புகுந்த வீடு

இலக்கியாவிற்கு திருமணமாகி இன்றோடு ஒரு வாரமாகி இருந்தது..சிட்டி மாப்பிள்ளை...புது ஊர்..புது வீடு...புது மனிதர்கள்... எல்லாமே புதிதாய் இருந்தது அவளுக்கு...மனம் சந்தோஷப் படுகிறதா.. சங்கட படுகிறதா.. எதுவுமே அவளுக்கு புரியவில்லை..திருமணம் முடிந்து அவளுடன் தங்கியிருந்த ஒன்று இரண்டு உறவுகளும் ஊருக்கு கிளம்பி விட்டார்கள்...கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவளுக்கு இந்த நகர வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது என மனதில் பெரும் போராட்டம் நடந்தது...
"இலக்கியா..."மாமியார் கூப்பிடும் குரல்...
"சொல்லுங்க அத்த..." என்றாள் இலக்கியா...
"ம்மா..இன்னைக்கு நல்ல நாளா இருக்கு..நீதான் நல்லா சமைப்பேன்னு சொன்னியே.. இன்னைக்கு லன்ச் செஞ்சுடும்மா..."என்றாள்.
"சரிங்க அத்த..."
"அப்புறம் நம்ம வீட்ல முதன்முதல்ல சமைக்குற...சாம்பார் வடை பாயசம் வச்சிடும்மா.." என்றாள்..
"ஓ.கே அத்த..."
சமையல் இலக்கியாவிற்கு கைவந்த கலை...பிரிட்ஜை திறந்தாள்..தேவையான காய்கறிகளை எடுத்தாள்..அதனை சிங்கில் இரண்டு மூன்று முறை கழுவினாள்.
இதனை கவனித்துக் கொண்டிருந்த மாமியார்...
"இலக்கியா..சொல்றேன்னு கோவிச்சுக்காத..இங்க தண்ணி கஷ்டம்..காய் கழுவ நீ இவ்ளோ தண்ணிய வேஸ்ட் பண்ண கூடாது. தண்ணிய சிக்கனமா பயன்படுத்து.." என்றாள்...
"சாரி அத்த...இனி தண்ணிய சிக்கனமா பயன்படுத்துறேன்..." என்றாள்.
காய்கறியை எடுத்துக்கொண்டு அரிய அமர்ந்தவளுக்கு அம்மா சொன்ன அட்வைஸ் மனதுக்குள் வந்து போனது..
" இலக்கியா போற இடத்துல எந்த வேலையும் சுத்தமா செய்யனும்..காய் கழுவினா கூட இரண்டு மூணு தடவ நல்லா கழுவு... பட்டணத்துல இருக்குறவங்க ரொம்ப சுத்தமா இருப்பாங்க..."
"இன்சன்ட் அம்மா..." என மனதில் நினைத்துக்கொண்டு... காய்களை அரிய ஆரம்பித்தாள் இலக்கியா.

எழுதியவர் : தேவி நரேஷ்குமார் (24-Mar-18, 1:08 pm)
சேர்த்தது : தேவி நரேஷ்குமார்
Tanglish : pukuntha veedu
பார்வை : 292

மேலே