உனக்காக காத்திருக்கிறேன்
பெண்ணே
கணவனாய் நான்
உன் கைகளை கோர்த்து
நான் செல்லாத இடமெல்லாம்
உன்னுடன் நான் செல்ல ,
என் கவலையெல்லாம் மறக்க
உன் மடியில் நான் படுத்து உறங்கி
உன் முகம் பார்த்து தினம் எழ ,
உன் இதழ்களின் முத்தத்தில்
நான் என்னை மறக்க ,
என் துன்பமெல்லாம் மறைய
இன்பம் என் வீடெல்லாம் நிறைய ,
ஒருநாள் நீ வருவாய் என
காத்திருப்பேனே ...
நான் காத்துக் கொண்டிருப்பேன் என்று
சொன்னதால் என்னவோ
நீ என்னை நீண்ட நாட்களாக
காக்க வைக்கிறாய் !
ஆனாலும் பெண்ணே
என் உடல் , பொருள் , ஆவி
அனைத்தையும் மறந்து
உன்னை மட்டுமே நினைத்து
காதல் செய்வேனே ...