அழகு தமிழ்
தமிழே நீ அழகு
நானறிந்த மொழிகளில்
நீ அழகு மொழி -ஏனெனில்
அழகன் முருகன்
தந்த மொழியல்லவோ நீ
உனக்கு அமுதென்றும் பெயர்
என்றார் புலவர் பெருமானோருவர்
என்னவள் பெயர் 'அமுதா' அதை
நான் மாற்றி' தமிழ்' என்று அவளை
அழைத்தேன் -ஏனென்றால் அவள்,
என்னவள், அழகி;
அழகும் தமிழும் ஒன்று
அதனால் 'தமிழ்' என்று அழைத்தேன்
அவளை , தமிழ் தான் எனக்கழகு,
என் கண்களுக்கும்,வாக்கிற்கும்
மனதிற்கும் என்றும்.