சிறார்

அந்தி மாலைச் சூரியனும்
அடிவானம் தொடும் வேளை
அது விளைநிலமும் விளைச்சலின்
களைப்பு தீர்க்க ஒய்வுவினில்
அதுவும் ஒய்வு என்பதே
அறியயொரு சிறார் கூட்டம்
சிறுப் பறவை கூட்டமென
வந்து இமைப் பொழுதில்
வட்டமிட்டு புழுதியை புயலென
கிளப்பி ஆடும் ஆட்டமதன்
அழகில் எந்தன் கண்கள்
வியப்பில் ஆழ நேரமும்
கழிய எனை சூழ்ந்த
இருளை மறந்த நானும்.....!