என் தலையணை
என் கண்ணீரை
நீ அறிவாய் !
பிதற்றல்களை இவன் ஓர் பைத்தியமென எவரிடமும்
சொல்லவில்லை...
ஞானப்பார்வை இல்லாத
என் மடமைகளையும்
நீ கேட்டு கொண்டாய்...
லெளகீக வாழ்வில்
ஓர் குப்பை
இவன் என
நீ எண்ணவில்லை...
நாளெல்லாம் சப்பத்தின்
சிறையில் சிக்குண்டு
கிடக்கும் எனக்கு
நிசப்தம் தந்து
உறங்கவைக்கிராய்...
உண்மையிலேயே
நீ ஒரு உற்ற தோழமைதான்...