பூங்குழலி - பகுதி 2

'பூ' தலைமை ஆசிரியர் அறைக்கு செல்ல அனுமதி பெற்று கொண்டு உள்ளே நுழைந்தாள், அங்கே தலைமை ஆசிரியருடன் ஒரு புது நபர் இருப்பதை கண்டு சற்று அச்சம் கொண்டாள்.

தலைமை ஆசிரியர்: வாம்மா பூங்குழலி, உட்காரு!
பூ: பரவாஇல்லை அய்யா என்றாள் தயக்கத்துடன்.

தலைமை ஆசிரியர் அந்த புது நபரிடம், இவள் தான் பூங்குழலி பள்ளியிலேயே முதல் மாணவி.
இந்த ஆண்டு இவள் மாநிலத்தில் முதலாவதாக வந்து பள்ளிக்கு பெருமை சேர்ப்பாள் என்ற நம்புகிறோம்.

'பூ'விற்கு ஒரே குழப்பமாக இருந்தது, தன்னை ஆசிரியர் திட்ட போகிறார் என்று நினைத்தால் யாரோ அறிமுகம் இல்லாத நபரிடம் பெருமை பாராட்டி கொண்டு இருக்கிறார் என்று சிந்தித்து கொண்டு இருந்தவளை நோக்கி தலைமை ஆசிரியர், 'பூ' இவர் தான் நம் வேளாண்மை துறை கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி என்று அறிமுகப்படுத்தினார்.

பூ, அவரை நோக்கி ஒரு வணக்கம் வைத்தாள் சிந்தித்து கொண்டே ஏன் இவரை நம்மிடம் அறிமுக படுத்துகிறார்கள்.

மேலும், அவளிடம் இன்று பரீட்சை முடிந்தவுடன் இவர் வேளாண்மையை பற்றி சிறு உரையாடல் நடத்த போகிறார். அதற்க்கான அனைத்து வேலை பாடுகளையும் நீ தான் முன்னின்று செய்ய வேண்டும் அது மட்டுமில்லாமல் பரீட்சை முடிந்தவுடன் உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. அந்த இன்ப அதிர்ச்சி என்னவென்று அறிய ஆவலாய் இருக்கிறதா...? என்று கேள்வி எழுப்பினார்.

பூ ஒன்னும் புரியாமல் விழித்தாள்...!!!

ஆசிரியர், அதை தெரிய ஆவலாய் இருக்கிறாய் என்றால் நீ இந்த வருடம் மாநிலத்திலேயே முதலாவதை வருவாய் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடு என்றார் புன்முறுவலுடன்.

அவளும் சரி ஐயா என்று சொல்லி விடை பெற்று கொண்டாள்.

அவள் தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வெளியில் வருவதற்கும் பரீட்சை நேரத்திற்கான முதல் எச்சரிக்கை ஒளி அடிக்கவும் சரியாக இருந்தது.

மேலும் சிந்திக்காமல் ஆசிரியர்க்கு கொடுத்த வாக்குறுதியை மனதில் கொண்டு விருப்பமே இல்லாமல் பரீட்சை அறைக்குள் நுழைந்தாள்... அங்கு வேணி அவளை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்..!!!

பூவும் உள்ளே என்ன நடந்தது என்று வெளிக்காட்டாதபடி வாயை கோணிக்கொண்டே போயி உட்கார்ந்தாள்.

வெகுநேரம் நடந்ததை சிந்திக்காமல் பரீட்சை தாள் கொடுத்தவுடன் கவனத்தை பரீட்சை தாளில் செலுத்தினாள்.

பரீட்சை நன்றாகவும் எழுதினால் எதிர் பார்ப்பை விட. தேர்வு அறையை விட்டு வெளியே வந்தவுடன் தலைமை ஆசிரியர் சொன்னது போலவே அங்கிருக்கும் ஆசிரியர்களுடன் உதவியுடன் வேளாண்மை உரையாடலுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் கவனத்துடன் செய்து முடித்தாள்.

தலைமை ஆசிரியர் அனைத்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒன்று கூட சொல்லி
வேளாண்மை தலைமை நிர்வாக அதிகாரியை அறிமுக படுத்தினார். பூவிற்கு ஒரே ஆர்வம் என்ன தான் சொல்ல போகிறார் இந்த பெரிய மனிதர் என்று காத்து கொண்டிருந்தாள்.

வேளாண்மை தலைமை நிர்வாக அதிகாரி மேடையில் அவர் வந்திருக்கும் நோக்கத்தையும் அதனால் மாணவர்களுக்கும் இந்த சமுதாயத்துக்கும் கிடைக்க போகும் நன்மையை விவரிக்க ஆரம்பித்தார்.

அவர் பேச பேச பூவின் கண்கள் விரிய ஆரம்பித்தது அதுமட்டும் இல்லாமல் அவள் மனதிற்குள் பல கேள்விக்கணைகள். தான் ஆர்வப்படும் விவசாய படிப்பை படிப்பதற்கான பாதையை அறிந்துகொண்டாலும், படிப்பதற்கான பணஉதவிக்கு எங்கே செல்வது என்று பரிதாபத்துடன் விழித்து கொண்டிருந்தாள்.

இந்த படிப்பை முடித்தால் விவசாய முன்னேற்றம் மட்டுமில்லாமல் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அரசாங்க வேலைகளும் வேளாண்மை துறையில் கிடைக்கும் என்று முடிவுரை ஆற்றினார்.

வேளாண்மை தலைமை நிர்வாக அதிகாரி பேசி முடித்தவுடன் பள்ளி தலைமை ஆசிரியர் பேச தொடங்கினார், இதனால் நம் பள்ளிக்கு என்ன பயன் என்று அனைவரும் யோசிப்பீர்கள். இந்த வருட பரிட்சையில் பள்ளியில் முதல் பத்து மதிப்பெண்களுக்குள் வருபவர்களுக்கு இவர்களது நிர்வாகம் குறைந்த கட்டணத்துடன் கல்வி செலவை ஏற்றுக்கொள்ளும் அது மட்டுமின்றி மாநிலத்தில் முதலாவதாக வரப்போகும் மாணவருக்கு இலவச கல்வி கொடுத்து அரசாங்க உத்தியோகமும் வாங்கி தர பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்று முடித்தார்.

பூவின் விழிகளில் இருந்து ஆனந்த கண்ணீர் எட்டி பார்த்தது.

பள்ளி தலைமை ஆசிரியர்க்கு தன் விழிகளால் நன்றி தெரிவித்தாள்!!!!

சில மாதம் கழித்து, அவள் எதிர் பார்த்து கொண்டிருந்தது போல தேர்வு முடிவுகளின் வெளியீட்டில் மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக வந்திருந்தாள். வெற்றியின் விழும்பில் அவளுக்கு அனைத்து கல்வி துறைகளிலும் இலவச கல்வி படிப்பு தொடர வாய்ப்புகள் குவிந்தது.

எல்லாவற்றையும் நிராகரித்து தான் ஆசை பட்டபடி வேளாண்மை துறை படிப்பை பள்ளி தலைமை ஆசிரியர் உதவியுடன் பெற்றுக்கொண்டாள்.

அதன் பிறகு என்ன, அவள் படித்து முடித்த கையோடு அரசாங்க உத்தியோகத்தை பெற்று நினைத்தது போல பத்து ஏக்கர் நிலத்தையும் பசுமை நிலமாக மாற்றினாள் பண்ணையார் வீட்டு நிலம் போல.

இதெல்லாம் கனவா இல்லை நினைவா என்று ஆனந்த கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தவளின் தோள்களை அனைத்து யாரோ நினைவுதான் என்று கூறியதை உணர்ந்து திடுக்கிட்டு எதிர்நோக்கினால்... :-)

அது வேறு யாரும் இல்லை, பண்ணையார் வீட்டு இளவரசன். அன்று வேணியும் பூவும் பேசி கொண்டு போனதை பின் தொடர்ந்து கேட்டு கொண்டே சென்றவன். கேட்டதுடன் இல்லாமல் தான் பயிலும் வேளாண்மை துறை கல்லூரியின் அதிகாரியை சந்தித்து தன் ஊர் பள்ளிக்கு வந்து இந்த படிப்பின் விழிப்புணர்வை பகிர்ந்து கொள்ளும் படி வேண்டிக்கொண்டான்.

அன்றிலிருந்து இன்று வரை "பூ"வை மெளனமாக காதலித்து இன்று இரு வீட்டார் அனுமதியையும் பெற்று கொண்டு "பூ"வை காண வந்தான் காதல் சிரிப்புடன்.

"பூ" விற்கு மேலும் ஆனந்த கண்ணீர் பொங்கி வர தன் விரல்களால் துடைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். இருவரின் திருமணமும் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரின் ஆசிர்வாதத்தோடு இரு வீட்டார் முன்னிலையிலும் அந்த ஊரே வியக்கும்படி கெட்டி மேளம் கொட்டியது.

விண்வெளியில் கால் பதிப்பது மட்டும் பெருமையல்ல தாய் மன்னில் கால் பதித்து வயல் வெளியில் வேர்வை சிந்தி உழைப்பதும் பெருமைதான்.

தாய் மண்ணில் கால் பதிப்போம், உழைப்போம், உயர்வோம், பூமி மாதாவை பசுமையாக்குவோம்....!!!!!!!

எழுதியவர் : ஷர்மிளா தேவி G (24-Mar-18, 3:13 pm)
பார்வை : 197

மேலே