ஓட்டைக்குடம்

எதையாவது நினைந்து
தவிக்கிறது..
அதுவா?இதுவா?
என தாவுகிறது..
கிடைக்காததை எண்ணி
புலம்புகிறது...
கிடைத்துவிட்ட பின்
ச்சீ..என சலிக்கிறது..
அற்பங்களுக்கும்
அஞ்சுகிறது...
சமயத்தில் என்னிடம்
கெஞ்சவும் செய்கிறது...
எவ்வளவு ஊற்றினாலும்
நிறையாத
ஓட்டைக்குடம்!
இந்த மனது...

எழுதியவர் : சுரேஷ் குமார் (26-Mar-18, 1:17 am)
பார்வை : 183

மேலே