புகைப்பட நினைவுகள்

புகைப்பட .நினைவுகள்
புகையாய் எழும்பி
மனதின் நினைவுகள்
தட்டி எழுப்பி,
அன்றைய நிகழ்வுகள்
நினைவில்
இவைகள் எதுவுமே திரும்ப
வராது அழுத்தும்
நிஜம் !
விழிகளின்
ஓரத்தில் கோர்த்து நிற்கும்
கண்ணீர் !
நம்முடன் இருந்து
பின் இல்லாமல் இருப்பவர்கள்
இருந்தும் பிரிந்தவர்கள் !
எதிரில் சலனமில்லாமல் !
தடவி பார்த்து மகிழ்கிறேன்
இளமை கால புகைப்படங்களை
கண்களில் கண்ணீருடன் !