையும் இராது. உனது நாய் ஒரு வருஷத்துக்கான பத்தைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அடியே! இனிமேல் உன் நாயையே பிச்சைக்கு அனுப்பு. நீ பணக்காரி ஆகிவிடுவாய்.
இப்படி எல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நாய் வாலைக் குழைத்துக் கொண்டு ஆவலுடன் வந்தது. அவளும் மிக ஆசையோடு நாயை வரவேற்று உபசார மொழிகள் கூறி என்ன இது? பிச்சைப் பாத்திரம் காலியாக இருக்கிறது? என்று கோபத்தோடு கேட்டாள். நாய், தான் கதை கேட்ட விஷயத்தையும் எல்லோரைப் போலத் தானும் பாகவதருக்கே எல்லாவற்றையும் தானம் கொடுத்ததாகவும் பெருமையாகச் சொன்னது.
அவளுக்கிருந்த கோபம் பெரிதாக வெடித்தது. நாயைக் கண்டபடி திட்டி, கதை கேட்ட நாயைச் செருப்பால அடி – என்று சொல்லி நாலு அடிபோட்டாள். நாய் வெளியே ஓடிப் போய்விட்டது.
இதுதான் தமிழில் “கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி” – என்ற பழமொழிக்குக் காரணமாம்!
-----------------------------------------------------------------------------------------------------------------------
12. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
காட்டுப் பகுதியில் உள்ள தன் வீட்டில் ஒரு விவசாயி மாடு ஒன்றை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த மாடு காணாமல் போய்விட்டது. மாடு காணாமல் போய்விட்டதே என விவசாயி கவலையில் வருந்தினார். அந்த மாட்டைத் திருடிச் சென்றவனைப் பழிவாங்க வேண்டும் என்று ஆத்திரத்தில் துடித்தார்.
மாடு காணாமல் போனது பற்றிக் கடவுளிடம் முறையிட்டார் விவசாயி. அப்போது கடவுள் அங்கு வந்தார். கடவுள் உனக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார்.
ஆத்திரத்தில் அந்த விவசாயி கடவுளிடம், “நான் ஆசையாக வளர்த்த மாட்டை யாரோ திருடிச் சென்று விட்டார்கள். அந்த மாட்டைத் திருடியது யாராக இருந்தாலும் அவனை உடனே இங்கே வரவழைக்க வேண்டும்” என்று உதவி கேட்டார்.
அதற்குக் கடவுள், “பக்தனே, அந்த மாடு உனக்கு வேண்டுமா? அதை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மாடு காணாமல் போனதற்குக் காரணமானவர்கள் யார் என்று கேட்காதே” என்றார்.
ஆனால் விவசாயி கேட்கவில்லை. “கடவுளே! நான் ரொம்பவும் கோபத்தில் இருக்கிறேன். மாட்டைத் திருடியவனைப் பழிவாங்கினால்தான் என் மனம் ஆறும். அதனால், திருடியவனை இங்கு வரவழையுங்கள்” என்று மீண்டும் பிடிவாதமாகக் கேட்டார்.
“சரி, நீ கேட்கின்ற வரத்தைத் தருகிறேன். ஆனால், பின்னர் நீ வருத்தப்படக் கூடாது” என்றார். அந்த விவசாயி அதற்கு ஒத்துக்கொண்டார்.
“ இதோ நீ கேட்ட வரத்தைப் பிடி. மாட்டைத் திருடிச் சென்றவன் உன் பின்னால் நிற்கிறான், பார்” என்று விவசாயியிடம் கூறினார் கடவுள்.
உடனே கோபத்தில் விவசாயி திரும்பிப் பார்த்தார். புலி ஒன்று அங்கே நின்று கொண்டிருந்தது. புலியைப் பார்த்தவுடன் பழிவாங்கும் கோபம் மாயமாய் மறைந்தது. உயிர் பயம் கவ்விக்கொண்டது. “அய்யோ கடவுளே காப்பாற்று!” என்று அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார் விவசாயி. புலியும் அவரைத் துரத்தியது.
இந்தக் கதையில் வரும் விவசாயி சரியாக நடந்து கொண்டாரா? இல்லை அல்லவா? தான் ஆசையாய் வளர்த்த மாட்டைத் தாருங்கள் என்றுதானே கடவுளிடம் அவர் கேட்டிருக்க வேண்டும்? ஆனால், அவ்வாறு அவர் கேட்கவில்லை. ஆத்திரம் தான் வேலை செய்தது. அது அவருக்கு அழிவைத் தந்தது.
எனவே, கோபத்தை எப்போதும் தவிர்க்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12 (2) ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
ஓர் ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது.கணபதிசர்மா என்று ஒரு அந்தணர் அந்தக் கோவிலில் பூஜை செய்து வந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தினமும் இறைவனை மனமுருகப் பிரார்த்தித்து வந்தார்.அவர் மனைவியும் விரதங்கள் தானங்கள் என்று செய்து வந்தாள்.ஆனாலும் இவர்களுக்குப் பிள்ளையில்லை.
வீட்டில் இருக்கையில் ஒரு மாலைவேளையில் கணபதியின் மனைவி முன் ஒரு சிறிய குட்டி கீரிப்பிள்ளை வீட்டுக்குப் போகத் தெரியாமல் நின்றது. அதைப் பார்த்த அந்தணர் மனைவி அதற்குப் பாலும் சோறும் வைத்தாள் .பசியுடன் இருந்த அந்த கீரி பாலைப் பருகிப் பசியாறியதும் அங்கேயே படுத்துக் கொண்டது.
சிலநாட்களில் அந்தக் கீரிப் பிள்ளை அந்த வீட்டின் செல்லப் பிள்ளையானது.கணபதிசர்மாவும் அவர் மனைவியும் அந்தப்
பிள்ளையைத் தங்கள் சொந்தப் பிள்ளையாகவே நினைத்து வளர்த்து வந்தனர்.
சுமார் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.இப்போது கணபதிசர்மாவுக்கு ஒரு அழகிய ஆண்குழந்தை பிறந்திருந்தது.
அந்தக் குழந்தையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் கணவனும் மனைவியும்.கீரிப்பிள்ளையும் அக்குழந்தையுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது.
ஒருநாள் கணபதிசர்மா கோவிலில் பூஜைக்குப் போயிருந்தார்.வீட்டில் சமைப்பதற்குத் தண்ணீர் இல்லை என்று குடத்துடன் ஆற்றுக்குக் கிளம்பினாள் அவர்மனைவி
ஆற்றுக்குப் புறப்படுமுன் கீரியிடம் "குழந்தை தொட்டிலில் தூங்குகிறான்.பத்திரமாகப் பார்த்துக் கொள்.நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்."என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.
அவள் சென்ற சற்று நேரத்தில் கீரிப் பிள்ளையும் தொட்டிலின் கீழேயே அமர்ந்து கொண்டது.கணபதிசர்மாவும் பூஜையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.அதே நேரம் குடத்தில் நீர் மொண்டு கொண்டு அவர் மனைவியும் வீட்டின் முன் நின்றாள். இருவரும் வீட்டின் முன் நின்ற கீரிப்பிள்ளயைப் பார்த்துத் திடுக்கிட்டனர்.
அவர்கள் செல்லமாக வளர்த்த கீரிப்பிள்ளை வாயில் ரத்தம் ஒழுக நின்றிருந்தது.மிகவும் பரபரப்பாக இங்குமங்கும் அலைந்து கொண்டு இருந்தது.இவர்களைப் பார்த்ததும் அதன் பரபரப்பு அதிகமானது.வாயில் ரத்தம் ஒழுக நின்ற கீரியைப் பார்த்து கணபதியின் மனைவி தன குழந்தையைக் கடித்துக் கொன்றுவிட்டது என்ற முடிவு செய்தாள்."ஐயோ என் குழந்தையைக் கொன்று விட்டதே" என்று அலறினாள்..
இந்த வார்த்தைகளைக் கேட்ட கணபதிசர்மா "என் குழந்தையைக் கொன்று விட்டாயா, நீயும் ஒழிந்து போ"என்ற படியே அருகே நின்றிருந்த மனைவியின் இடுப்பிலிருந்த குடத்தைப் பிடுங்கி கீரியின் மேல் போட்டார்.விசுக்கென்ற சத்தத்துடன் அது நசுங்கித் தன உயிரை விட்டது.
கணவன் மனைவி இருவரும் வீட்டுக்குள் ஓடிப்பார்த்தனர்.குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.அப்பாடா என்று இருவரும் மகிழ்ச்சிப் பெருமூச்சு விட்டனர்.உடனே கீரியின் நினைவு வந்தது.அதன்வாயில் எப்படி ரத்தம் வந்தது என்று சுற்றிப் பார்த்தபோது தொட்டிலின் மறுபக்கம் ஒரு பெரிய நாகப் பாம்பு இறந்து கிடந்தது.அது இரண்டு மூன்று துண்டாகக் கிடந்தது.
இப்போதுதான் கணபதிசர்மாவிற்குப் புரிந்தது.
"ஐயோ' என்ன காரியம் செய்துவிட்டேன்.என்குழந்தையைக் கடிக்கவந்த நாகத்தைக் கொன்று விட்டு அதைச் சொல்லத்தானே வாயிலில் வந்து நின்றது அந்தக் கீரிப்பிள்ளை.
ஆத்திரப்பட்டு என் செல்லப் பிள்ளையை நானே கொன்று விட்டேனே "என்று புலம்பி அழுதான்.
"ஐயோ நான் தான் அவசரப்பட்டு குழந்தையைக் கொன்று விட்டாயே என்று அலறினேன்.அதனால்தானே நீங்கள் கீரியைக் கொன்றீர்கள் நான் தான் தவறு செய்தவள் "என்று அழுதாள் அவர் மனைவி.
ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டார் மீண்டு வருவாரோ.அவர்கள் அவசரப் பட்டதற்கு உரிய தண்டனை அடைந்துவிட்டனர்.
'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல் இவர்களின் இந்த செயல் அமைந்து விட்டது. எனவே இந்தக் கதை மூலம் எப்போதும் அவசரமோ ஆத்திரமோ படாமல் நிதானமாக ஒரு செயலைச் செய்யவேண்டும் என்னும் அறிவுரையை நாமும் கற்றுக் கொண்டோம் அல்லவா.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12 (3)ஆத்திரக்காரனுக்கு....குறுங்கதை
திண்டிவனம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கார் விரைந்து கொண்டிருந்தது. எத்தனையோ கனரக வாகனங்களை முந்திக்கொண்டு
,சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டிருந்தார் ஓட்டுனர் சடகோபன். வேகத்தை ரசித்தபடியே முன்சீட்டில் தொழிலதிபர் பார்த்தீபன் பயணித்துக்கொண்டிருந்தார்.
கார் தீவனூரை நெருங்கியபோது, திடீரென்று சாலையின் குறுக்கே ஒரு வயதானவர் ஓடினார். சடகோபன் சடாரென பிரேக் பிடித்தும், வண்டி நிலை தடுமாறி, அந்த பெரியவரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கää பார்த்தீபன் பதறியடித்துக்கொண்டு " யோவ் ! யோவ் ! மோதிடப்போறீயா. . . " என கூக்குரலிட்டார். எப்படியோ சமயோசிதமாக நிலமையை சமாளித்து,பெரியவரை மோதாமல் காரை நிறுத்திவிட்டு, பெருமூச்சிவிட்டார் சடகோபன்.
கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு இறங்கி ஓடி" யோவ்! சாவுகிராக்கி. . . இந்நேரம் செத்து பரலோகம் பொயிருப்ப. நீ செத்து ஒழியரதுமில்லாம என்னையுமில்ல கோர்ட்டு கேசுன்னு அலைய வச்சு சாகடிச்சிருப்பே ! " அடிக்குரலில் கத்திக்கொண்டே வந்த கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல்,அந்த பெரியவரை ஓங்கி ஒரு அரைவிட்டார், பார்த்தீபன். அடுத்த நொடி அந்த பெரியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
13. பேராசை… பெரு நஷ்டம் – சிறு கதை
ஒரு பிச்சைக்காரன். கோவில் வாசலில் பிச்சையெடுப்பது அவனது வழக்கம். நல்ல குரல் வளத்துடன் பாடுவான்.
ஒரு நாள். பக்திப் பாடல்களை உருக்கமாக பாடிக்கொண்டிருந்தான். மகிழ்ந்துபோன கடவுள் அவன் முன் தோன்றினார். பிச்சைக்காரன் மகிழ்ந்துபோனான். வணங்கினான். கடவுள் பேசினார்.
‘பக்தா! உன் பக்தி என்னை கவர்ந்தது. உனக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று கேள்!’ என்றார் கடவுள்
பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி.
‘கடவுளே மிக்க நன்றி. என்னுடைய வேண்டுதல் இன்றுதான் பலித்திருக்கிறது. நீங்கள் இரண்டு வரங்கள் அளிக்க வேண்டும்’ என்று வேண்டினான் பிச்சைக்காரன்.
‘சரி. தருகிறேன்’ என்றார் கடவுள்
‘எனக்கு இந்த பிச்சைக்கார வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. அதனால், முதலாவது வரத்தினால் என்னை இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனாக மாற்றிவிடுங்கள்’ என்று கேட்டான்.
‘அப்படியே ஆகட்டும். இரண்டாவது வரத்தை கேள்’ என்றார் கடவுள்.
‘கடவுளே! இத்தனை காலம் எல்லோரும் பணக்காரர்களாக இருந்தார்கள். நான் ஏழையாக இருந்தேன். அதனால், இரண்டாவது வரத்தினால், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஏழையாக்கிவிடுங்கள்’ என்று கேட்டான்.
கடவுள் சிரித்துக்கொண்டே, ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொன்னார்.
பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.
‘பக்தா! நீ கேட்ட வரங்களை வழங்கிவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த வரங்கள் பத்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நாளை காலை விடியும்போது நீதான் இந்த நாட்டின் பெரிய பணக்காரன்’ என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள்.
‘பத்து நாட்களுக்கு மட்டும் வரம் கொடுக்கும் இவரெல்லாம் ஒரு கடவுளா’ என்று வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி.
அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. சில்லறைக் காசுகளை சேமித்துவைக்கும் பெட்டியை திறந்து பார்த்தான். பத்து செப்புக்காசுகளே இருந்தது.
‘இன்றோடு நம் பிரச்னைகள் தீர்ந்தது. விடிந்ததும் பெட்டி நிறைய தங்கக் காசுகள் நிரம்பி வழியப்போகிறது. வசதியான வீடு ஒன்று வாங்க வேண்டும். குதிரையும், தேரும் வாங்க வேண்டும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டான். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான்.
பொழுது விடிந்தது.
வேகமாக எழுந்து பெட்டியை திறந்து பார்த்தான். அதிர்ந்துபோனான். பெட்டியில் முதல் நாள் இருந்த அதே பத்து செப்புக்காசுகளே இருந்தது.
‘கடவுள் நம்மை ஏமாற்றிவிட்டாரா?’ என்று யோசித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தான். நாடெங்கும் ஒரே பரபரப்பு. காரணம், ஒரே நேரத்தில் நாட்டில் இருந்த அனைவரின் பணம், ஆபரணங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. பிச்சைக்காரனுக்கு விஷயம் புரிந்தது. ‘நாட்டில் இருப்பவர்களிடம் ஒரு பைசாகூட இல்லை. அதனால், பத்து செப்புக்காசுகள் வைத்திருக்கும் தானே பணக்காரன்’.
ஆம், பிச்சைக்காரன் பணக்காரன் ஆனான்.
விடிந்ததும் வீட்டில் பணமழை பெய்யும் என்று நினைத்த பிச்சைகாரனுக்கு வருத்தமே மிஞ்சியது. தற்போது கிடைத்திருக்கும் இந்த பணக்கார பட்டத்தால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. கோவில் வாசலுக்கு சென்று பிச்சை எடுக்கவும் வழியில்லை. காரணம் மக்களிடம் பணம் இல்லை.
அவன் யோசிக்கத் தொடங்கினான்.
‘நல்ல வேளை பத்து நாட்களில் மக்களிடம் பணம் வந்துவிடும். பிறகு நமக்கு பிச்சை கிடைக்கும். ஒருவேளை இதுவே நிரந்தரமாக இருந்தால் நம் நிலை என்னவாகும்? தப்பித்தேன். கடவுளுக்கு நன்றி’ என்றவாறு பத்து நாட்கள் முடியட்டும் என்று காத்திருந்தான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
14. சிறுதுளி...... பெருவெள்ளம்....
சேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்காலத்துக்குத்தானே!! அதற்காக இன்றைய தேவையை குறைச்சுக்கிட்டு, கஞ்சத்தனம் பட நான் ரெடி இல்லைன்னு சொல்றவங்க ஒரு பக்கம், கைல காசு மிஞ்சினாத்தானே சேமிக்க என்பவர் ஒரு பக்கம்னு அவங்க அவங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப சேமிப்பை பத்தி ஒரு கருத்து வெச்சிருப்பாங்க.
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் சினிமா கவுண்டமணி மாதிரி இருப்பதும் கூடாது, ஓவரா செலவு செய்வதும் கூடாது. சேமிப்பு என்பதை நம்முடைய முதல் செலவா வெச்சுக்கிட்டா பழக்கம் தானா வரும்.
சேமிப்பை பத்தி தகுந்த வல்லுனர்கள் தான் முறையா சொல்ல முடியும். நான் என்னுடைய அனுபவத்தை, போன பதிவில் சொல்லியிருந்தபடி அக்காவிடம் கற்றதை இங்கே பகிர்கிறேன். தெரியாதவங்க தெரிஞ்சிக்க உதவும். தவறா ஏதும் சொல்லியிருந்தா மன்னிச்சிட வேண்டிக்கறேன்.
நம் வருமானத்தை 3ஆ பிரிச்சுக்கணூம். முதல் பாகம் தற்போதய செலவுகளுக்கு, இரண்டாவது எதிர்கால சேமிப்புக்கு, இன்னொன்று எதிர்பாராத செலவுகள், ஊர்சுற்றுதல் போன்றவைக்கு வெச்சுக்கணும்னு மறைந்த எங்கள் அந்தேரி தாத்தா சொல்வார். இப்படி பிரிச்சு தனியா வெச்சு செலவு செஞ்சா கையிருப்பு குறையாம வரவுக்குள்ள செலவை அடைக்கலாம் என்பது என் அனுபவம்.
எதிர்கால சேமிப்பில் FIXED DEPOSIT, RECURRING DEPOSIT, MUTUAL FUND, PF, PPF, EPF, SHARES இதெல்லாம் அடங்கும். சேமிப்புக்கணக்குல பணத்தை போட்டு வைப்பதற்கும் ஃபிக்ஸட்டில் போட்டு வைப்பதற்கும் வட்டிவிகித வித்தியாசம் இருக்கும்னு பலருக்கும் தெரியும். அதனால சேமிப்பு கணக்கில் வைப்பதை விட, ஃபிக்ஸட்டில் வைப்பதால அந்தப்பணத்திற்கு நமக்கு கிடைக்கும் வட்டி கூடுதல் வருமானம். ஷேர்கள், ம்யூச்சுவல் ஃபண்டுகள் தேர்ந்த வழிகாட்டிகளின் உதவியோட கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செய்யணும். (எனக்கு பயம். அதனால தள்ளியே இருக்கேன்)
பிஎஃப், இபிஎஃப், வேலை செய்யும் இடத்திலேயே சம்பளத்தில் பிடித்துக்கொண்டுதான் கொடுப்பாங்க. நம்ம கண்ணுக்குத் தெரியாம சேமிப்பு நடக்குது. மேலும் விருப்பம் இருக்கறவங்க வங்கிகளில் தனியா PPF, அக்கவுண்ட் ஆரம்பிச்சு அதுல ஒரு குறிப்பிட்ட தொகையை போட்டுக்கிட்டு வரலாம். 16 வருஷத்துக்கு அதுலேர்ந்து பணம் எடுக்க முடியாது. அதற்கப்புறம் எடுக்கலாம் என்பதால் எதிர்காலத்துல ரொம்ப உதவியா இருக்கும்.
நமக்கா சரியா புரியலைன்னா நாம நாடவேண்டியது நல்லதொரு ஆடிட்டரை அல்லது கன்ஸல்டண்ட்டை நம்ம வருமானவரி கணக்கு வழக்குகளை அவங்களையே பாத்துக்க சொல்லிட்டா அவங்க வரிகட்டுவது எல்லாம் பாத்துப்பாங்க. அவங்க கிட்டயே வருமான வரிவிலக்கு பெற சேமிக்க விருப்பம் இருக்குன்னு சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி இன்னன்ன இடத்துல பணத்தை சேமியுங்கன்னு சொல்வாங்க.
நாமதான் கேக்கணும். சிலர் சேமிக்க நினைக்க மாட்டாங்க. ஏன்னா, சேமிக்கும் தொகை கூட இருக்கும். வரி கட்டுவது அந்த தொகையோட பாக்கும் போது கொஞ்சமா தெரியும். வரியை மட்டும் கட்டிட்டா கைச்செலவுக்கு பணம் இருக்கும்ல என நினைப்பது ரொம்ப தப்பு. இப்போ பலரும் தனியார் துறையில் தான் வேலை. முன்ன மாதிரி அரசாங்க உத்தியோகத்தில் கூட பென்ஷன்லாம் கிடையாது. ஆக சம்பாதிக்கும் காலத்திலேயே சேமிச்சு வெச்சுக்க வேண்டியது அவசியம்.
வருமான வரி விலக்குக்காக சேமிப்புன்னாலும், அது வருஷத்துக்கு 1 லட்சம் தான். அதுக்கு மேல வரி கட்டித்தான் ஆகணும். ஆனா வருஷத்துக்கு 1 லட்சம் சேமிச்சா நமக்கு எவ்வளவு லாபம்!! இதை கணக்கு செஞ்சு பாத்துக்கிட்டா தெரியும். வருஷத்துக்கு ஒரு லட்சம்னா, மாசம் 8500 ரூவாகிட்ட தனியா ஆர்டி போட்டுக்கிட்டு வந்தாலே போதுமே.
எனக்குத் தெரிந்த வருமான வரி விலக்குக்காக சேமிக்க கூடிய
15. தன் கையே தனக்கு உதவி
மணி சீருடையை தேடினான் காணவில்லை."அம்மா பள்ளி சீருடை எங்கே காணோம்.எடுத்துக் கொடுங்கள் " எனக் கத்தினான் மணி.
அடுப்படியில் பரபரப்பாக சமையல் செய்து கொண்டு இருந்த சீதா, மகன் கூப்பிட்ட சத்தம் கேட்டு சாம்பார் பாத்திரத்தை இறக்க முற்பட்டதால் கைதடுமாறி சாம்பார் சிறிது கையில் கொட்டிவிட்டது.
"அம்மா" என அலறியவள் ,தண்ணீரில் கையைக் கழுவிவிட்டு மகன் இருந்த இடத்திற்கு வலியைப் பொறுத்துக் கொண்டு வந்தவள்….
‘என்ன, மணி ”என்றாள்.
‘அம்மா சீருடையை எடுத்துத் தாருங்கள் ‘ என்றான் மணி.
நான்கு நாட்கள் உடுத்திய துணிகள் அழுக்காக இருந்தது.அழுக்கு கூடையில் போட்டு இருந்த சீருடையில் கொஞ்சம் வெள்ளையாக இருந்ததை எடுத்து கைகளால் அழுத்தி உதறி தன் மகனிடம் நீட்டினாள் சீதா.
”என்னம்மா , அழுக்குத் துணியை எடுத்துக் கொடுக்குறீர்கள் ” என்றான் மணி.
”நாலு நாட்களாய் இந்த வேலைக்காரி கோமதி வராமல் துணி துவைக்கவில்லைடா ,என் செல்லமில்ல… இன்னைக்கு மட்டும் இதை போட்டுக்க ” என்றாள் கெஞ்சலாக சீதா.
”சரி கொடுங்க நீங்களாவது துவைத்து போட்டு இருக்கக் கூடாதா ? நான் ஒழுங்கீனமாக போய் நிற்கவேண்டும். ஆசிரியர் என்னைத் திட்டவேண்டும். அதைப் பார்த்து மற்ற மாணவர்கள் சிரிக்க வேண்டும்.எல்லாம்….. ‘ எனக் கூறியவன் முடிக்காமல் வாங்கிப் போட்டுக் கொண்டான்.
சீதா எப்படியோ சீருடை பிரச்சினை முடிந்தது என்று எண்ணியபடி சமையல் அறைக்கு நழுவினாள்.
சாப்பாடு எடுத்து வைக்கப் பாத்திரத்தைப் பார்த்தாள், கழுவாத பாத்திரங்கள் நிறைந்து கிடந்தது. அதில் தேடி கழுவி எடுத்தவள் ,அரக்கப் பரக்க சாதத்தைக் கொடுத்து மணியை கிளப்பிக் கொண்டு இருக்கும் போதே,,,பள்ளிப் பேருந்து வந்து விட்டது,
மணி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடினான்.
அதற்குள் அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என கோபி வந்து விட்டான். அவனுக்கும் தோசை சுட்டு எடுத்து வைத்தவள் வியர்த்து விறுவிறுத்து இருந்தாள்.
தோசை வைக்கும் போது கைகளில் கொப்பளித்து இருப்பதைப் பார்த்த கோபி ‘என்ன காயம்’ என்றான்.
”சாம்பார் கொட்டி விட்டது” என்றாள் சீதா.
‘இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லையா? சொல்லாமல் கொள்ளாமல் நின்று விடுகிறாள் .நீ கிடந்து அல்லல் படுகிறாய்’ என்ற கோபி…..
…தொட்டதற்கு எல்லாம் வேலைக்காரி உதவியே தேவை என்று பழகிக் கொண்டால் அவள் வரவில்லை என்றால் இப்படித்தான் வீடு தலைகீழாக மாறிவிடும் ‘.
”தன் கையே தனக்கு உதவி” ,பிறர் கையை எதற்கு எடுத்தாலும் எதிர் பார்த்தால் இப்படி
தொல்லைகளும், மனகஷ்டங்களும் வரத்தான் செய்யும் ” என்றவன் அலுவலகம் கிளம்பினான்.
அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.வேலைக்காரி இருக்கிறாள் என்ற எந்த வேலையும் தான் செய்வதில்லை. அதனால் , அவள் வராத நாட்கள் எல்லாமே போராட்டம் தான் என நினைத்தாள் சீதா, தன் கொப்பளித்த கையைப் பார்த்துக் கொண்டு.
16. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
ஓர் ஊரின் ஏரிக்கரையோரத்தில் நிறைய மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன.
அதில் ஒரு குரங்குக்கு ஓர் ஆசை ஏற்பட்டது. ஒரு சிறிய தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சின்னச் சின்ன செடிகளாகப் பார்த்து அவற்றையெல்லாம் பிடுங்கி வந்து தனது தோட்டத்தில் நட்டு வைத்தது.
ஒரு மாதம் ஆயிற்று. செடிகள் வளரவே இல்லை! தாய் குரங்கிடம் போய் கேட்டது, ""இவ்ளோ நாளாச்சு... ஒரு செடிகூட வளரவே இல்லையே ஏன்?''
""அதுவா, செடிகளை நட்டால் மட்டும் போதாது. அதற்குத் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும்!'' என்றது தாய்க்குரங்கு.
அவ்வாறே குட்டிக் குரங்கு நிறையத் தண்ணீர் ஊற்றி வந்தது. அதன் பிறகு ஒரு மாதம் கழிந்தது.
""இப்பவும் செடிகள் முளைக்கவே இல்லையே, அது ஏன்?'' என்று தாய்க்குரங்கிடம் போய்க் கேட்டது குட்டிக் குரங்கு.
தாய் சொன்னது, ""நீ செடிகளுக்கு நிறையத் தண்ணீர் ஊற்றுகிறாய்... அதனால் அதன் வேர்கள் தண்ணீரால் அழுகிப் போயிருக்கும்...''
""அப்படியா, ஒரு வேர்கூட அழுகவில்லையே?'' என்றது குட்டி.
""அது எப்படி உனக்குத் தெரியும்?''
""ம்ம்...ம்... நான்தான் அந்தச் செடிகளைத் தினமும் பிடுங்கிப் பார்க்கிறேனே!''
""அடப்பாவி... தினமும் பிடுங்கிப் பிடுங்கி நட்டால் எப்படிச் செடிகள் முளைக்கும்? குழந்தாய்... எதுவும் அளவோடு கொடுத்தால்தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். செடிக்கு மட்டுமல்ல... நமது வாழ்க்கையிலும்தான்... என்ன புரிகிறதா?''
""புரிகிறது... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று மானிடர்கள் சொல்வார்கள்... அதுதான் இதுவா?'' என்று அம்மாவிடம் கொஞ்சும் குரலில் கேட்டது குரங்கு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
17. ஆழம் தெரியாமல் காலை விடாதே
ஒரு சமயம் தேவலோகத்தில் இருந்த எல்லா தெய்வங்களும் பூவுலகில் ஒரு தலத்திற்கு வந்தார்கள். அவர்கல் வந்த இடத்துக்கு அருகே ஒரு புறா விளையாடிக்கொண்டிருந்தது. எல்லா கடவுள்களும் வருவதை அது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. கடைசியாக எமதர்மன் அங்கே வந்தார். வந்தவர் ஒரு நிமிடம் நின்றார். புறாவை உற்றுப்பார்த்தார். பிறகு புன்னகை ஒன்றை செய்துவிட்டுப் போனார்.
அவ்வளவுதான் இதுவரை மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த புறா பதறிப்போனது. கலங்கி அழத்தொடங்கியது. அதன் உற்சாகம் குறைந்துபோனது தற்செயலாக அதனைப் பார்த்தார் பட்சி ராஜன் கருடன். அன்போடு நெருங்கி அதன் கலக்கத்துக்கான காரணத்தைக் கேட்டார். காலதேவன் என்னைப் பார்த்து சிரித்தார் அவரது பார்வையும் சிரிப்பும் எனக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பதை சொல்லாமல் சொல்வதுபோல் தோன்றுகிறது தழுதழுக்கச் சொன்னது புறா.
சின்னப்பறவையின் கலக்கம் கருடனுக்கு வருத்தத்தைத் தந்தது. அதனால் அந்தப்புறாவுக்கு உதவ முடிவு செய்தார். பயப்படாதே இங்கே இருந்து பல லட்சம் மைல் தொலைவில் இருக்கும் ஒரு தீவில் உள்ள மரம் ஒன்றின் பொந்தினுள் உன்னைக் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன் எமதர்மனே நினைத்தாலும் உன்னைத் தேடி அங்கே வர பல ஆண்டுகள் ஆகும். அதனால் நீ தைரியமாக இரு சொன்ன கருடன் தன் ஆற்றலால் அந்தப் புறாவை இரண்டே நிமிடத்தில் சொன்ன இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்பினார்.
சற்று நேரத்தில் கடவுள்கள் எல்லோரும் வந்தவேலை முடிந்து திரும்பினார்கள். அப்போது எமதர்மன் கருடனை அர்த்தம் தொனிக்கப்பார்த்தார். லேசாக சிரித்தார். உடனே கோபம் பற்றிக்கொண்டது கருடனுக்கு என்ன எமதர்மரே என்னை என்ன புறா என்று நினைத்தீர்களோ? நீங்கள் சிரித்தால் பயந்துவிட? என்று ஆவேசமாகக் கேட்டார்.
ஊஹூம் நான் உன்னைப் பார்த்து சிரித்தது பயமுறுத்த அல்ல அந்தப் புறாவுக்கு ஒரு சில நிமிடத்தில் பல லட்சம் மைல் தொலைவில் இருந்த மரத்தின் பொந்து ஒன்றில் மறைந்திருக்கும் பூனையால் மரணம் என்பது விதி. இந்தப் புறா எப்படி அவ்வளவு சீக்கிரம் அத்தனை மைல் தொலைவிற்கு செல்லப்போகிறது என்று நினைத்துத்தான் புறாவை பார்த்து சிரித்துவிட்டுப் போனேன் ஆனால் நீயே அதற்கு வழி செய்துவிட்டதை அறிந்து இப்போது சிரிக்கிறேன்.
நன்மை செய்யப்போய் அது இப்படி ஆகிவிட்டதே ஏன் இதற்கு என்ன காரணம் என்று யோசித்தபடியே திருதிரு என விழித்தபடி இருந்த கருடன் அருகே வந்தார் திருமால். கருடா புறாவுக்கு நீ உதவ நினைத்தது நல்ல விஷயம்தான் ஆனால் அதை எப்படி செய்யவேண்டும் என்று தீர்மானித்ததில்தான் தவறு செய்து விட்டாய் எப்போதும் என் உத்தரவைக் கேட்டு நடக்கும் நீ இப்போது என் உத்தரவுக்காக சில நிமிடம் தாமதித்து இருந்தால்கூட அந்தப் புறா பிழைத்திருக்கும் திருமால் சொல்ல உணர்ந்த கருடன் தலைகுனிந்து நின்றார்.
இப்படித்தான் பலரும் தங்கள் லட்சியத்திற்காகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு அதன் முடிவு என்ன என்று தெரியாமலே செயல்படுவதும் நன்றாகத்தானே செய்தோம் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்புவதும் நிகழ்கிறது. இப்படி செயலின் ஆழம் தெரியாமல் இறங்கிவிட்டு அதில் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காகத்தான் ஆழம் தெரியாமல் காலைவிடாதே என்று சொல்லி வைத்தார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
18. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.
அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன. அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.
தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.
நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.
அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.
சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.
இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.
பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.
இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
19. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
ஒரு முனிவர் இருந்தாராம் அவருக்கு ஒரு மகன் இருந்தான் அவன் முறைபடி வேதங்களை கத்துக்க ஆசைப்பட்டானாம் தன் அப்பா கிட்ட சொல்றான் நீங்களே எனக்கு குருவா இருந்து எல்லாத்தையும் சொல்லித்தாங்க சொல்றான்.
அந்த முனிவர் அதுக்கு மறுத்து விடுகிறார் ஏன்னா குருவா இருந்தா கத்து கொள்ள வருகிறவனிடம் கண்டிப்பாக இருக்கனும் அப்பத்தான் முறைப்படி கல்வியை போதிக்க முடியும் கத்துக்க வரவனும் அந்த கண்டிப்புக்கு பணிந்து கல்வியை ஒழுங்க கத்துகனும்.
மகனிடம் கண்டிப்பு செய்ய முடியாமல் போகலாம் என்று அவர் வேறு ஒரு முனிவரிடம் அவனை கற்று கொள்ள அனுப்பினார்.
சர்தான் நம் அப்பாக்கு கூறு கொஞ்சம் கம்மி போல இருக்கு அதன் வேற இடத்துக்கு அனுப்பரார்னு நினைச்சிகிட்டான் பிள்ளை சில ஆண்டுகள் பிறகு குருகுல வாசம் முடிந்து அவன் திரும்பிவரான்.
ஆ ஒஊனு உதார் காண்பிக்கிறான் அப்பா அவனிடம் நீ என்ன கற்று கொண்டாய் ?என்னென முறைகளை தெரிந்து கொண்டாய்? இறைவனை பற்றி தெரிந்து கொண்டாயா அவன் இருப்பதை விளக்க முடியுமா ? இப்படியெல்லாம் சரமாரியா கேள்வியை அடுக்குறார்.
ஆரம்பிச்சிட்டார்யா ஆரம்பிச்சிட்டார் நொந்துகிறான் நம் புள்ளைக்கு எதுக்கும் பதில் சொல்ல வரவில்லை ஆனா எல்லாம் தெரிந்தவன் போலவே ஆக்டிங்கு கொடுக்கிறான்
அவருக்கு புரியாத மாதரி எல்லாம் பதில் சொல்லி வைக்கிறான் அப்படியா? சரி நீ சொன்னதை நிருபிக்க முடியுமா? அப்படினு ஒரு புரோஜக்டை கேக்கறாரு நம்ம புள்ளையாண்டான் இப்ப முழிக்க ஆரம்பிச்சிடான்
அப்பா முனிவர் ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீரை நிரப்பினார். மகனிடம் இரண்டு கை நிறைய உப்பு கொண்டு வரசொல்லி அந்த தண்ணியில் அதை போட்டு கலக்க சொல்லறாரு கொஞ்ச நேரம் கழித்து நீ கொண்டு வந்த உப்பு இப்ப எங்கே? என்று கேட்கிறார்.
என் கையில இருந்தது இப்ப பாத்திரத்தில் இருக்கு அப்படின்னு பிள்ளை சொல்றான்.
அதில் கொஞ்சம் எடுத்து கொடுக்க முடியுமா? என்று கேட்கிறார்.
.
லூசாப்பா நீ என்பது போல் லுக்கு விடறான் மகன்
கொஞ்சம் தண்ணியை எடுத்து அவன் வாயில் ஊற்ரி விட்டு இப்ப உப்பு எங்க இருக்கு னு? மறுபடியும் கேக்கறார் .
அது இந்த தண்ணியில் கலந்திருக்கு ஆனா காட்ட முடியாது உணரத்தான் முடியும் மகன் சொல்லறான்.
இப்ப முனிவர் சிரித்து கொண்டே அவரு புரோஜக்டை பத்தி சொல்றாரு, 'தண்ணியில் அது ஒவ்வொரு துளியிலும் சமமா கலந்திருக்கு நீ பார்க்க முடியாததை உணர முடியும் அது போல்தான் கடவுளும் கடவுள் படைப்பில் உள்ள எல்லாவற்றிலும் எல்லா ஜீவராசியிலும் அது கலந்திருக்கிறது நீ உன் கண்களால் பார்க்க முடியாது உணர வேண்டும் என்று விரும்பினால் எல்லாவற்றிலும் அதை நீ காண்பாய்'
இப்ப புள்ளைக்கு உண்மை புரியுது அப்பாவின் திறமையும் புரியுது கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்று புரியுது அடக்கமாய் வாழ கற்று கொண்டான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
20. ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்
ஒருநாள் வெளியூரில் உள்ள நண்பர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தன் மகளுக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளை நல்லவரா?அவர்கள் குடும்ப விவரங்களை விசாரித்து தெரிந்து சொல்லும்படி கூறினார்.
இனிப்பு, பழம், பூ எல்லாம் வாங்கிக் கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்குச் நண்பரும் அவரது மனைவியும் சென்றார்கள்.
மாப்பிள்ளை வீட்டினரும் நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்.மன திருப்தியுடன் அவர்களும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வரும் வழியில் ஒரு நண்பரை சந்தித்தார். எதிர்பாரதவிதமாக."என்ன இந்தப் பக்கம் " என நண்பர் நலம் விசாரித்தார்.
மாப்பிள்ளை இருக்கும் வீதியில் இருப்பது அப்போது தான் நினைவிற்கு வந்தது. நண்பரின் மகளுக்கு அந்த வீட்டுப் பயனைப் பார்த்து இருக்கிறார்கள்.என வீட்டைக் காட்டியவர்,அங்கு சென்று வந்த விவரத்தையும் கூறினார்.
‘அவர்கள் வீட்டுப் பையனா என்றவர்,’அவன் வெளி மாநிலத்தில் வேலை பார்க்கும் இடத்தில் திருமணம் செய்து குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறான்.அதை மறைத்து பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்"என்றார் நண்பர்.
மேலும் ," அவர்கள் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.பணத்தால் எதுவும் சாதிக்கலாம் என நினைப்பவர்கள்"என்றார் நண்பர்.
"கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் ." என்பார்கள்.அது போல் நல்ல சமயத்தில் நண்பரை பார்த்தது நல்லதாகப் போயிற்று., இல்லை என்றால் நாம் நல்லவர்கள் என்று சொல்லி இருந்தால், அந்தப் பெண்ணின் நிலை என்னவாகி இருக்கும்.
ஒரு புத்தகத்தை படிக்கும் போது சில பக்கங்களைப் புரட்டிப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம்.அது போல நாம் விசாரிக்க வந்த மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றி ஒரு நண்பர் கூறியதே போதும்.
"ஒரு பானை சோற்றிற்கு
ஒரு சோறு பதம்’
இனி பலரிடம் விசாரிக்க வேண்டியது இல்லை என முடிவுக்கு வந்த நண்பர் வீட்டிற்குச் சென்றார். தொலை பேசி எண்களை அழுத்தி தொடர்பு கொண்டு பேசினார்.
மறுமுனையில் நண்பர் பேசினார். நடந்த விபரத்தைக் கூறியதும் நன்றி கலந்த குரல் தழுதழுத்தது வார்த்தை.
தக்க சமயத்தில் பதம் பார்க்கப்பட்ட சோறு போல் கிடைத்த தகவலால் ஒரு பெண்ணின் வாழ்க்கை காப்பற்றப்பட்டது.
21.குரைக்கிற நாய் கடிக்காது
சுமதியின் நான்கு வீடு தள்ளி சுபா வீடு இருந்தது. இருவருக்கும் பல வகையில் ஒற்றுமை இருந்தது.
ஒரே மாதத்தில் பிறந்தவர்கள்.ஒரே வீதியில் வசிப்பவர்கள்.ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், ஒரு வேறுபாடு இருந்தது. சுமதி அதிகம் பேசமாட்டாள். சுபா பேசிக்கொண்டே இருப்பாள்.
இருவரும் நல்ல தோழிகள்.எங்கு சென்றாலும் இருவரையும் பார்க்கலாம். தனியாகப் பார்ப்பது வீட்டில் இருக்கும் போது மட்டும் தான். காலங்கள் கடந்தன…பள்ளிப் படிப்பு முடிந்தது.கல்லூரிக்கு வெளியூர் போக வேண்டும். இருவரும் வேறு….வேறு …கல்லூரியில் சேர்ந்தார்கள்.
பிரிவு என்பது முதல் முறை என்பதால் கல்லூரிக்கு போகாமல் இருந்து விடுவோமா எனக்கூட யோசித்தார்கள். படிப்பு பெண்களுக்கு அவசியம் வேண்டும் என்பதை இருவரும் உணர்ந்து இருந்ததால் பிரிவை தாங்கிக் கொண்டு கல்லூரிக்கு சென்றனர்.
கால மாற்றம் பிரிவுத் துயர் மறைந்தது.வேறு தோழிகளின் நட்பு திசை மாறியது.
சுமதிக்கு கிடைத்த தோழி மாலா .அவள் படிப்பிலும் கெட்டிக்காரி.செயல் திறனிலும் கெட்டி. இப்படி ஒரு தோழி சுமதிக்கு கிடைத்ததால் சுமதி சற்று மாறித்தான் இருந்தாள்.
கல்லூரிப் படிப்பு மட்டும் இல்லாமல் பல போட்டிகளில் கலந்து கொண்டு இருவரும் பரிசுகள் வெல்வது, பொது நல சேவை, பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம், இரத்த தானம் செய்வது என பல வற்றிலும் கலந்து கொண்டு பிறர் நலனிலும் சேவை செய்தார்கள்.
இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு தொடங்கிவிட்டது.பெண்கள் விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்காக வேறு ஊருக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்குதான் தோழி சுபா படிக்கும் கல்லூரி இருக்கிறது.சுபா வைப் பார்க்க வேண்டும்,மாலாவிற்கு சுபாவை அறிமுகப்படுத்தனும் என சந்தோச அலைகளில் இருந்தாள் சுமதி. அவர்கள் சென்ற சமயத்தில் ஒரு கல்லூரி மாணவிகள் போதைக்கு அடிமையாகி அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
இவர்கள் தவறான பழக்கத்திற்கு அடிமையானதால் அவர்கள் பெற்றோருக்கு கூட தெரியாமல் ஆசிரியர்கள் சேர்த்து இருக்கிறார்கள்.
அவர்கள் தவறை உணர்ந்து திருத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். நமது பங்கு அவர்களை திருத்துவதாக இருக்கும்,முயற்சியாக செயல்படுவோம் என ஆசிரியை கூறியதும்…
மாணவிகள் ஒவ்வொருவராக அவர்களை கவனிக்கும் பொறுப்பு, ஆறுதல் சொல்வது, மருத்துகள் கொடுப்பது அவர்களை அன்றாட பணிக்கு உதவி செய்வது என பிரித்துக் கொண்டு செயல்பட்டார்கள்.
சுமதி ஒரு அறைக்குச் சென்றால். படுக்கையில் படுத்திருந்த கல்லூரி மாணவியிடம் சென்றவள் திடுக்கிட்டாள்.
ஆம்…படுத்திருந்தது தனது பள்ளித் தோழி சுபா. அவளைப்பார்த்ததும் சுமதிக்கு அவளையும் அறியாமல் கண்ணீர் பொல பொல எனக்கொட்டியது .
‘சுபா’ என அவள் தலையை கோதியவள் தோள் பட்டையில் தன் கரங்களை பதித்தாள் சுமதி.
சுமதியின் கண்ணீர் துளி சுபாவின் மேல் பட்டதும் தன்னை உரிமையுடன் யார் தொடுவது பரிட்சியமான கரமாக இருப்பதை உணர்ந்த சுபா திரும்பினாள்.
சுமதியைப் பார்த்ததும்சுபா கண் கலங்கினாள்.” நீ எப்படி” என தணிவான குரலில் கேட்டாள்.
‘என்னை விடு ஏன் நீ இப்படி ஆனாய்” எனக்கேட்டாள் சுமதி.
”குரைக்கிற நாய் கடிக்காது” என்பார்கள். அது போல சதா பேசியே படிப்பை கோட்டை விட்டேன் .தீய நட்பு போதைக்கு அடிமையானேன் .
ஆசிரியருக்குத் தெரியவே கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்பதற்காக எங்களை திருத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் என விரக்தியான குரலில் கூறினாள் சுபா.
ஆறுதலாக அவள் கரத்தைப் பற்றிய சுமதி, ‘கெட்ட கனவாக எண்ணி மறந்து விடு. இனி நடப்பது நல்லவையாக நடக்கட்டும் எனக்கூறியவள்….
சுபா கூடவே இருந்து கவனித்துக் கொண்டாள்.தனது தோழியின் அருகாமை கிடைத்த சந்தோசத்தில் சுபா போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டதுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு புதுமைப் பெண்ணாக புத்தொளி பெற்றாள்
22. அழுதபிள்ளை சிரிக்குமாம் ; கழுதைப் பாலைக் குடிக்குமாம்
கயல் விழியை பட்டுப் புடவையில் அலங்காரம் செய்து அழைத்து வந்து நடுக் கூடத்தில் அமரவைத்தனர் .
அங்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் கூடி இருந்தார்கள் .
ஒரே ஊர் என்பதால் ஒன்பதாம் மாதத்தில் சீமந்தம் செய்தார்கள்.கயல்விழிக்கு நலுங்கு வைத்து ஆசீர்வாதம் செய்தார்கள் பெரியவர்கள் .
ஆரத்தி நீரில் கற்பூரம் வைத்து திருஷ்டி கழித்த பின் கயல்விழியை அழைத்துச் சென்று ஐந்து வகை சாதங்களைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
வந்திருந்தவர்கள் எல்லாம் திருப்தியாக உண்டு ஆசீர்வாதம் செய்து புறப்பட்டார்கள்.
கயல்விழியை பக்கத்து வீதியில் இருக்கும் தாயார் வீட்டிற்கு அழைத்துப் போனார்கள்.
மாமா மகனை திருமணம் செய்ததால் ஊர் பயணம் , பாசப்பிரிவுகள் இப்படி எதுவும் கயல்விழி அறியாத ஒன்று .
தாய் வீட்டிற்கு சென்ற பத்தாவது நாள் ஆண் குழந்தை பிறந்தது,கயல் விழிக்கு இரு வீட்டினரும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்.
குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் அழுது கொண்டே இருந்தது குழந்தை .
குழந்தையை தூக்கிய பக்கத்து வீட்டுப்பாட்டி ,குழந்தையின் காது மடல்களை நீவி விட்டுப் பார்த்தாள்.
உரம் விழவில்லை என்பதை தெரிந்து கொண்ட பாட்டி, நான் போய் மருந்து கொண்டு வருகிறேன் எனப் புறப்பட்டார்.
சிறிது நேரத்தில் வந்த பாட்டி குவளையில் ஏதோ கொண்டு வந்து சங்கில் ஊற்றி குழந்தைக்குக் கொடுத்தாள்.
வேண்டா வெறுப்பாக விழுங்கி ஒதுக்கி வைத்திருந்த பாலை துப்பியவனைப் பார்த்த பாட்டி குறும்புக்காரப் பையன் எனச் சிரித்துக்கொண்டவள்….
மடியில் கிடத்தியபடியே காலை மெதுவாக ஆட்டி தூங்க வைத்தாள். அழுது கொண்டு இருந்த குழந்தை கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தான்.
”கயல்விழி குழந்தை தூங்கி எழுந்தவுடன் உன் பாலைக் கொடுத்தால் போதும் .இனி இப்படி அழுக மாட்டான் என்ற பாட்டி எழுந்தாள்.”
”பாட்டி அது என்ன மருந்து கொடுத்தீர்கள் ”என்று கேட்டார்கள் உறவுப் பெண்கள் .
”அதெல்லாம் மருத்தவ ரகசியம் ”எனச் சொல்ல மறுத்தாள் பாட்டி .
”பாட்டி எனக்குச் சொல்லிக் கொடுங்க பாட்டி ”என ஆவலுடன் கேட்டாள் கயல்விழி .
கயல்விழியின் ஆர்வத்தைப் பார்த்த பாட்டி ”அழுத பிள்ளையும் சிரிக்குமாம் , கழுதைப் பாலைக் குடிக்குமாம் ” என்றாள்.
பழமொழியிலேயே தான் குழந்தைக்கு என்ன மருந்து கொடுத்தேன் என்பதைச் சொன்னவள் ….
”கழுதைப் பாலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் எந்த எதிர்மறை விளைவுகளும் இன்றி தடுப்பு ஊசி போல் குழந்தைகளின் நலனை காக்கிறது.”…
”தொன்று தொட்டு வரும் பழக்கமாக இன்றும் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் கொடுக்கப்பட்டு வருகிறது” .
”உன் மகன் தூங்கி எழுந்தவன் சிரித்து விளையாடுவான்.பயப்பட வேண்டாம்” என தைரியம் சொல்லி வீட்டுக்குப் புறப்பட்டாள் பாட்டி .
சிறிது நேரத்தில் சிரித்துக் கொண்டு எழுந்த மகனைப் பார்த்தவள் பாட்டிக்கு எப்படி இத்தனை மருந்துகள் தெரிகிறது என ஆச்சரியப்பட்டாள் கயல்விழி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
23. காற்று உள்ள போதே தூற்றிக்கொள்
ரகுவரன் வண்ணத் தாள்களில் சின்ன சின்னதாய் குருவி,கிளி, வாத்து,மயில் என்று பொம்மைகள் செய்து கொண்டிருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த வரதராசன் மகன் கத்திரியும், தாளுமாக இருந்த கோலத்தைப் பார்த்து மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. கோபம் தலைக்கு ஏறியது.
”படிடா என்றால் படிக்க மாட்டேன் என்கிறாய்.எப்ப பாரு கிளியும், வாத்துமா செய்து வீடு முழுக்க குப்பை போடுவது தான் மிச்சம். ஒரு பைசாவிற்கு பிரயோசனம் இருக்கிறதா?”
இப்படி இருந்தா எப்படிடா பொளைக்கப் போறே, நாலுபேரைப் போல் நல்லா படிக்கணும் ,நாள்ள வேலைக்குப் போக வேண்டும் என்ற நினைப்பே வராதாடா, ” கோபமாக கத்தியவர்…
ரகுவரன் முதுகில் இரண்டு போடு போட்டார் .செய்து வைத்திருந்த பொம்மைகளை காலால் எட்டி உதைத்தார்.
ரகுவரனுக்கு தன்னை அடிக்கும் பொது கூட வலிக்க வில்லை. ஆனால் பொம்மைகளை உதைத்தது மனதில் வலித்தது.
”கலை நயமாக தான் வடித்த பொம்மைகளைப் பார்த்து பாராட்ட வேண்டாம். இப்படி எட்டி உதைக்காமல் இருந்திருக்கலாமே ”என்று எண்ணி அழுதான் ரகுவரன்.
தோட்டத்தில் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு வந்த மேகலா,” ஏண்டா ரகு அழுகிறாய்” எனப்பதறியபடி உள்ளே வந்தாள்.
பொம்மைகள் சிதறிக் கிடப்பதையும் தன கணவர் துநிமார்றிக் கொண்டு இருப்பதையும் பார்த்த மேகலா நிலைமையை புரிந்து கொண்டாள்.
ரகுவரனை சமாதானப்படுத்திவிட்டு இறைந்து கிடைந்த பொம்மை ,தாள்களை எடுத்து ஒழுங்கு படுத்தினால் மேகலா .
அந்த சம்பவத்திற்கு பின் ரகுவரன் மனதில் ஒரு வைராக்கியம் வந்து விட்டது.இந்த பொம்மைகளை வைத்து ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்று.
அவனுக்கு பக்க துணையாக இருந்தாள் அன்னை மேகலா.
காலங்கள் கடந்தன.ஆண்டுகள் பல தாண்டியபோது ஒரு நாள் சென்னையில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம்.
புதுமையான ஓவியக்கண்காட்சியை காணத்தான் இவ்வளவு கூட்டம்,பார்த்தவர்கள் எல்லாம் பரவசப் பட்டார்கள்.
பூங்கா,கோவில்,மசூதி ,தேவாலயம்,மலை ,மலர்க்காடு இப்படி எண்ணிலடங்கா கண்ணைக் கவரும் இயற்கையாக அமைந்தற்ற்ஹு போன்ற ஓவியங்கள் கண்ணாடிப் பெட்டுக்குள் அழகாக காட்சி அளித்தது.
நல்ல விலைக்கு விற்பனையும் ஆனது. ரகுவரனை மட்டும் பாராட்டவில்லை.அவன் பெற்றோரையும் பாராட்டினார்கள்.
அவன் தந்தையின் மனமோ, கூனிக் குறுகிப் போனது.தன் தவறை எண்ணி அவர் உணர்வுகளை உணர்ந்து கொண்டான் ரகுவரன்.
அப்பா என்று அழைத்தான் .தன் உணர்வுகளில் இருந்து மீண்டு வந்த வரதராசன் ,என்ன என்பது போல் பார்த்தார்.
பக்கத்தில் வந்த ரகு இந்த அளவிற்கு நான் வளர காரணமே எனது அப்பா, அம்மாவின் ஒத்துழைப்பு தான் என்று பேட்டி கொடுத்தான்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட வரதராசன் நெகிழ்ந்து போனார். படிப்பு மட்டும உயர்வுக்கு காரணமில்லை.
குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அந்த துறையில் ஊக்கப் படுத்தினால் அந்த துறையில் அவர்கள் சாதனையாளர்களே என்றார் வரதராசன்.
”காற்று உள்ள போதே தூற்றிக்கொள்” வாழ்த்துக்கள் என கைகுலுக்கி விடைபெற்றார் பேட்டி எடுத்த நண்பர்.
24.திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்
ஒரு ஊரில் குப்புவும்,சுப்புவும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.குணங்கள் மாறுபட்டு இருந்தாலும் ,நட்புடன் இருந்தார்கள்.
குப்பு பூச்சி, பாம்பு, இவற்றை கண்டால் அடித்துக் கொன்று விடுவான்.அதில் அவனுக்கு அத்தனை சந்தோசம்.
சுப்பு உயிர்களைக் கொல்லக் கூடாது.உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்ற கொள்கை உடையவன் சுப்பு.
குப்புவிடம் எத்தனையோ முறை உயிர்களைக் கொல்லக் கூடாது என்று எடுத்துச் சொல்லியும் அவன் செவிகளில் இவை விழவில்லை.
இருவரையும் சோதிக்கும் நாள் ஒன்று வந்தது.
குளத்தில் இருவரும் குளித்துக் கொண்டு இருந்தார்கள். குளத்தில் தண்ணீர்ப் பாம்பு ஒன்று வருவதை கண்ட சுப்பு கரைக்கு வந்துவிட்டான்.
குப்புவோ..நீந்திப் போய் தண்ணீர்ப் பாம்பின் வாலைப் பிடித்து தலையைச் சுற்றி ..சுற்றி… அடித்தான்.இதை எதிர் பார்க்காத பாம்பு சீறியது.குப்பு விடவில்லை.நீந்தி கரைக்கு வந்து தரையில் சுழற்றி …சுழற்றி …அடித்துக் கொன்று விட்டான்.
இதைப் பார்த்த சுப்பு மிகவும் வருத்தப்பட்டான். மேலும் ஒரு உயிரை தேவையில்லாமல் கொன்று விட்டாயே என வருத்தப்பட்டு தனது வீட்டிற்குச் சென்று விட்டான். குப்புவும் வீட்டுக்கு கிளம்பினான்.
கொன்ற பாம்பின் துணைப் பாம்பு இதைப் பார்த்துக் கொண்டு இருந்ததை இருவருமே கவனிக்க வில்லை.
மறுநாள் குப்பு தூங்கிக் கொண்டு இருந்த போது …புஸ்..புஸ்…. என சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்தான்.
அவன் எதிரில் பாம்பு சீறியபடி நிற்பது கண்டு நிலை குலைந்து போனான்.
உடல் எல்லாம் வேர்த்து தண்ணியாக கொட்டியது. பயத்தில் கத்தக் கூட திறன் இல்லாமல் அம்மா…அம்மா…..என கத்தினான். அந்த சத்தம் அவனுக்கு மட்டுமே கேட்டது.
தனது சக்தியை முழுக்க பயன்படுத்தி அம்மா…என கத்தியவன் தன் நினைவு மறந்து அப்படியே மயக்கமானான்.
தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்த அவன் அம்மா … என்ன உடம்புக்கு என்ன செய்கிறது ,என அன்புடன் விசாரித்தாள்.
அவனைச் சுற்றி அப்பா, அம்மா,தம்பி,தங்கை அனைவரும் கவலை நிறைந்த முகத்துடன் சூழ்ந்து கொண்டு இருந்தார்கள்.
சுற்றி தன் கண்களை சுழலவிட்ட குப்பு, பாம்பு இல்லாதது கண்டு நிம்மதி மூச்சு விட்டு,தன் முன் நின்ற பாம்பு நினைவா, கனவா என யோசித்தான்.
எதுவாக இருந்தால் என்ன நம் உயிர் எவ்வளவு முக்கியம் என நான் பயந்தேன். இது போல் தானே ஒவ்வொரு உயிரும் நினைக்கும். இதை புரிந்து கொள்ளாமல் எத்தனை உயிரை கொன்றேன்.இனி எந்த உயிரையும் கொல்ல மாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்டான் மனதிற்குள் குப்பு.
”திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது எவ்வளவு உண்மை.
சுப்பு நிம்மதியாக தூங்கி எழுந்து தனது பணிகளைச் செய்து கொண்டு இருந்தான்.,
பல்லுப் போனால் சொல்லுப் போச்சு
காலை நேரம் பரபரப்பாக இருந்தது..ரகுவை பல் விளக்க பல்பசையை எடுத்துக் கொடுத்தாள் ரமா.
பல் விளக்க மாட்டேன்.பல் விளக்க மாட்டேன் என தலையை ஆட்டிய ரகு வெளியே ஓடினான்.
அவனைப் பிடித்து இழுத்து வந்த ரமா கட்டாயப்படுத்தி விளக்க ஆரம்பித்தாள்.’’அழுது கொண்டே தூ… தூ… என துப்பிக் கொண்டே அழுது கொண்டு இருந்தான் ரகு.
ஒருவழியாக பல்விளக்கி ஆகி விட்டது. அடுத்தது குளிக்க வைக்க துணியை களைந்தால் ,வேண்டாம்..வேண்டாம் என குதித்தான் ரகு.
‘’நீயே குளி’’ என்ற ரகுவை , நல்ல பையனில்லை என சமாதானம் செய்து கொண்டே ஒரு வழியாக குளியல் வேலை முடித்து வெளியில் வரும்போது மணி 7.30.
இன்னும் அரை மணிநேரத்தில் கிளம்பி ஆகவேண்டும், என்று அவசர…அவசரமாக பள்ளி சீருடை மாற்றி காலை சிற்றுண்டி ஊட்டி புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வெளியில் வருவதற்கும் பள்ளிக் கூட பேருந்து வருவதற்கும் சரியா இருந்தது.
பேருந்தில் ரகுவை ஏற்றிவிட்டு பேருந்தில் அமர்ந்த பின் கிளம்பும் போது டாட்டா காண்பித்து விட்டு உள்ளே வந்தாள் ரமா .
இது தினமும் காலையில் நடக்கக் கூடிய சம்பவம் தான்,இருந்தாலும் ,பாட்டி கல்யாணிக்கு ஏதோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.
வெற்றிலையை இடித்து பல் இல்லா வாயில் உதப்பிக் கொண்டவள் ,மனதில் தோன்றிய எண்ணத்தையும் உதப்பிக் கொண்டாள்.
மாலை நான்கு மணிக்கு வந்த ரகு, துணி மாற்றி கை,கால் கழுவி பழம் சிறிது சாப்பிட்டுவிட்டு பாட்டியிடம் விளையாட வந்தான் ரகு.
பாட்டி கல்யாணி தூக்கி உச்சி முகர்ந்து மடியில் அமர்த்திக் கொண்டவள், உதப்பி வைத்து இருந்த வெற்றிலையை துப்பி விட்டு தன் மனதில் இருந்த எண்ணத்தை கூறலானாள்.
‘’ரகு, பாட்டிக்கு எத்தனை பல் இருக்கு என்று பார் என்றாள்’’ பாட்டி.
‘’பாட்டி உங்களுக்கு பல்லே இல்லை ‘’ என்றான் ரகு கைகளை ஆட்டிக் கொண்டு .
‘பாட்டிக்கு வயசு ஆகிவிட்டது பல் போச்சு, அத்துடன் சொல் போச்சு.’…
…நீ வளரும் பிள்ளை நன்றாக பல் விளக்கி பல்லைத் தூய்மையாக வைத்துக் கொண்டால் பல் நீண்ட நாட்களுக்கு வரும்.
‘’ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி “ -என்பார்கள்
நாலடியாரிலும்,திருக்குறளிலும் வாழ்க்கைக்கான நெறி முறைகள் எல்லாம் சொல்லி இருப்பதைப் படித்தால் வாழ்க்கை உறுதிப்படுவது போல் பல்லை ஆலங்குச்சி , வேலங்குச்சியிலும் துலக்கும் போது பல் உறுதியாகும்…
…பல்பசையில் அதைத்தான் சேர்த்து இருக்கிறார்கள்.பல் உறுதிப்பட தினமும் காலை, இரவு பல் துலக்க வேண்டும். அடம் பிடிக்கக் கூடாது’’ என்றாள் பாட்டி..
பாட்டி ஏதோ கதை சொல்கிறாள் என நினைத்துக் கொண்டு ம்…ம்… என கேட்டுக் கொண்டிருந்த ரகு. தினமும் பல் விளக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் புரிந்து கொண்டான்.
மறுநாள் ரமா பல்பசையுன் வந்தாள் ரகுவிடம்.
‘’அம்மா அதைக் கொடுங்கள்.நானே துலக்கிக் கொள்கிறேன் என பல் பசையை வாங்கிய ரகு சமத்தாக பல் துலக்க ஆரம்பித்து விட்டான்.
ராமாவிற்கு ஒரே ஆச்சரியம். பாட்டியும் பேரனும் பேசியது ராமாவிற்குத் தெரியாது.அதனால் ,ரமா வியப்பாக பார்த்தாள் ரகுவை.
நீங்களும் உங்கள் அம்மாவை ஆச்சரியப்பட வையுங்கள்..சமர்த்தாக பல் துலக்கி..
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
26. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்
ஒரு ஊரில் செல்வந்தர் செங்கோடன் இருந்தார். அவருக்கு ராமு, சோமு, காமு என்ற மூன்று மகன்கள் இருந்தார்கள்.
ராமுவிற்கு திருமணமாகி அதே ஊரில் வசித்து வந்தான்.சோமு தந்தையின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டான்.
காமு வெளியூரில் படித்துக் கொண்டு இருந்தான்.
தந்தையின் செல்வத்தை ராமு சிறிது…சிறிதாக கரைப்பதிலே கவனமாக இருந்தான்.வேலைக்கு போகாமல் எத்தனை தீய பழக்கங்கள் இருக்கிறதோ அத்தனைக்கும் அடிமையாகி தன்னையும் கொஞ்சம்…கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருந்தான்.
காமு படிப்பதில் கெட்டிக்காரனாக இருந்தான்.அதனால், படித்து முடித்த கையுடன் வேலையும் தேடி வந்தது.காமு நகர் புறத்திலேயே வசித்து வந்தான்.
இந்த சூழ்நிலையில் சோமுவிற்கு திருமணம் செய்ய எண்ணிய செங்கோடன் பெண் பார்த்து முடித்தார்.திருமண வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருந்தன.
பக்கத்து கிராமத்தில் தான் பெண் வீடு அங்கு தான் கல்யாணம்.தனியார் பேருந்து பிடித்து மாப்பிள்ளை வீட்டார்,மற்றும் உயரவினர்கள் எல்லாம் கிளம்பினார்கள்.
கேலியும் ,கிண்டலுமாக பயணம் செய்ததில் அலுப்புத் தெரியாமல் ஊர்வந்து சேர்ந்தார்கள்.
மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் திருமண மண்டபம் களைகட்டியது.மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து முகூர்த்தம் வரை நல்லபடியாக முடிந்தது.
தனது மகனுக்கு தகுந்த குணவதியாக மருமகள் அமைந்ததில் செங்கோடனுக்கும்,அவர் மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
சின்னவனுக்கும் நல்லபடியாக பெண் அமைந்து விட்டால் கடமை முடிந்துவிடும் என அந்த நேரத்திலும் நினைத்துக் கொண்டனர்.
அவர்கள் எண்ணம் போல் சின்னவன் காமுவிற்கும் திருமணம் முடிந்தது.கடமைகள் எல்லாம் முடிந்தது என நிம்மதிப் பெருமூச்சு விடும் போது அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் நோயில் படுத்து விட்டார் செங்கோடன்.
ராமு,காமு இருவரும் தந்தையின் நிர்வாகத்திற்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் ஒதுங்கிக் கொண்டார்கள். தொழிலில் வேறு பின்னடைவு ஏற்பட்டது.இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வது எனத் தெரியாமல் சோமு தனி ஆளாக தவித்தான்.
சோமுவின் மனைவி திலகம்தான் தைரிய மூட்டினாள். இறைவனின் பாத அடிகளை பற்றுவோம்.வரும் தூரங்கள் அனைத்தும் போகும் என தைரியம் கொடுக்கும் தன்னம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி உற்சாகம் கொடுத்தாள்.
திலகம் கொடுத்த அன்பான நம்பிக்கையினால் இறைவனின் பாதங்களில் பணிந்து தங்கள் கடமைகளை செய்தார்கள்.
ஆச்சரியமான அற்புதம் நடந்தது. படுத்த படுக்கையாக இருந்த தந்தை குணமாகி நிர்வாகத்தை கவனிக்க வந்துவிட்டார்.இரண்டு பேரும்சேர்ந்து கடுமையாக உழைத்ததன் விளைவு நஷ்டத்தை சரி செய்து இலாபம் கிடைக்கும் அளவிற்கு உற்பத்தி பெருகியது.
திலகம் கரங்களை பற்றிக்கொண்ட சோமு,’’ இறைவனடி உதவியது போல் அண்ணன் -தம்பி உதவ வில்லை ‘’ அதற்கு வழிகாட்டிய உனக்கு என வார்த்தைகளை முடிக்க முடியாமல் நா தழுதழுத்தது.
27.அறிவே சிறந்த ஆயுதம்
ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.
அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.
அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான்.
இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.
மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.
வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார்.
இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.
வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.
மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.
மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்தனம், என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.
இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.
இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
28. தோல்வியே வெற்றிக்கு ஏணி படி
ஜாண் இவனுக்கு எப்போதும் விளையாடி கொண்டே இருக்கணும் இது அவனுடய பொழுது போக்கு ...டீவி பார்க்கனும் அப்படி ,இப்படி எந்த ஒரு ஆசையும் இவனுக்கு படிக்கும் பருவத்திலே இருந்து கிடையாது இவனுடய லச்சியம் இவனுடன் படித்த மாணவர்களை விளையாட்டில் இருந்து ஜெய்ச்சி அவர்களை போல மடல்கள் ,சர்ட்டிபிக்கட் இது போல வாங்கனும் இப்படி தான் ஒவ்வொருநாளும் அவனுடய லச்சியம் ..
ஒருநாள் ஓட்ட பந்தயம் போட்டிக்கு பெயரு கொடுத்து விட்டு அதில் சாதிக்கனும் என்ற ஒரு வெரியுடன் காத்து இருந்த ஜாண் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்கிறான் ...போட்டியாளர் விசில் எப்போது அடிப்பார் என்று காத்து இருந்தான் போட்டியாளர்,, அவர் வாயில் விசிலை வைக்கும் போதே ஜாண் எழும்பி ஓடிவிடுவான் ...இப்படியாக இரண்டு ,மூன்று முறை ஓடி விட்டான் உடனே ஓட்ட பந்தயத்தில் ஓட இருந்த ஜாணை போட்டியாளர் வெளியே தூக்கி வைத்து விட்டார் ...
மனம் உடைந்த ஜாண் வெற்றியும் ,தோல்வியும் வீரனுக்கு அழகு என்று அதை சொல்லி கொண்டு அடுத்த போட்டியில் கலந்து கொள்ள ஆயத்தமாகிறான் .நீளம் தாண்டுதல் போட்டிக்கு தனது பெயரை கொடுத்து விட்டு காத்து இருக்கிறான் ஓட்ட பந்தயம் முடிந்தது .
அடுத்த போட்டி குண்டு எறிதல் என்று போட்டியாளர் ஒலி,ஒலி மூலம் தெரிவித்தார்.
இதை கேட்ட ஜாண் சாதிக்கணும் என்ற வெரி அவனை விட்டு போய் விட்டது ஏனென்றால் அடுத்த போட்டி நீளம் தாண்டுதல் என்று முன்னரே அவர்கள் அறிவித்திருந்தார்கள் இப்போது போட்டியை மாற்றியவுடன் ஜாணுக்க மன நம்பிக்கை போய் விட்டது இப்படியாக இவன் பெயரு கொடுத்த போட்டி தொடங்கியது ...மகிழ்ச்சியுடன் புறப்பட்ட ஜாண் போட்டியில் ஆயத்தமாய் போட்டியின் உள்ளே நுழைகிறான் போட்டியாளர் அவனிடம் மூன்று முறைதான் வாய்ப்பு அதை நீ பயன் படுத்த வேண்டும் இல்லையென்றால் போட்டியில் இருந்து நீ எடுக்க படுவாய் என்று போட்டியாளர் தெரிவித்தார் .
.உடனே சரி சார் என்று முதல் முறை ஓடுகிறான் .....ஓடிய ஜாண் பவுல் கோட்டில் காலை வைத்து பவுல் ஆகிவிட்டான் ..உடனே போட்டியாளர் இரண்டாவது முறை வாய்ப்பு கொடுக்கிறார் ..இரண்டாவதும் ஓடுகிறான் பவுல் என்று போட்டியாளர் விசில் அடிக்க பயத்துடன் சென்ற ஜாணுவிடம் போட்டியாளர் எச்சரித்து விடுகிறார் இன்னும் இந்த ஒரு முறை தான் இல்லை யென்றால் போட்டியில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றார் பயத்துடன் ஓடிய ஜாண் வெற்றி பெற்று விட்டான் ஆனந்தமடைந்தான் ஜாண் எல்லை கடந்த சந்தோசம் அளவுக்கு மீறிய சிரிப்புகள் இனி அவனுக்கு ஒரு தைரியம் வந்தது எல்ல போட்டிகளிலும் சேர்ந்து ஜெய்க்கனும் என்கிற ஆவல் இவனுக்குள் வந்ததால் இது போல எல்லா போட்டிகளிலும் கலந்து வெற்றி பெருகிறான் ......
நண்பர்களே தோல்விதான் வெற்றிக்கு அடிப்படை
ஒரு முறை தோற்றவுடன் நாம் இனிமேல் நம்மலால் முடியாது என்று விலகி போக கூடாது மீண்டும்,மீண்டும் முயற்சிக்கணும் அப்போது தான் ஜாணை போல வெற்றியடைய முடியும்
29.காலம் பொன் போன்றது
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
30. உயர்வு தரும் ஒழுக்கம்..!
‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி’
திருவள்ளுவர், இந்தக் குறளில் ‘ஒழுக்கத்தால் மேன்மை கிடைக்கும் என்றும், ஒழுக்கம் தவறுவதால் பழி ஏற்படும்’ என்றும் ஒழுக்கத்தின் சிறப்பை வலியுறுத்துகிறார். கல்வி கற்கும் மாணவர்களாகிய நாம் ஒழுக்கத்தையும், கல்வியையும் இரு கண்களாக கடைப்பிடித்து வாழ்க்கைக் கல்வியை பயின்று சிறப்புற வேண்டும். ஒழுக்கத்தை காலம்தோறும் பேணிக் காக்க வேண்டும்.
நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம் ஆகும். வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வதே நாம் தலைச்சிறந்து வாழ வழிவகுக்கும். ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும். இதை முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள் மூலம் ஒழுக்கத்தை உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாக எழுதி வைத்து உள்ளனர்.
மாணவர்களாகிய நாம், நேர்மையுடன், பொறுப்புடன், சமூகப் பொறுப்பு கொண்டோராக வளர வேண்டும். ஆசிரியர்கள், பெரியோர்கள் வழிகாட்டும் பழக்க வழக்கங்களை பின்பற்றி, அறிவினால், திறமையினால் சிறந்த சிந்தனை கொண்டோராக செயல்பட வேண்டும்.
நீதி நூல்கள்:
நீதி நெறிகளை நமக்கு வலியுறுத்தும் நோக்குடன் நம் சான்றோர்கள் இயற்றிய நீதிநூல்கள் பல நீதிக்கருத்துகளை எளிய நடையில் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன. அவைகளில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், பழமொழி முதலிய நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்தவை ஆகும். இவற்றில் திருக்குறள், உலகளவில் தமிழர்களின் ஒழுக்க நெறிகளை பறைசாற்றும் ஒப்பில்லா நூலாக புகழப்படுகிறது. அதனால்தான் அதை ‘உலக பொதுமறை’ என போற்று கிறார்கள். உலக மொழிகள் பலவற்றில் மொழிப்பெயர்க்கப்பட்டு பயிலப்படுகிறது.
‘ஒழுக்கம் விழுப்பம் தரும்’ என்பது குறள் நெறி. விழுப்பம் என்றால் உயர்வு என்று பொருள். ஒழுக்கம் வாழ்வில் உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரினும் பெரியதாய் மதித்துப் போற்ற வேண்டும் என்று வள்ளுவர் குறளின் வழியே வலியுறுத்துகிறார். ஒருவர் தம் வாழ்வில் நன்மை அடைய வேண்டுமென்றால் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்தல் அவசியமானது. இக்கருத்தையே வள்ளுவர் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்று விளக்குகிறார். நல்லொழுக்கத்தோடு கூடிய உயர்வே நிலைக்கும், தழைக்கும்.
ஒழுக்கக் கல்வி:
பள்ளிப்பருவத்தில் கவனத்துடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளாவிட்டால், வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழ நேரும். நம்மை வழுக்கி விழாமல் தாங்கிப்பிடிக்கும் ஊன்றுகோல் ஒழுக்கமுடையோர் வாய்ச்சொல்லும், நம் தமிழ் நீதி நூல்களும்தான். எந்த நிலையிலும் நமக்கு தீர்க்கமான வழியை அறம் சார்ந்தே போதித்து வழிநடத்தும் வழிகாட்டிகள், நீதிநூல்கள் தான்.
மாணவர்களாகிய நாம், பாடங்களில் கற்கும் நீதிக் கருத்துக்களைத் தேர்வு முடிந்தவுடன் மறந்து விடுதல்கூடாது. மாணவ பருவத்திலேயே ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் மேலும் வளர்த்து, எந்த வித பேதங்களும் இன்றி அனைவரையும் மதிக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்ற நெறிப்படி நடக்க வேண்டும். இதையே வள்ளுவர், “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று அழகாகவும், தெளிவாகவும் உலக மாந்தருக்கு எடுத்துரைக்கிறார்.
மாணவர்களாகிய நாம் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற புறக் கவர்ச்சிகளில் அடிமையாகி நம் வாழ்வை வீணடிக்காமல் உயிரினும் மேலான ஒழுக்கத்தையும், அறிவூட்டும் கல்வியையும் செம்மையாக்கி கற்று, கற்ற நல்நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால் சிறக்கலாம். நெறி தவறாமல் வாழ்ந்து சிறப்போம்! நாட்டின் பெருமை காப்போம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
32. இக்கரைக்கு அக்கரை பச்சை!
அம்மாவுக்கு கவலை, அப்பாவுக்கு கவலை, பெண்ணுக்கு கவலை, பிள்ளைக்கு கவலை, கோடிவீட்டு கோமளா, மாடி வீட்டு மாலதி, எதிர்வீட்டு எத்திராஜ், அடுத்தவீட்டு அங்கு சாமி, பக்கத்துவீட்டு பங்கஜம்மாள், முதல் வீட்டு முத்து சாமி, கடைசி வீட்டு கந்த சாமி – இப்படி எல்லோரும் கவலைக் கடலில் மூழ்கித் தத்தளித்தனர். அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார்.
உங்கள் எல்லோருடைய கவலையையும் போக்கவல்ல ஒரே ஆசாமி, இறைவனே. ஆகையால் பலமாகக் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். ஊர் கூடி தேர் இழுத்தது போல, ஊரே கூடி ப்ராரத்தனை செய்தது. இறைவன் பக்தி வலையில் எளிதில் சிக்குவான். ஆகவே பகதர்களின் பிராத்தனையை செவிமடுத்து ஓடிவந்தான்.
இது என்ன? இவ்வளவு பேரும் கூடிப் பிரார்த்திக்கிறீர்களே! என்ன விஷயம் ?என்றான். எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைத்தனர். எனக்கு இந்தக் கவலை, அந்தக் கவலை என்று மூச்சுவிடாமல் அடுக்கினர்.
இறைவன் சொன்னான், “இதோ பாருங்கள். இது உங்கள் பிராரப்த கர்மம். அனுபவித்தே தீர வேண்டும் ஆனால் ஒரு சலுகை தருகிறேன். இதோ இந்த பெரிய சமவெளியில் உங்கள் கவலைகளை எல்லாம் தூக்கி எறியுங்கள் என்றான். உடனே பக்த கோடிகள் எல்லோரும் கவலைகளை விட்டெறிந்தனர். கவலைகள் மலை அளவுக்கு உருப்பெற்று, இமயமலைக்குப் போட்டியாக கவலை மலை உண்டானது.
கடவுள் சொன்னார், “நல்லது; இப்பொழுது இதிலிருந்து ஏதாவது ஒரு கவலையைப் பொறுக்கி எடுங்கள், பின்னர் வீட்டுக்குப் போகலாம் என்றார். உடனே எல்லோரும் கவலை மலை மீது பாய்ந்து, இதுவரை தான் அனுபவித்த பெரிய கவலையை ஒதுக்கிவிட்டு, ஜாக்கிரதையாக மற்றவனின் கவலையை எடுத்தனர்.
கண்தெரியாதவர், கண்களையுடைய முடவனின் கவலையைப் பெற்றார். குழந்தை இல்லாத மலடி தன், கவலையை விட்டு, குழந்தையுள்ளவளின் கவலையை எடுத்தாள். பணக்காரனின் கவலையை ஏழை எடுத்தான். இப்படி ஒவ்வொருவரும் தனது கவலையை விட்டு மற்றவனின் கவலையுடன் மாற்றுப் போட்டுக் கொண்டனர். எல்லோரும் , “அப்பாடா, இனிமேல் எல்லாம் இன்பமயம்தான், நம் வாழ்வு வளம் பெறும் என்று பெரு மூச்சுவிட்டனர். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
இரண்டே நாட்களில் ஊர் முழுதும், பெரிய முக்கல், முனகல் சப்தம். கடவுளே என்னால் இந்தப் புதிய கவலையைப் பொறுக்கவே முடியாது. பழைய கவலையே பரவாயில்லை. அதுவாவது பழகிப் போய்விட்டது என்று கதறினர்.
மீண்டும் கூட்டுப் பிராரத்தனை. கடவுள் மனமிரங்கி இரண்டாவது முறை தோன்றி, அன்பர்களே, நண்பர்களே! இப்போது என்ன பிரச்சனை? என்றார். எல்லோரும் இக்கரைக்கு அக்கரை பாசை என்று எண்ணி ஏமாந்துவிட்டோம். தயவுசெய்து எங்களுடைய பழைய கவலைகளைத் திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றனர்.
இறைவனும் “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று ஆசீர்வதித்தார்.
இறைவன் எல்லோருக்கும் சரியாகப் படி அளந்துள்ளான். விரலுக்கேற்ற வீக்கத்தையும், ஏழைக்கேற்ற எள்ளுருண்டையையும் கொடுத்திருக்கிறான். அதை விளங்கிக் கொண்டு, ஏற்றுக் கொண்டால் கவலை என்பதே இராது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
33. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை/ நேர்மையின் வலிமை
கணேஷ் மிகவும் சந்தோஷமாக இருந்தான். மனத்தில் ஏற்பட்ட நிறைவை அமைதியாக ஏற்று அனுபவித்தான்.
‘தாயிற் சிறந்த கோவிலும் இல்லை. தந்தைசொல் மிக்க மந்திரமுமில்லை’ என்பது மிகவும் உண்மை என்று உணர்ந்தான்.
மனத்தை பக்குவப்படுத்த தாயின் அன்பும், தந்தையின் அறிவுரைகளும் எத்தனை உதவி புரிகின்றன என்றும் சிந்தித்தான்.
அம்மா லட்சுமி தினமும் அவனுக்கு வீட்டுப் பாடங்களில் உறுதுணையாக இருப்பதுடன், நிலா முற்றத்தில் அமர்ந்து சாதத்தைப் பிசைந்து அவனுக்குக் கொடுத்தபடி, நீதிக்கதைகள் சொல்வாள். அவன் உள்ளத்தைப் பண்படுத்தும் பல தத்துவங்களை அப்பா கூறுவார்.
இருவருமே நேர்வழி தவற விடமாட்டார்கள். நேர்மையின் வலிமையை அடிக்கடி நினைவூட்டுவார்கள். அன்று கடினமான கணக்குத் தேர்வு. தெரியாத பல கணக்குகளைக் கணேஷிற்காகத் தன் ஆசிரியத் தோழியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு வந்து பல பயிற்சிகளை அவனுக்கு அளித்தாள் அம்மா. அவன் கணக்கில் சற்றுப் பலவீனமாக இருந்தான். அதுவே அவனை முதல் நிலைக்குப் போகவிடாமல் தடுத்தது. கணக்கில் முழு மதிப்பெண் பெறும் பிரதாப் தான் எப்போதும் முதல் நிலையில் இருந்தான். அதில் அவனுக்குப் பெருமையும் கூட. சில சமயம் மற்றவர்களை மட்டமாக நினைப்பான், ஏன் கேலியாகப் பேசியதும் உண்டு. கணேஷ் கூட அவன் கேலிப்பேச்சிற்கு ஆளாகி இருக்கிறான்.
இந்தத் தடவை எப்படியாவது முயன்று முழு மதிப்பெண்கள் பெற எண்ணினான் கணேஷ். அதற்காக மிகவும் பாடுபட்டான். மற்ற மாணவர்களும் கணேஷை ஊக்குவித்தனர். பிரதாப்பை வீழ்த்த அறிவுரை கூறினார்கள்.
அம்மா அடிக்கடி வலியுறுத்தினாள். "போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கக் கூடாது. நம் வழியில் நாம் முன்னேற வேண்டும். பிறரின் தீய குணங்களைக் கண்டால் நமக்கு அக்குணங்கள் வராமல் மட்டுமே காத்துக் கொள்ள வேண்டும். பழி வாங்குதல் என்ற தீய எண்ணத்தை எப்போதும் தவிர்க்க வேண்டும்" என்றாள்.
கணேஷ் தேர்வில் மிக நன்றாக எழுதியிருந்தான். முடிவை எதிர் பார்த்திருந்தான்.
இன்று பரீட்சை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. பிரதாப் எப்போதும் போல் சற்றுக் கர்வத்துடனேயே அமர்ந்து இருந்தான். கணேஷ் ஆவலுடன் விடைத்தாளை வாங்கினான். நண்பர்கள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
வகுப்பில் இருவர் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் அறிவித்தார். பிரதாப்பும், கணேஷும்தான் அவர்கள் என்றும் தெரிவித்தார்.
பிரதாப்பிற்குப் புருவம் சற்றே உயர, அமைதியாகப் புன்னகை செய்தான் கணேஷ். நண்பர்கள் தங்கள் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் வெளிப்படுத்தினார்கள்.
ஆசிரியர் வேண்டிக் கொண்டதன் பேரில் ஒவ்வொருவராக எழுந்து தங்கள் மதிப்பெண்களைக் கூறிக் கொண்டு வந்தனர். கணேஷ் முறை வந்ததும், அவன் தயங்கி நின்றான்.
"ஏன் கணேஷ், உன் மார்க்கையும் கூற வேண்டியது தானே?"
"சார்….வந்து….." ஏதோ சொல்ல விழைந்தான் அவன்.
"சொல்லுப்பா………" விடைத்தாளை ஆசிரியரிடம் கொண்டு சென்று விளக்கினான்.
எல்லாம் சரியாக இருந்தாலும் ஒரு சிறிய கணக்கின் விடையை மாற்றி எழுதி விட்டான் கவனக் குறைவில். அதற்காக மதிப்பெண்கள் குறைக்கப்பட்டாலும், சிறு கணக்குகள் பிரிவின் கூட்டலில், அவசரத்தில் மொத்த மதிப்பெண்களையும் ஆசிரியர் தந்துவிட, கண்டு கொண்ட கணேஷின் மனம் ஒப்பவில்லை. இதைச் சுட்டிக் காட்டாமல் விட்டுவிட்டால் அவனும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனாகத்தான் இருப்பான். அம்மா அடிக்கடி நேர்மையைப் பற்றி கூறுவது நினைவுக்கு வந்தது.
"உன் படிப்பைப் போல் உன் நன்னடத்தையும் மிக மிக முக்கியம் கணேஷ்" என்று அப்பா அறிவுறுத்தும் வார்த்தைகளும் செவியில் ஒலித்தன.
ஆசிரியரிடம் பிழையைச் சுட்டிக் காட்டினான். அவர் திருத்தலைச் செய்து மதிப்பெண்ணைக் குறைத்துவிட்டு அவனைத் தட்டிக் கொடுத்தார். அவனுடைய நண்பர்களுக்கோ அளவற்ற வருத்தம். பிரதாப்பிற்கு மீண்டும் குதூகலம், தனக்கு மட்டுமே முதல் மதிப்பெண்ணிற்கான பரிசு கிடைக்கும் என்று. ஆசிரியர் முதல் மதிப்பெண்ணுக்கு பரிசு உண்டென அறிவித்திருந்தார்.
ஆசிரியர் எழுந்தார். "வழக்கம் போல் கணிதத்தில் முதலாவதாக வந்த பிரதாப்பிற்கு என் பாராட்டுக்கள். நீங்களும் முதலில் வர முயல வேண்டும். இதோ அதற்கான பரிசு. பிரதாப் பெற்றுக்கொள்". அழகிய பேனா ஜோடியை அவனுக்குப் பரிசாக அளித்தார்.
"மாணவர்களே, இதோ மற்றொரு பரிசு, கணேஷிற்கும்" எல்லா மாணவர்களும் ஆச்சிரியத்துடன் பார்த்தனர்.
"ஆமாம்! மிகவும் அக்கறையுடன் முயன்று நன்றாக எழுதி முதலிடம் பெற்றாலும், மிகச் சிறிய தவறினால் அதை இழந்து நின்றான் கணேஷ். அவன் நினைத்திருந்தால் என் கவனக்குறைவைப் பயன்படுத்தி முதல் மதிப்பெண்ணைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. நேர்மையைப் பெரிதாக எண்ணியுள்ளான். இது மிகவும் போற்றத்தக்கது. இளம் வயதிலேயே சிறு விஷயத்திலும் நேர்மையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தீர்கள் என்றால், பின்னால் மிக நல்ல மனிதர்களாக உருவாவீர்கள். கணேஷ் மாதிரி நீங்களும் நேர்வழியில் நடக்க முயற்சிக்க வேண்டும். என் நல்வாழ்த்துக்கள் கணேஷ்! வந்து பரிசைப் பெற்றுக்கொள்"
ஆசிரியர் முடித்ததும் பலத்த கைதட்டல்கள். தங்கள் நண்பனை மனமாற வாழ்த்தினார்கள்.
பிரதாப்பிற்கும் மனம் இளகி விட்டது. எத்தனை உயர்ந்தவன் கணேஷ். சிறு விஷயத்திலும், அதுவும் பலத்த போட்டியிலும் நேர்மையே பெரிதாக எண்ணி முதலிடத்தை விட்டுள்ளானே. பலமுறை கணேஷ் செயல் அவனுக்குப் பெரிதாகத் தோன்ற, தான் பெற்ற முதலிடம் அவன் செயலின் முன் சிறிதாகவே தோன்றியது. மனம் மாறிய பிரதாப் கணேஷைப் பாராட்டினான். தன் கேலிச் சொற்களுக்கு மன்னிப்பும் கேட்டான்.
கணேஷை அனைவரும் புகழ்ந்து பேசிக் கொண்டார்கள். சிறிய விஷயம் எனினும் பெருமை பெற்றதாகிவிட்டது அவனின் நற்செய்கை.
வீட்டிற்குச் சென்று பெற்றோர்களிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நினைத்தான். பெற்றோர்களின் அறிவுரைகள் இல்லாவிட்டால் தான் இப்படி நடந்திருக்க முடியாது என்றும் நம்பினான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
34. கெடுவான் கேடு நினைப்பான்.
ஆத்தூர் என்ற ஊரில் ஒரு பள்ளி இருந்தது. சிறு
கிராமமாக இருப்பதால் அங்கு உள்ள பள்ளியில் எட்டாவது வரை
மட்டுமே இருந்தது.அந்தப் பள்ளியில்தான் சேதுவும் தமிழும் படித்து
வந்தனர்.தமிழ் மிகவும் பணிவும் நல்ல பண்பும் மிக்கவனாகத்
திகழ்ந்தான்.ஆனால் சேதுவோ அவனுக்கு நேர் எதிர் பண்புகள்
உள்ளவனாக இருந்தான்.
எப்போதும் ஆத்திரம் அவசரம் கொண்டவனாகவும் சுயநலமிக்கவனாகவும் திகழ்ந்தான்.தன சுய நலத்திற்காகயாரையும் அவன் எதிர்க்கத் தயங்கமாட்டான்.அவனைக் கண்டால் தமிழுக்கு மட்டுமல்ல பல மாணவர்களுக்குப் பயம்.ஆனால் தமிழைக் கண்டால் இளக்காரமாக நடத்துவார்கள். அவன் யாரையும் கடிந்து கூடப் பேசமாட்டான். மிகவும் அன்பாகப் பேசுவான்.
ஒருமுறை நாட்டின் குடியரசு தினம் வந்தது.
அந்த விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று அவ்வூர் பெரிய மனிதர்கள் முடிவெடுத்தார்கள்.அவ்வூரின் பெரிய தனவந்தர் குடியரசு தினத்தன்று பிள்ளைகளுக்குப் பரிசு கொடுப்பதாய் அறிவித்தார்.எல்லோரும் ஒரே ஆவலாக இருந்தனர்.என்ன பரிசு கொடுப்பார்? இத்தனை பேருக்கும் அவர் என்ன பரிசு கொடுக்க முடியும்?என்ற சந்தேகத்தோடு இதுவாக இருக்குமா,அதுவாக இருக்குமா என்றெல்லாம் பேசிக்கொண்டே ஒரு வாரத்தை ஓட்டினர்.
கடைசியாக அந்தநாளும வந்தது அதிகாலையிலேயே எழுந்து குளித்து முதல்நாள் துவைத்து வைத்த சீருடையைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்து முதலாவதாக நின்றுகொண்டான் தமிழ்.அவனுக்குப் பின்னால் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.ஒருவர்பின் ஒருவராக நிற்கத் தொடங்கினர்.
தலைவர் வந்து கொடியேற்றியபின் அனைவரையும் வரிசையாக நிற்கச் சொன்னார் தலைமை ஆசிரியர்.
அனைவரும் வரிசையாக நிற்க பணியாள் பெரிய மூட்டையைக் கொண்டுவந்து தலைவர் அருகே வைத்தான்.அப்போது எங்கிருந்தோ உள்ளேபுகுந்த சேது அதிகாரமாக முதலாவதாக நின்று கொண்டிருந்த தமிழை வரிசையை விட்டுத் தள்ளிவிட்டு தான் போய் நின்று கொண்டான்.அடுத்தடுத்து அவனை நிற்க விடாமல் எல்லோரும் அவனைத் தள்ளி விட்டனர்.தமிழுக்கு இப்போது வரிசையின் கடைசியில்தான் இடம் கிடைத்தது.
தலைவர் இதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.இவர்களுக்குப் புத்தி புகட்ட ஒரு வழியைக் கண்டார்.
அவர் பேசிவிட்டு பரிசு கொடுக்க எண்ணினார்."மாணவ மணிகளே
உங்களுக்கெல்லாம் பரிசு தரவந்துள்ளேன் எப்போதும் எல்லோரும் வரிசையாகத்தான் பரிசு கொடுப்பார்கள் நானும் வரிசையாகத்தான் பரிசளிக்கப் போகிறேன்."என்றவுடன் சேது தனக்குத் தான் முதலில் பரிசு கிடைக்கும் என்று பெருமையாக நின்றான்.தலைவர் தொடர்ந்து பேசினார்."ஆனால் நன் முதலிலிருந்து தரமாட்டேன் கடைசியிலிருந்து பரிசு தரப் போகிறேன்.கடைசிப் பையன் யாரோ வரட்டும்."
தமிழ் எதிர்பாராத அழைப்பால் திகைத்தவன் பின் அவரிடம் சென்று நன்றி ஐயா என்று சொல்லிவிட்டுப் பரிசுடன் சென்றான்.
கடைசியில் கூடை காலியாகிக் கொண்டே வந்தது.சேதுவின் முறை வந்தபோது பெட்டி காலியாகிவிட்டது என்று சொல்லி பரிசு வரும் வரை சற்று நேரம் காத்திரு என்று சொல்லிச் சென்று விட்டார் தலைவர்.தன பரிசுக்காகத் தனிமையில் வெகுநேரம் காத்திருந்தான் சேது. ஒருவழியாக அந்தப் பணியாள் ஒரு பரிசுப் பொட்டனத்தைத் தந்தான். தலைவர் கையால் வாங்காமல் பணியாள் கையால் வாங்குகிறோமே என்று எண்ணி நொந்தபடியே சென்றான் சேது.அப்போது அவன் மனம் இடித்தது. "தமிழுக்கு நீ கெட்டது நினைத்தாய். உனக்கே அந்தக் கேடு வந்தது.இதைத்தான் அந்தக் காலத்தில் "கெடுவான் கேடு நினைப்பான்"என்று சொல்லிவைத்தார்கள் போலும். இனியேனும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருக்கப் பழகு "என்றதை மனவருத்தத்துடன் கேட்டுக் கொண்டான் மனம் திருந்திய சேது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
35. செய்வன திருந்தச் செய்
நீதி: மனசாட்சி
உபநீதி : நேர்மை
பணக்காரர் ஒருவர் சிலை ஒன்றை வாங்க சிற்பியை அணுகினார். அப்போது, சிற்பி கோபுரத்தின் நான்காவது தளத்தில் வைப்பதற்காக அம்மன் சிலை வடித்துக் கொண்டிருந்தார். அந்த சிலையைப் போலவே, மற்றொரு அம்மன் சிலையும் அங்கிருந்ததைப் பணக்காரர் கவனித்தார்.
“ஒரே கோவிலுக்கு இரண்டு அம்மன் சிலைகள் செய்கிறீர்களே…ஏன்?” என்று கேட்டார் பணக்காரர்.
“ஐயா! கவனக்குறைவால் முதலில் செய்த சிலை உடைந்து விட்டது. எனவே இன்னொன்றைச் செய்கிறேன்,” என்றார் சிற்பி.
“இந்தச் சிலையின் மூக்கில் சிறு கீறல் தானே விழுந்திருக்கிறது! நான்காவது கோபுரத்தில் வைக்கப்போகும் இதை யார் கவனிக்கப் போகிறார்கள். இதையே வைத்து விட வேண்டியது தானே!” என்றார் பணக்காரர்.
அதற்கு சிற்பி, “மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் நான் இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், இது கண்ணில் பட்டு என் மனசாட்சி உறுத்துமே,” என்றார் சிற்பி.
நீதி:
எந்தத் தொழிலாயினும் அதை மனசாட்சிக்கு விரோதமின்றி திருப்தியுடன் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல! ஏமாற்றவும் கூடாது…
தொகுத்தவர் தி ---------------------------------------------------------------------------------------------------------------------