மண் வாசனை

மண்ணே
எம்மண்ணே
உன்னை விட்டு பிரிவேனா
உதிரமே வழிந்தாலும் உயிரே பிரிந்தாலும் உன்னை விட்டு எங்கு செல்வேன்.
நீ என் உறவல்லவோ
நீ என் தாயல்லவோ
நீ என் உயிரல்லவோ
காணாமல் போனாலும் என் உயிர் அடங்குவது எம்மண்ணில் தானே
என் வாசம் எங்கிருந்தாலும் என் மண்வாசமும் மனவாசமும் இங்கு தான் என் தாய்மண்ணே.
துன்பம் இன்பம் இங்கு தான்
வலியும் மகிழ்ச்சியும் இங்கு தான்.
ஓடியாடி விளையாடி தடுக்கி விழுந்தால் தாங்கினாய்.
பசியென்று அமருகையிலே உண்ண உணவு தந்தாய்.
சோர்வு நீக்கவே தூங்க இடம் தந்தாய்
எங்கோ செல்கையிலே வாழ வேண்டும் இருப்பிடம் தந்தாய்
எனக்கு எல்லாம் தந்தாய்.
வேரென்ன வேண்டும்.
நான் கேட்காமலே இத்தனை தந்தாய்
உனக்கொரு துன்பம் வருகையிலே விட்டு சென்றுவிடுவேனோ
எம்மண்ணே கை கோர்த்து உனக்காக செய்ய மாட்டேனோ
என் தாய் மண்ணே

எழுதியவர் : பிரகதி (24-Mar-18, 9:55 am)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : man vasanai
பார்வை : 1791

மேலே